சிறுவன் நரேன்
கொல்கத்தா நகரம். ஓர் இளைஞன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று ஏதோ ஒரு பெரும் ஓசை. அந்தத் திசை நோக்கித் திரும்பினான் அவன். என்ன நடந்தது அங்கே? ஒரு குதிரை வண்டி வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. எதையோ கண்டு மிரண்ட குதிரை, தலைதெறிக்க ஒடிக்கொண்டிருந்தது. வண்டியில் அமர்ந்திருந்த பெண், குதிரையைவிட அதிகம் மிரண்டிருந்தாள். எந்த நிமிஷமும் வண்டி குடை சாயலாம். அந்தப் பெண்ணுக்கும் ஆபத்து நேரலாம். யாராலும் அவளுக்கு உதவ முடியவில்லை.
இளைஞன் ஒரு கணத்தில் நிலைமையை உணர்ந்தான். குதிரை அவனருகில் வந்தபோது அதை நோக்கிப் பாய்ந்தான். கடிவாளத்தை எட்டிப் பிடித்தான். தீரத்துடன், தன்னுயிரைப்பற்றி நினைக்காமல் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருந்த குதிரையை அடக்கிக் கட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பெண் கண் கலங்கி அந்த இளைஞனுக்கு நன்றி கூறினாள்.
யார் அந்த இளைஞன்? பின்னாளில் சுவாமி விவேகானந்தராக உலகப்புகழ் பெற்ற நரேந்திரன்தான் அவர்.
நரேந்திரன் கொல்கத்தாவில் சிம்லா பகுதியில் வசித்த பிரபல தத்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது தந்தை விசுவநாத தத்தர் ஒரு பிரபல வழக்கறிஞர்; நன்கு படித்தவர்; எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவருடைய மனைவி புவனேசுவரி தேவி தோற்றத்திலும் நடத்தையிலும் ஒரு மகாராணியைப்போல் விளங்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டவர்; பெரிதும் மதிக்கப்பட்டவர்.
1863 ஜனவரி 12-ஆம் நாள் அவர்களுடைய முதல் மகன் பிறந்தான்.அவனுக்கு நரேந்திர நாதி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.
நரேன்! அப்பப்பா, படு விஷமக்காரன். சில சமயங்களில் புவனேசுவரி தேவியால் அவனை அடக்கவே முடியாது. நரேன் இவ்வாறு ஓடி ஆடிக் கட்டுக்கு அடங்காமல் விஷமம் செய்யும்போது எப்படியாவது அவனைப் பிடித்து உச்சந்தலையில் குளிர்ந்த நீரை ஊற்றி, 'சிவ, சிவ என்று அவன் காதுகளில் ஓதினால் அடங்விடுவான். சில சமயங்களில் இப்படிச் செய்துதான் புவனேசுவரி வழிக்குக் கொண்டுவருவார். அவனை
சிறுவன் நரேன் தன் தாயிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான். புவனேசுவரி தேவி ராமாயணத்திலிருதும், மகாபாரதத்திலிருந்தும் பல கதைகளை அவனுக்குக் கூறுவார். ஸ்ரீராமரின் கதை நரேனுக்கு மிகவும் பிடிக்கும். அழகிய ராமர்-சீதை பொம்மை ஒன்றை வாங்கி, அதற்கு மலரிட்டு வழிபட்டு வந்தான் அவன். யாராவது ராமாயணம் படித்தாய் அதை விரும்பிக் கேட்பான். வாழைத் தோப்பு ஹனுமானுக்குப் பிடித்த இடம் என்று யாரோ கூறியதைக் கேட்ட அவள் ஒருமுறை ஹனுமானைக் காண வேண்டும். என்ற ஆவலில் வாழைத் தோப்பு ஒன்றில் தீண்டநேரம் காத்திருந்தான்,
நரேனுக்குத் தியானம் செய்வது மிகவும் பிடித்த விளையாட்டு. இரண்டொரு நண்பர்களுடன் ஒரு தனிமையான இடத்தில் ராமர்-சீதை அல்லது சிவ மூர்த்தியின் எதிரில் அமர்வான். கண்களை மூடி அந்தக் கடவுளைத் தியானிப்பான். இறைவனைப் பற்றிய நினைவுகளிலே மெய் மறந்து விடுவான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.
