10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 15 நரம்பு மண்டலம் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 15  நரம்பு மண்டலம்

        சிறுதேர்வு      

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது



1. இருமுனை நியூரான் காணப்படும் இடம்

அ) கண் விழித்திரை

ஆ) பெருமூளைப் புறணி

இ) வளர் கரு

ஈ) சுவாச எபித்தீலியம்


2. பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது


அ) சிறுநீரகம்

ஆ) காது

இ) மூளை

ஈ) நுரையீரல்


3. டென்ட்ரான்கள் செல் உடலத்தை தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து தூண்டலையும் கடத்துகின்றன.

அ) வெளியே / வெளியே

ஆ) நோக்கி / வெளியே 

இ) நோக்கி / நோக்கி

ஈ) வெளியே / நோக்கி


4. மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறை


அ) அரக்னாய்டு சவ்வு

ஆ) பையா மேட்டர்

இ) டியூரா மேட்டர்

ஈ) மையலின் உறை


5.  ________இணை மூளை நரம்புகளும்,  _________இணை தண்டுவடநரம்புகளும் காணப்படுகின்றன.


அ) 12,31

ஆ) 31, 12

இ) 12, 13

ஈ) 12, 21


6. மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்கு தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்


அ) உட்செல் நியூரான்கள்

ஆ) கடத்து நரம்பு செல்கள்

இ) வெளிச்செல் நரம்பு செல்கள்

ஈ) ஒருமுனை நியூரான்கள்


7. மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்பு பகுதி எது?

அ) தலாமஸ்

ஆ) ஹைபோதலாமஸ்

இ) பான்ஸ்

ஈ) கார்பஸ் கலோசம்


8. ரேன்வீர் கணு காணப்படும் இடம்

அ) தசைகள்

ஆ) ஹைபோதலாமஸ்

இ) டெண்ட்ரைட்டுகள்

ஈ) கார்பஸ் கலோசம்


9.வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்

அ) முகுளம்

 ஆ) வயிறு 

இ) மூளை

ஈ) ஹைப்போதலாமஸ்


10.நரம்பு செல்லில் காணப்படாதது எது?

அ) நியூரிலெம்மா

ஆ)  சார்கோலெம்மா

இ) ஆக்ஸான்

ஈ) டெண்டிரான்கள்


     சுருக்கமாக விடையளி.          6 x 2 = 12


11.வேறுப்படுத்துக இச்சை செயல் மற்றும் அனிச்சை செயல்

12.வேறுப்படுத்துக. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்

13. தூண்டல் வரையறு

14. அனிச்சை வில் வரையறு

15.மூளையை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?

16. அமைப்பின் அடிப்படையில் நியூரான்களின் வகைகள் யாவை.


III விரிவான விடையளி.         2x 4 = 8


17.மூளையின் அமைப்பையும் பணிகளையும் விவரி.


18. நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி?


    வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்க




You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post