போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 22-06-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  22-06-2023


தேசியம் :-


Card image cap

  • குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரைஇந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலைகொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான்.
  • ஆனால்சிவில் சட்டங்களைப் பொறுத்தவரைஅப்படியில்லை. திருமணம்விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு பல்வேறு மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அதாவதுதனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ளபல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி அனைத்து மத சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில்முழு நாட்டிற்கும் ஒரு பொதுவான சட்டத்தை கொண்டு வருவது பொது சிவில் சட்டமாகும்.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான கருத்துகள் 

  • பாலின சமத்துவத்தை அதிகரிக்கும்
  • சாதிமதத்தின் பெயரால் தற்போது நடக்கும் பாகுபாடுகள் குறையும்
  • தற்போது நடைமுறையில் உள்ள ஆயிரக்கணக்கான சட்டங்களும் வெகுவாகக் குறைக்கப்படும் நீதித்துறை விசாரணைகள் எளிமையாகும்

எதிரான கருத்துகள் 

  • பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிரானது.
  • நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும்

பிற தகவல்கள்

  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள்மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று  ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளின்கீழ் உள்ள 44-வது சட்டப்பிரிவு ``இந்தியா முழுமைக்கும் குடிமக்களுக்கு ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்” என்கிறது.
  • இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரே மாநிலம் -  கோவா

சர்வதேசம் :-


Card image cap
  • உலக அளவில் விமானப் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களில் டாப் 100 இடங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ‘விஸ்தாரா’ (Vistara) மற்றும் இண்டிகோ மட்டுமே இடம்பெற்றுள்ளன.
  • இதனை பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்கைட்ராக்ஸ் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • இந்த டாப் 100 பட்டியலில் விஸ்தாரா 16-வது இடத்திலும்இண்டிகோ 43-வது இடத்திலும் உள்ளன.
  • டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமான லிமிடெட் நிறுவனம் இணைந்து விஸ்தாரா நிறுவனத்தை நடத்தி வருகின்றன.
  • விஸ்தாரா நிறுவனம் தற்போது மொத்தமாக 61 விமானங்களை இயக்கி வருகிறது.


Card image cap

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உபநிஷத புத்தகங்கள்சந்தனப் பேழை ஆகியனவற்றையும்அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு  7.5 கேரட் வைரக்கல்லையும் பிரதமர் மோடி வழங்கினார்.

 

சந்தனப்பேழை

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 81 வயதாகிறது. இதனை ஒட்டி அவருக்குப் பரிசாக நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்த ஒரு சந்தனப் பேழையை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
  • இந்த பேழைமைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தனமரத்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞர்களால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வடிவங்கள் நுட்பமாக செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • அந்தப் பேழைக்குள் 'தஸ் தனம்' எனப்படும் பரிசும் இருந்தது. இது ஒரு நபர் தனது 80 வயதை பூர்த்தி செய்யும்போது வழங்கப்படுவதாகும். ஒருவர் 80 வயது 8 மாதங்களை பூர்த்தி செய்யும்போது 1000 முழு நிலவுகளைக் கண்டவராவார். இதனை 'த்ரிஷ்ட சஹஸ்ரசந்திரோ' என்று குறிப்பிடுவர்.

பேழையில் இடம்பெற்ற பொருட்கள்:

  • கோல்கட்டாவை சேர்ந்த கைவினை கலைஞர் வடிவமைத்த விநாயகரின் வெள்ளி சிலை மற்றும் வெள்ளி விளக்கு
  • 24 கேரட் தங்க நாணயம்
  • உத்தர பிரதேசத்தில் வடிவமைக்கப்பட்ட ஸ்லோகம் பதித்த செப்புத் தகடு.
  • பசு தானத்தை குறிக்கும் வகையில் மேற்குவங்கத்தை சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்த வெள்ளி தேங்காய்
  • தமிழகத்தின் எள்
  • நிலம் தானத்தை குறிக்கும் வகையில் மைசூர் சந்தனக்கட்டை.
  • பஞ்சாப்பில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெய்
  • ஜார்க்கண்டில் கையால் நெய்யப்பட்ட பட்டுத்துணி
  • உத்தரகாண்டில் பயிரிடப்பட்ட நெல் அரிசி வகைகள்
  • மஹாராஷ்டிராவின் வெல்லம்
  • குஜராத்தின் உப்பு

தமிழ்நாடு :-


Card image cap
  • தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது.

நிபந்தனைகள்:

  • கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டம் தொடங்க உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாரின் ஆட்சேபனை சான்றிதழை பெற வேண்டும்
  • மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்
  • பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கைஅவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை ஆகியவற்றை பிராந்திய சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்
  • தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.
  • நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு செய்திகள் :-



Card image cap
  • உலகின் நட்சத்திர  கால்பந்தாட்ட வீரரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் விளையாடினார். இது அவர் விளையாடிய 200-வது சர்வதேச போட்டி.
  • இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைகள்

  • 38 வயதான ரொனால்டோ கடந்த 2003-இல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தொடங்கினார்.
  • சர்வதேச போட்டிகளில் மொத்தம் 123 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார்.
  • சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலிலும் அவர்தான் முதலிடத்தில் உள்ளார்.
  • ஐந்து வெவ்வேறு உலகக்கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
  • 2006-ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோ, 2006-இல் ஒரு கோல், 2010-இல் ஒரு கோல், 2014-இல் 1 கோல், 2018 -இல் 4 கோல், 2012 -இல் 1 கோல் என மொத்தம் 8 கோல்கள் அடித்துள்ளார்.
  • சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதை இவர் முறை வென்றுள்ளார்.



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post