உலக கல்லீரல் தினம் - ஏப்ரல் 19
👉ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
👉கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
👉நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் ஆகும்.
👉இது நமது உடலின் செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
👉உணவுகள், மருந்துகள், பானங்கள் என நாம் சாப்பிடும் அல்லது பருகும் எதுவாக இருப்பினும் அது கல்லீரல் வழியாகவே செல்கிறது.
👉நம் உடல் சீராக இயங்க தேவையான 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.
👉நாம் உட்கொள்ளும் அனைத்து கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை நிர்வகிப்பது கல்லீரலின் பொறுப்பாக இருக்கிறது.
👉நம் உடலில் முக்கிய வேதி மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்றுகூட அழைக்கலாம்.
👉ஏனென்றால் நாம் சாப்பிடுபவற்றில் உடலுக்கு நன்மை செய்ய கூடியது மற்றும் தீங்கு செய்வது உள்ளிட்டவற்றை தரம் பிரித்து, உடலுக்கு கேடு விளைவிப்பவற்றை உடனடியாக வெளியேற்றும் வேலையை செய்கிறது.