போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 26-06-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  26-06-2023


சர்வதேசம் :-


Card image cap

  • பொருளாதார பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்புகல்விஆரோக்கியம்  மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு பரிமாண அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி கணக்கிடப்படுகிறது.
  • உலக பொருளாதார மன்றத்தால்(WEF) 2006 -ஆம் ஆண்டு முதல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அறிக்கையிலுள்ள முக்கிய குறிப்புகள்

  • முதல் மூன்று இடம் பிடித்த நாடுகள் - ஐஸ்லாந்துநார்வேபின்லாந்து
  • இந்தியாவின் நிலை - 127
  • நமது அண்டை நாடுகளான வங்கதேசம் இந்தப் பட்டியலில் 59 வது இடம் பெற்றிருக்கிறது. பூட்டான் 103 வது இடம்சீனாவுக்கு 107 வது இடம்இலங்கை(115), நேபாளம்(116) மற்றும் பாகிஸ்தான் 142 வது இடத்தில உள்ளது.
  • ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பங்கேற்ற 146 நாடுகளுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி சமத்துவ மதிப்பெண் 68.4% உள்ளது.
  • இந்தியாவில்கல்வித்துறையில் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான சமத்துவத்தில் சரி விகிதத்தில் இருந்தாலும்பொருளாதார பங்கேற்புமற்றும் வேலை வாய்ப்பில் 36.7% சமநிலையை மட்டுமே எட்டியுள்ளது.
  • ஒருபுறம் ஊதியம் மற்றும் வருமானத்தில் சமமான உயர்வுகளைக் காண முடிகிறது. ஆனால்பதவி உயர்வுதொழில்நுட்பத் துறையை கையாள்வதில் பெண்களின் பங்களிப்புகள் உள்ளிட்டவை கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறிது குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • அரசியல் அதிகாரமளித்தலைப் பொறுத்தவரைஇந்தியா 25.3% சமத்துவத்தைப் பதிவுசெய்துள்ளதுஇம்முறை ஆண் உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் 15.1% பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கிறார்கள்.
  • இந்தியாவில் தற்போது மக்களவையில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 78
  • மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 24
  • தற்போதைய நிலை படி மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில் 10 பேர் பெண்கள்.

தமிழ்நாடு :-


Card image cap
  • சமூக நீதி காவலர்பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாகசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்  அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று வி.பி.சிங் பிறந்தநாளான நேற்று(ஜூன் 25) முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வி.பி.சிங் பற்றிய குறிப்புகள்

  • உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் ஜூன் 25, 1931- இல் பிறந்தார்.
  • 1969-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு MLA-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு M.P ஆனார்.
  • வி.பி.சிங் பணியை கண்டு வியந்த இந்திரா காந்தி உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக 1980-ஆம் ஆண்டு நியமித்தார்.
  • 1984 முதல் 1987 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி. சிங்,  1987-இல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சா எனும் கட்சியை 1987-இல் நிறுவினார்.
  • 1988-இல் ஜன் மோர்ச்சாஜனதா கட்சிலோக் தள்காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார் வி.பி. சிங்.
  • 1989-இல் மாநிலக் கட்சிகளான தி.மு.கதெலுங்கு தேசம்அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னணியைக் கட்டமைத்துமக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றார்.343 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார்)
  • 'மண்டல் கமிஷன்' என்று அறியப்பட்டசமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம் (Socially Backward Classes Commission) பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை ஏற்று 1990-இல் அமல்படுத்தியவர் வி.பி.சிங்.
  • காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.
  • பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னாபட்டம்(1990) கொடுத்ததும்நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.
  • 1990-இல் பாஜக ஆதரவை விலகிக்கொண்டதால்வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
  • அதன் பிறகுபொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர்2006-ஆம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கிஉத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில்விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்துதீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார்.
  • ஏழைகளின் பகதூர்இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங்புற்றுநோய் காரணமாக நவம்பர் 27, 2008  அன்று காலமானார்.

Card image cap
  • லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிக்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.
  • இத்திட்டம் 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படவுள்ளது.
  • இந்தத் திட்டத்தில்பூர்வீக இனங்களின் தோட்டம்ஆர்போரேடம்ஸ்பேம்புசிடம்ஸ்மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன்மூலிகைத் தோட்டம்ரோஜா தோட்டம்ராக்கரிஜப்பானிய தோட்டம்பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இடம்பெற்றிருக்கும்.
பொருளாதாரம் :-


Card image cap
  • அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸிகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
  • இந்நிலையில்அடுத்த 7 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1.23 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என்று ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார். மேலும், 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல்மயமாக்கவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.90,200 கோடி முதலீடு செய்துள்ளது.
  • இதுபோல இந்தியாவில் ரூ.82,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும்கூகுள் நிறுவனத்தின் பின்டெக் செயல்பாடுகளுக்கான மையத்தை குஜராத்தில் திறக்க உள்ளதாகவும் சுந்தர் பிச்சை அறிவித்தார்.
  • மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு மேற்கொள்ளும் என்று அதன் சிஇஓ எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
  • இவை தவிரசெமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ் இந்தியாவில் ரூ.6,750 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
விருதுகள் :-


Card image cap
  • எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான Order of the Nile’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசிஇந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
  • இவ்விருதை பெரும் முதல் இந்தியர் பிரதமர் மோடி ஆவார்.
  • பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 13-வது உயரிய அரசு விருது இதுவாகும்.
  • 1915-இல் எகிப்தை ஆட்சி செய்த சுல்தான் ஹூசைன் கமல் ‘Order of the Nile’ விருதை தோற்றுவித்தார்.
  • இந்த விருதுமனித குலத்துக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2014 முதல் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளில் வழங்கப்பட்ட விருதுகள்

  1. Order of Abdulaziz Al Saud - சவுதி அரேபியா (2016)
  2. State Order of Ghazi Amir Amanullah Khan – ஆப்கானிஸ்தான் (2016)
  3. Grand Collar of the State of Palestine Award – பாலஸ்தீனம் (2018)
  4. Order of Zayed Award - ஐக்கிய அரபு அமீரகம் (2019)
  5. Order of St. Andrew award – ரஷ்யா (2019)
  6. Order of the Distinguished Rule of Nishan Izzuddin – மாலத்தீவு (2019)
  7. King Hamad Order of the Renaissance – பஹ்ரைன் (2019)
  8. Legion of Merit - அமெரிக்க பாதுகாப்புப்படை விருது (2020)
  9. Order of the Druk Gyalpo – பூடான் (2021)
  10. Ebakl Award - பலாவ் குடியரசு (2023)
  11. Companion of the Order of Fiji - பிஜி (2023)
  12. Companion of the Order of Logohu – பப்புவா நியூ கினியா (2023)
  13. Order of the Nile - எகிப்து (2023)
முக்கிய நாட்கள் :-



Card image cap
  • உலக அளவில் போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினம் தினம் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு முதல் ஐ.நா பொதுச் சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் - "People first: stop stigma and discrimination, strengthen prevention."
  • ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படிஉலகம் முழுவதும் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 284 மில்லியன் மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.


Card image cap
  • சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
  • மனித சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையால் டிசம்பர் 12, 1997 அன்று நிறைவேற்றப்பட்டது.



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post