போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 04-07-2023
தேசியம் :-

- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு பிரதமர் நரேந்தி மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
- இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்த மாநாடு, ‘Secure’ (பாதுகாப்பு) என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
- பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், இணைப்பு,ஒற்றுமை, நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான பரஸ்பரம் மரியாதைமற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு என்ற பொருளில் மாநாட்டில் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Shanghai Cooperation Organisation (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) பற்றிய குறிப்புகள்
- ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை’ (SCO) உருவாக்கின.
- 2005-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது.
- அதன்பின் 2017-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் SCO அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன.
- இந்த அமைப்பில் உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமையேற்று வருகின்றன.
- அந்த வகையில் 2023-ஆம் ஆண்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
- இதன் தலைமையகம் சீனாவிலுள்ள பெய்ஜிங்கில் உள்ளது.

- சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிகண்டம் சிலையை தொல்லியலாளா்கள் கண்டெடுத்தனா்.
- இரண்டடி உயரம், ஒன்றரை அடி அகலமுடைய இந்தச் சிலை ஒரு காலை முன் வைத்து, மற்றொரு காலை பின் வைத்து மடக்கி அமா்ந்த நிலையில் அமைந்துள்ளது. மேலும், இடது கையில் தன் தலைக் குடுமியைப் பிடித்துக் கொண்டு, வலது கையில் வாளால் தன் தலையை அரிவது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதில் காதணிகள், முன்கையில் வளையல்கள், கழுத்தில் பதக்கம் போன்ற ஆபரணங்கள் அணிந்துள்ளதால், இவா் படைத் தலைவராக இருந்திருக்கலாம்.
- தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ, நோயிலிருந்து குணமடைய வேண்டியோ காளி தேவியிடம் நோ்ந்து கொண்டு, அது நிறைவேறியதும் தன் தலையைத் தானே அரிந்து உயிா் விடுதல் அரிகண்டமாகும்.
- இதேபோல, ஒன்பது இடங்களில் வெட்டி, உடலை ஒன்பது துண்டங்களாக்கி உயிா் துறப்பது நவகண்டம் என வரலாற்றாசிரியா்கள் குறிப்பிடுகின்றனா்.
- அரிகண்டம், நவகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவிப்பலி, தலைப்பலி, தன்பலி, அரிகண்டம் ஆகிய பெயா்களில் இவை வழங்கப்படுகின்றன.
- இந்தக் கோயில் வளாகத்தில் காணப்படும் சிலை அமைப்பைப் பாா்க்கும் போது, கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகம் :-

- மணப்பாறை முறுக்கு
- மார்த்தாண்டம் தேன்
- மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு
- ஆத்தூர் வெற்றிலை
- கம்பம் பன்னீர் திராட்சை
- சோழவந்தான் வெற்றிலை
- நகமம் காட்டன் சேலை
- மயிலாடி கல் சிற்பம்
- சேலம் ஜவ்வரிசி
- மானாமதுரை மண்பாண்டம்
- ஊட்டி வர்க்கி
- வேலூர் முள்ளு கத்தரி
- ராமநாதபுரம் முண்டு மிளகாய்
முக்கிய தகவல்கள்
- நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் - தமிழ்நாடு(56 பொருட்கள்)
- தமிழகத்தில் முதன்முதலில் புவிசார் குறியீடு பெற்ற பொருள் - காஞ்சிபுரம் பட்டு
- இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் பொருள் - டார்ஜிலிங் டீ(2004)
- புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) இயற்றப்பட்ட ஆண்டு - 1999
- மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.
- புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை - உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள்

- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR), சென்னை ஆசியவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் 11-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் ஜூலை 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
- மாநாட்டை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கவுள்ளாா்.
- தமிழா்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும், சங்க இலக்கியங்களில் கண்டறியப்படும் புதிய தகவல்களை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும், மேலும் தமிழ்மொழி, இலக்கியம், தமிழா் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகியவை குறித்து இளைஞா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களை கருத்தில் கொண்டும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
முக்கிய தகவல்கள்
- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1964
- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை தொடங்கியவர் - தனி நாயகம் அடிகளார்
இதுவரை நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் பட்டியல்
மாநாடு | இடம் | ஆண்டு |
1 | கோலாலம்பூர், மலேசியா | 1966 |
2 | சென்னை | 1968 |
3 | பாரிஸ்,பிரான்ஸ் | 1970 |
4 | யாழ்ப்பாணம், இலங்கை | 1974 |
5 | மதுரை | 1981 |
6 | கோலாலம்பூர், மலேசியா | 1987 |
7 | போர்ட் லூயிஸ், மொரீசியஸ் | 1989 |
8 | தஞ்சாவூர் | 1995 |
9 | கோலாலம்பூர், மலேசியா | 2015 |
10 | சிகாகோ,அமெரிக்கா | 2019 |
பொருளாதாரம் :-

- தமிழ்நாட்டில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது.
- 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.15,269 கோடியளவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.44,085 கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றது.
- இதன்மூலம் கடந்த நிதியாண்டில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
- 2023-ஆம் நிதியாண்டில், ரூ.44,227 கோடி ஏற்றுமதியுடன் உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், ரூ.37,107 கோடி ஏற்றுமதியுடன் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- தமிழ்நாட்டில் தற்போது பாக்ஸ்கான், பெகட்ரான், சால்காம்ப், சான்மினா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மின்னணு உற்பத்தியை செய்து வருகிறது.
முக்கிய நாட்கள் :-

- அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூலை 4 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
- இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4
- தாமஸ் ஜெஃபர்சன்- ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள்.
Tags:
Current Affairs