ஒருமுறை நரேன் இவ்வாறு தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பாம்பு தரையில் ஊர்ந்து வந்தது. பயந்துபோன மற்ற சிறுவர்கள் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். கூச்சலிட்டு நரேனையும் எழுந்து வரும்படி அழைத்தனர். ஆனால் நரேன் அசையவே இல்லை. தான் இருந்த நிலையில் அப்படியே இருந்தான், சிறிது நேரம் கழித்துப் பாம்பு தான் வந்த வழியே சென்றுவிட்டது. பாம்பு வந்த போது என் எழுந்திருக்கவில்லை என்று பெற்றோர் கேட்டதற்கு, 'பாம்பா, அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே! நான் ஆனத்தமாகத் தியானம் செய்துகொண் டிருந்தேன்' என்றான்.
நரேனின் வீட்டுக்குப் பல சாதுக்களும் துறவிகளும் வருவதுண்டு. அவன் சில சமயம் வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருள்களை எடுத்துச் சாதுக்களுக்குக் கொடுத்து விடுவான். ஒருமுறை தான் கட்டி யிருந்த புதுத்துண்டையே ஒரு சாதுவுக்குக் கொடுத்துவிட்டான் என்றால் பாருங் களேன்! அதன்பிறகு சாதுக்கள் வரும் போதெல்லாம் அவன் வீட்டினர் அவனை அறை ஒன்றில் பூட்டி விடுவது வழக்கம். அப்படி இருந்தும் அவன் ஜன்னல் வழி யாகப் பொருள்களை அவர்களிடம் வீசி விடுவான். 'நானும் துறவியாகப் போகிறேன்" என்றும் சில சமயங்களில் கூறுவான். தரேவீன் தந்தை ஒரு வழக்கறிஞர். அல்லலார் அவளரக் காணப் பலர் வருவ துண்டு, தரேன் அவர்களிடம் நன்கு கலந்து பேசி அவர்களை மகிழ்விப்பான். வங்காள வழக்கப்படி அவர்களுக்குப் புகையிலை அல்லது புகையிடிக்க ஹுக்கா தயாரித்துக் கொடுப்பான். அங்குப் பல்வேறு சாதியினருக்கென்று தனித்தனிப் புகை பிடிக் கும் குழாய்கள் இருந்தன. 'சாதி' என்பது நரேனுக்கு ஒரு புதிராக இருந்தது. ஏன் ஒரு சாதியைச் சேர்ந்தவர், மற்ற சாதியின ரோடு அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப் படுவதில்லை. ? ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனியாக ஏன் புகைபிடிக்கும் குழாய்? முஸ்லீம்களுக்கு எனத் தனியே ஒரு குழா யும் இருந்தது. ஒரு சாதியினருக்காக வைத்திருந்த குழாயில் வேறு சாதியினர் புகை பிடித்தால் குழாய் வெடித்து விடுமா? கூரை சாய்ந்து விழுந்துவிடுமா? என்றெல் லாம் நரேனின் மனதில் கேள்விகள் எழும். இதைச் சோதித்து அறிய நினைத்த அவள் எல்லாக் குழாய்களின் மூலமும் ஒருமுறை புகையிழுத்துப் பார்த்தான். ஒன்றும் ஆகவில்லை. அப்போது அங்கு வந்த விசுவநாத தத்தர், 'என்னப்பா செய் கிறாய்?' என்று கேட்டார். 'ஒன்றுமில்லை. சாதிப் பிரிவினைகளை உடைத்தால் என்ன வாகும் என்று பார்த்தேன்' என்றான். தந்தை சிரித்துக் கொண்டே அறைக்குச் சென்றார்.