காயிதே மில்லத் பற்றிய சிறப்பு வினாடி வினா

 காயிதே மில்லத் பற்றிய சிறப்பு வினாடி வினா



சிறப்பு கட்டுரை: காயிதே மில்லத் 

காயிதே மில்லத் எப்படித் தமிழராகவும் தமிழ்ப் பற்றாளராகவும் விளங்கினாரோ அதைப்போலவே பரிபூரண இந்தியராகவும் விளங்கினார்

தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத்.


கண்ணியமானவர், எளிமையானவர். தேசபக்தி நிரம்பியவர். நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர்.


முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கியபோது அதன் முக்கியத்தலைவராக இருந்தவர் காயிதே மில்லத். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம் லிக்கையும் பிரித்துவிடுவது என்று முடிவானது. அப்போது இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக காயிதே மில்லத்தும் பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பெயர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வினாடி வினாவில் பங்குபெற










Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post