போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 11-07-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  11-07-2023


தேசியம் :-


Card image cap

  • ஒடிசாவில் ‘OTV’ எனும் தனியார் தொலைக்காட்சிசெயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘லிசா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் லிசா புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன் லிசாவுக்கு உள்ளதாம்.

முக்கிய குறிப்புகள்

  • இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ‘சனா’ எனும் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உருவாக்கி இருந்தது.
  • தொடர்ந்து குவைத்தில் ‘ஃபெதா’ எனும் AI செய்தி வாசிப்பாளர் அறிமுகமானது.
  • கடந்த 2018-இல் இதே போன்ற முயற்சியை சீனா மேற்கொண்டது. அங்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பயனர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘ரென் சியாரோங்’ எனும் AI தொகுப்பாளர் பயன்படுத்தப்பட்டது.
  • 2016-ஆம் ஆண்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட AI ரோபோ சோபியாகடந்த 2017-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் குடியுரிமையைப் பெற்றது. உலகிலேயே இத்தகைய அந்தஸ்தைப் பெற்ற முதல் ரோபோ சோபியா.


தமிழ்நாடு :-



Card image cap
  • கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகளை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
  • தாம்பரம் கிழக்குதாம்பரம் மேற்குகுன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் 4 புதிய வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய குறிப்புகள்

  • தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு - 1905 
  • அகில இந்திய அளவில்செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில்தொடங்கியது முதல் தொடர்ந்து இலாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி.


Card image cap
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது.
  • இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப் பகுதி தொல்லியல் மேடு ஆகும்.
  • இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • இங்கு முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டன. அதில்சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
  • கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள்அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன.
  • அதைத்தொடர்ந்துதற்போது ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெக்கப்பட்டது.  இதன் உருவத்தின் உயரம் 2.28 செ. மீ, 2.15 செ. மீ அகலம், 1.79 செ. மீ தடிமனும் கொண்டுள்ளது. சுமார் 40 செ.மீ ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்று காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

விருதுகள் :-



Card image cap
  • பிரதமரின் விடாமுயற்சி மற்றும் செயல்பாட்டுகளைக் கவனத்தில் கொண்டு அவரது பணிகளைச் சிறப்பிக்கும் வகையில்நிகழாண்டு லோகமான்ய திலகா் தேசிய விருதுக்கு பிரதமா் மோடியை  திலகா் அறக்கட்டளை அறங்காவலா்கள் குழு ஒருமனதாகத் தோ்வு செய்துள்ளனர்.
  • லோகமான்ய திலகரின் 103-வது நினைவு நாளையொட்டி வரும் ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க ‘லோகமான்ய திலகா் தேசிய விருது’ வழங்கி ‘திலக் ஸ்மாரக் மந்திா் டிரஸ்ட்’ கௌரவிக்க உள்ளது.
  • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவா் சரத் பவாா் பங்கேற்க இருக்கிறாா்.

முக்கிய குறிப்புகள்

  • லோகமான்ய திலகா் தேசிய விருது நிறுவப்பட்ட ஆண்டு 1983
  • இவ்விருதை பெரும் 41-வது நபர் பிரதமர் மோடி ஆவார்.
  • இவ்விருதை பெற்ற முன்னாள் பிரதமர்கள் - இந்திரா காந்தி,அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங்

விளையாட்டு செய்திகள் :-


Card image cap
  • கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லக்‌ஷயா சென் தங்கப் பதக்கம் கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் லக்‌ஷயா சென் பட்டம் வென்றுள்ளார்.


முக்கிய நாட்கள் :-


Card image cap
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 1987 ஜூலை 11 இல் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவு கூற ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்(UNDP) 1987-இல் அறிவிக்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து முதல் உலக மக்கள் தொகை தினம் 1990-இல் கடைபிடிக்கப்பட்டது.
  • இந்த தினத்தை முன்மொழிந்தவர் - டாக்டர் கே.சி.சக்கரியா
  • 2023 ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள்: ஆண், பெண் சமம் என்பதன் சக்தியை உணர்வதுஉலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை திறக்க பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் குரலை மேலோங்கச் செய்வது என்பதாகும்.

ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை 2023 அறிக்கையின் முக்கிய குறிப்புகள்

  • உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும்சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
  • இந்த அறிக்கையின்படிஇந்திய மக்கள்தொகையில் 0 - 14 வயதுடையோர் எண்ணிக்கை- 25 %,  15 முதல் 64 வயதுடையோர்- 68 % மற்றும்  65 வயதுக்கு மேற்பட்டோர் - 7%.
  • ஐநா தரவுகளின்படிஉலக மக்கள் தொகை பில்லியனை(100 கோடி) தொடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. ஆனால்அடுத்த 200 வருடத்தில் அதாவது 2011-இல் பில்லியன், 2022-இல் பில்லியன் என மக்கள் தொகை நீடித்த வளர்ச்சியை அடைந்துள்ளது.
  • இதுவே2030-இல் 8.5, 2050-இல் 9.7, 2100-இல்ஆண்டு 10.9 பில்லியனாக உயரலாம் என கணிக்கப்படுகிறது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய குறிப்புகள்

  • இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1872
  • முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1881
  • நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம்ஆண்டு நடைபெற்றது.
  • இதுவரை இந்தியாவில் 16 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துள்ளது.
  • பதினாறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 முதல் நடத்தப்படுகிறது.(16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை)

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,

  • இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் - உத்தர பிரதேசம்
  • குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலம் - சிக்கிம்
  • அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் - பீகார்
  • குறைவான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் - அருணாச்சல பிரதேசம்
  • அதிக பாலின விகிதம்  கொண்ட மாநிலம் - கேரளா
  • குறைவான பாலின விகிதம்  கொண்ட மாநிலம் - ஹரியானா
  • அதிக கல்வியறிவு விகிதம்  கொண்ட மாநிலம் - கேரளா
  • குறைவான  கல்வியறிவு விகிதம்  கொண்ட மாநிலம் – பீகார்
  • கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையும் (14.7) மற்றும் உத்திரபிரதேசம் (29.5)அதிக அளவு பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது.
  • மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் (6.3), ஒடிஷா அதிக இறப்பு விகிதத்தையும் (9.2) கொண்டுள்ளது.

பிற தகவல்கள்

  • காலராபிளேக்இன்ஃபுளூயன்சா போன்ற  கொள்ளை நோய்கள் மாற்றும் பஞ்சம் காரணமாக 1911-1921 காலகட்டத்தில் மக்கள்தொகை எதிர்மறையாகக் குறைந்தது.
  • 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு “பெரும் பிரிவினை ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
  • 1951 ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33%லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது “சிறு பிளவு ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
  • 1961-இல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். ஆகையால் 1961 ஆம் ஆண்டை ”மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு” என அழைக்கப்படுகிறது.

 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post