ஐரோப்பியர்களின் வருகை-ஒரு அறிமுகம்

ஐரோப்பியர்களின் வருகை


          கிபி 1453 இல் துருக்கியர்க்ளால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான  நிலவழி மூடப்பட்டது.துருக்கி வட ஆப்பிரிக்காவிலும் பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது.இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப்புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத்தூண்டியது.

போர்ச்சுக்கல்

            ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் போர்ச்சுகல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக மாலுமி  ஹென்றி என அறியப்படுகிறார் .1487 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்.மன்னர் இரண்டாம் ஜான் அவரை ஆதரித்தார்.

வாஸ்கோடகாமா

               வாஸ்கோடகாமா தெனாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, மொசாம்பிக்பின்னர் இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கிபி 1498 இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்றார். இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் 1500 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்தார்.வாஸ்கோடகாமா 1501 இல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்போது அண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை ,கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார்.கொச்சின் போர்ச்சுக்கீசிய  கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமானது. 1524 வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1520இல்  கொச்சியில் காலமானார்.

பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா (1505_1509)

            இவர் இந்தியாவில் இருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505 இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார் . குஜராத் மற்றும் பீஜப்பூர் சுல்தான்கள் போர்ச்சுக்கீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள்போர்ச்சுக்கீசியரைத் தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான். பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா,முஸ்லீம் கூட்டுப் படைகளை தோற்கடித்தார். கிபி1509இல்  போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையை கோரினர். 

 அல்போன்சா டி அல்புகர்க் (1509_1515)

             இந்தியாவின் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சா டி அல்புகர்க் ஆவார்.அவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510 இல் கோவாவை கைப்பற்றினார். 1515 இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ்  துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார். அல்போன்சா டி அல்புகர்க் இந்திய பெண்களுடனான போர்ச்சுக்கீசிய திருமணங்களை ஊக்குவித்தார். மேலும் விஜயநகரப் பேரரசு உடன் நட்புறவை மேற்கொண்டார்.

நினோ டி குன்கா (1528_1538)

            அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான நினோ டி குன்கா 1530 இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.1534 இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடம் இருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் 1537 ல் டையூவைக் கைப்பற்றினார் .பின்னர் குஜராத்தின் உள்ளூர் தலைவர்களிடம் இருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548இல் ஆக்கிரமித்தார்.வங்காள கடற்கரையில் ஹூக்ளி ,சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர்.போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினார்.1556 இல் போர்ச்சுக்கீசியரால்  கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563 இல் கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள் ' என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய அதிகாரம் படிப்படியாக டச்சு வீழ்ச்சியடைந்தது.மேலும் கோவா,டையூ,டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.

 டச்சுகாரர்கள்

            போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர் . டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினம் என்ற இடத்தில் நிறுவினர். பின்னர் கிபி 1605 இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேஷியா தீவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். ஆரம்பத்தில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் 1690 இல் பழவேற்காட்டில் இருந்து தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக்கொண்டனர். இந்திய பொருட்களான பட்டு ,பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி, கருப்புமிளகு ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்கள் ஆகும்.1759 இல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.

 ஆங்கிலேயர்கள்

            இங்கிலாந்து ராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு  1600 டிசம்பர் 31 அன்று ஒரு அனுமதிப்பட்டயம் வழங்கினார். அந்த நிறுவனம் ஒரு கவர்னர் மற்றும் 24 இயக்குநர்களை கொண்டிருந்தது. 1608 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகளைப் பெற அனுப்பிவைக்கப்பட்டார். அவர் சூரத் நகரில் ஒரு வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் போர்த்துகீசிய தலையீட்டால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை.1615 ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.அவர்  ஆக்ராவில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார் .மூன்றாம் ஆண்டு இறுதியில் பேரரசர் ஜஹாங்கீர் இடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார். உரிமையைப் பெற்ற சர் தாமஸ் ரோ புறப்படும் முன் ஆக்ரா ,அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

            1639 இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராஸை குத்தகைக்கு பெற்றார். அங்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும். தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும் கிழக்குப்பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்துகொண்டார். திருமண சீராக பம்பாய் தீவை போர்ச்சுக்கீசிய மன்னரிடம் இருந்து பெற்றார்.சுதான்நுதி 1690 ஆம் ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது. சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை 1698 இல் கிழக்கிந்திய கம்பெனி பெற்றது. இந்த மூன்று கிராமங்கள் பின்னாளில் கல்கத்தா நகரமாக வளர்ச்சி பெற்றது .1696 இல் சுதான்நுதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது .அது 1700 இல் வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது

             1757 இல் பிளாசி போர் மற்றும் 1764 இல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கில கிழக்கிந்தியக்கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது .இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது .1858 க்குப் பிறகு இந்தியா ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

 டேனியர்கள்

            டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17 இல் ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார். அவர்கள் 1620 இல் தரங்கம்பாடி ,1676 இல் செராம்பூர் ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர். செராம்பூர்டேனியர்களின் இந்திய தலைமை இடமாக இருந்தது .டேனியர்கள்  இந்தியாவில் தங்களைப்பலப்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர். எனவே 1845 இல் டேனியர்கள் இந்தியாவிலிருந்து தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர்.

 பிரஞ்சுக்காரர்கள்

            பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ,மன்னர் பதினான்காம் லூயி அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664 இல் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் பிரஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் சூரத் நகரில் நிறுவினார்.1669 மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சுக் குடியேற்றம் ஆனது பாண்டிச்சேரியில் செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மார்ட்டின் கட்டினார்.1842 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப்  பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார் அவரது நியமனத்தின் மூலம் அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது அவருக்குப் பின்னர் பாண்டிச்சேரியின் ஆளுநராக டூமாஸ் அனுப்பப்பட்டார்.

 முடிவுரை

            போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்களால் முறியடிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேயர்களால் வெளியேற்றப்பட்டனர். அதன் பின் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதிக்கப் போட்டியில் ஆங்கிலேயரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரஞ்சுக்காரர்கள் வர்த்தகத்தை புறக்கணித்து இந்தியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் போரில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஆங்கிலேயருடன் நடைபெற்ற மூன்று கர்நாடக போர்களும் பிரான்சை வலுவடையச் செய்தன இது ஆங்கிலேயர் இந்திய விரிவாக்கத்திற்கு புத்தெழுச்சியை கொடுத்தது.

TO ATTEND QUIZ



 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post