8 ஆம் வகுப்பு
அலகு-2 விசையும்
அழுத்தமும்
1. தள்ளுதல் அல்லது இழுத்தல் மூலமாக பொருட்களை
இயங்க வைப்பது?
A.பரப்பு
B.அழுத்தம்
C.விசை
D.அனைத்தும் சரி
2. எண்மதிப்பும் ,திசையும்
இருப்பதால் விசை ஒரு___________ஆகும்.
A.எண்ணளவு
B.திசையிலி அளவு
C.வெக்டர் அளவு
D.ஸ்கேலார் அளவு
3. விசையின் அலகு என்ன?
A.பாஸ்கல்
B.நியூட்டன்
C.ஜூல்
D.வாட்
4. விசையின் விளைவானது எதனைச் சார்ந்தது?
A.விசையின் எண்
மதிப்பையும்,
B.திசையையும்
C.விசையின் எண்
மதிப்பை , விசை அது செயல்படும் பரப்பை
D.மேற்கண்ட அனைத்தும் சரி
5. எந்த ஒரு பொருளின் புறப்பரப்ப்பிற்கும்
செங்குத்தாக செயல்படும் விசை?
A.உந்துவிசை
B.பரப்பு இழுவிசை
C.உராய்வு விசை
D.திருப்பு விசை
6. விசையின் விளைவை அளக்க பயன்படும் அளவு எது?
A.பரப்பு இழுவிசை
B.அழுத்தம்
C.பாரோமீட்டர்
D.மானோ மீட்டர்
7. அழுத்தத்தின் அலகு என்ன?
A.பாஸ்கல்
B.நியூட்டன்
C.மோல்
D.அனைத்தும் தவறு
8. அழுத்தத்தின் சமன்பாடு?
A.P=A/F
B.P=F×d
C.P=F/A
D.P=F×A
9. ஒரு பொருளின் மீது அழுத்தத்தை அதிகரிக்க?
A.பொருளின் மீது
செயல்படும் பரப்பு அதிகரிக்க வேண்டும்.
B.பொருளின் மீது
செயல்படும் உராய்வு விசையை அதிகரிக்க வேண்டும்
C.பொருளின் மீது
செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும்
D.அனைத்தும் சரி
10. கனரக சரக்கு வாகனங்களில் அதிக சக்கரங்கள்
இணைக்கப்பட காரணம் என்ன?
A.அழுத்தத்தை
அதிகரிக்கவும் ,தொடு பரப்பை குறைக்கவும்
B.அழுத்தத்தை
குறைக்கவும், ,தொடு பரப்பை அதிகரிக்கவும்
C.இரண்டும் சரி
D.இரண்டும் தவறு
11. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி எது?
A.மானோ மீட்டர்
B.பாரோமீட்டர்
C.ஃபாரன்ஹீட்
D.ஓடோமீட்டர்
12. பாரோமீட்டர் கண்டறிந்தவர் யார்?
A.கூலும்
B.பிளேஸ் பாஸ்கல்
C.டாரிசெல்லி
D.ஜாக் பென்னி
13. உயரமான மலைப்பகுதிகளில் நீரின் கொதிநிலை
எவ்வளவு?
A.100
டிகிரி செல்சியஸ்
B.80 டிகிரி செல்சியஸ்
C.90 டிகிரி செல்சியஸ்
D.60 டிகிரி செல்சியஸ்
14. கடல் நீர் மட்டத்தில் உள்ள குழாயில் உள்ள
பாதரசத்தின் உயரம் எவ்வளவு?
A.67 செ.மீ
B.84 செ.மீ
C.90 செ.மீ
D.76 செமீ
15.1 வளிமண்டல அழுத்தம்=__________
A.1.01×
10^4
B.1.01×
10^5
C.1.01×
10^8
D.1.01× 10^2
16. Sl அலகு முறையில் 1 atm= _____?
A.1,00,00
பாஸ்கல்
B.1,00,000
பாஸ்கல்
C.1,000,000
பாஸ்கல்
D.1,00,000,00 பாஸ்கல்
17. வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு?
A.பாயில்
B.நியூட்டன்/மீ^2
C.பாஸ்கல்
D.B மற்றும் C சரி
18. பாய்மங்கள் எனப்படுவது?
A.திரவங்கள் மற்றும்
வாயுக்கள்
B.திட மற்றும்
திரவங்கள்
C.திட மற்றும்
வாயுக்கள்
D.அனைத்தும் சரி
19.ஒரு பொருள் மிதப்பது ,மூழ்குவது தீர்மானிப்பது எது?
