SSC CGL 2023 அறிவிப்பு வெளியீடு – 7500 காலிப்பணியிடங்கள் ||
விண்ணப்பிக்கலாம் வாங்க!
Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CGL பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
SSC காலிப்பணியிடங்கள்:
Combined Graduate Level தேர்வின் மூலம் Assistant Audit Officer, Assistant Section Officer, Sub Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 7500 (தோராயமாக) காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CGL கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SSC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CGL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
SSC விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PwBD, ESM, பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.10/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CGL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Tier-I, Tier-II (Computer Based Examination) தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.