A.கீழ்நோக்கு விசை
B.உந்துவிசை
C.மேல் நோக்கு விசை
D.எதிர் விசை
20. திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய
உதவும் கருவி எது?
A.பாரோமீட்டர்
B.மானோ மீட்டர்
C.ஒளிமானி
D.வெப்பநிலைமானி
21. ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் திரவங்களின் அழுத்தம்
எவ்வாறு இருக்கும்?
A.அனைத்து
திசைகளிலும் சமமின்றியிருக்கும்
B.எதிர் எதிர்
திசையில் இருக்கும்
C.அனைத்து
திசைகளிலும் சமமாக இருக்கும்
D.அனைத்தும் தவறு
22. மூடிய, ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் எந்த ஒரு
புள்ளிக்கும் அளிக்கப்படும் அழுத்தமானது திரவத்தின் அனைத்து புள்ளிகளுக்கும் சமமாக
இருக்கும் என்று கூறும் விதி
எது?
A.நியூட்டன்
மூன்றாம் விதி
B.பாஸ்கல் விதி
C.ஆர்க்கிமிடீஸ்
விதி
D.பயசாவர்ட் விதி
23.பஞ்சு ஆடைகள் மிக குறைவான இடத்தை அடைத்துக்
கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு எந்த தத்துவம் பயன்படுகிறது?
A.ஆர்க்கிமிடிஸ்
தத்துவம்
B.பாஸ்கல் விதி
C.நியூட்டன் முதல்
விதி
D.கெல்வின் விதி
24. திரவத்தின் புறப்பரப்பில் ஓரளவு நீளத்திற்கு
குத்தாக செயல்படும் விசை?
A.பரப்பு இழுவிசை
B.ஈர்ப்பு விசை
C.உராய்வு விசை
D.பாகியல் விசை
25. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் என்ன?
A.உந்து விசை
B.உராய்வு விசை
C.பாகியல் விசை
D.பரப்பு இழுவிசை
26. சைலம் திசுக்கள் நீரை கடத்துவதற்கும் , நீர்ச்சிலந்தியானது நீரின் மேற்பரப்பில் எளிதாக நடப்பதற்கும் காரணம் எது?
A.நீரின் நிறை
B.நீரின் அழுத்தம்
C.நீரின் பரப்பு
இழுவிசை
D.பாகியல் விசை
27.கடல் கொந்தளிப்பின் போது பரப்பு இழுவிசை
குறைந்து கப்பலின் மீதான தாக்கம் குறைய மாலுமிகள் பயன்படுத்துவது?
A.சோப்புத்துகள்கள்
B.எண்ணெய்
C.இரண்டும் சரி
D.இரண்டும் தவறு
28. பாகியல் விசையின் CGS அலகு என்ன?
A.பாய்ஸ்
B.டைன்
C.பாய்ல்
D.ஜுல்
29. பாகியல் விசையின் SI அலகு என்ன?
A. Nsm^-2
B. kgms^-2
C. Js
D. N/m
30. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒன்றை
சார்ந்து மற்றொன்று இயங்கும்போது அவற்றிற்கிடையே ஏற்படும் விசை?
A.பரப்பு இழுவிசை
B.உராய்வு விசை
C.பாகியல் விசை
D.உந்துவிசை
31. உராய்வினால் ஏற்படும் விளைவுகள்?
A.தேய்மானம்
B.வெப்ப உருவாக்கம்
C.இயக்கத்தை
எதிர்த்தல்
D.மேற்கண்ட அனைத்தும் சரி
32. ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால்
உணரப்படும் உராய்வு?
A.இயக்க உராய்வு
B.நழுவு உராய்வு
C.நிலை உராய்வு
D.உருளும் உராய்வு
33. உராய்வை பாதிக்கும் காரணிகள் எவை?
A.பொருளின் எடை
B.பரப்பின் தன்மை
C.தொடு பரப்பு
D.மேற்கண்ட அனைத்தும் சரி
34. உராய்வை குறைக்க பயன்படும் பொருட்கள்?
A.கிரீஸ்
B.தேங்காய் எண்ணெய்
C.கிராபைட்
D.மேற்கண்ட அனைத்தும் சரி
35.பரப்பு இழுவிசையின் அலகு என்ன?
A. N/m
B. m/s
C. W
D. Nm