போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 14-10-2023
தேசியம்:-

- G20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள யசோபூமியில் இன்று (அக்டோபர் 13) தொடங்கியது.
- P20 என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- இந்த மாநாட்டிற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமை தாங்கினார்
- இந்த மாநாட்டில் G20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.
- இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது P20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்" என்பதாகும்.
தமிழகம்:-

- தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பள்ளிக்கல்வி துறை பற்றிய வரலாற்று குறிப்புகள்
- 1826 - பொதுக்கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது
- 1841 - சென்னையில் முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது
- 1849 - பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது
- 1854 - பொதுக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1892 - சென்னை மாகாணக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தன
- 1910 - இடைநிலை கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது
- 1911 - முதன்முதலாகப் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நடத்தப்பட்டது
- 1921 - சென்னை மாகாணத் தொடக்கநிலைக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தன
- 1924 - சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கட்டாய இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது
- 1953 - சட்டக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1955 -ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
- 1956 - மதிய உணவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
- 1957 - தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1960 - பள்ளி சிறார்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
- 1964 - உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது
- 1965 - கல்லூரி கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1969 - தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கப்பட்டது
- 1972- பொதுநூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1973 - அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது
- 1976 - பள்ளிசார வயதுவந்தோர் கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது
- 1978 - மேல்நிலை பள்ளி கல்வி அறிமுகம் செய்யப்பட்டது
- 1982- சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
- 1985 - எட்டாம் வகுப்பு வரை இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது
- 1986 - தொடக்கக் கல்வி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 1990 - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 2001 - தனியார் பள்ளி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது
- 2002 - சமக்ர சிக் ஷா அபியான் (முழுமையான கல்வி திட்டம்) உருவாக்கப்பட்டது
- 2009 - தேசிய அளவிலான இடைநிலைக் கல்வி திட்டம்
- 2010 - சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது
- 2021 - இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது
- 2022- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது
விருதுகள்:-

- 2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அவருக்கு விருதை வழங்கினார்.
- 2019-ஆம் ஆண்டு எழுதிய ‘சூரிய வம்சம் - நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
- முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் 'சரஸ்வதி சம்மான்' விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- இந்த விருது ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது
முக்கிய நாட்கள்:-

- உலகின் முதல் திரைப்படமான ‘The Arrival of a Train’ 50 விநாடிகளே ஓடக்கூடிய இப்படம் பாரீஸில் உள்ள கிராண்ட் கஃபே ஓட்டலில் முதன்முதலாக 1895-இல் திரையிடப்பட்டது.
- உலகின் முதல் மௌன கதைத் திரைப்படம் – The Great Train Robbery(1903). இப்படம் 12 நிமிடங்களே ஓடக்கூடியது.
- உலகின் முதல் முழுநீளக் கதைப் படம் -The Story of the Kelly Gang(1906). இப்படம் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.
- இந்தியாவின் முதல் மௌன திரைப்படம் - ராஜா ஹரிச்சந்திரா(1913)
- இந்திய சினிமாவின் தந்தை- தாதா சாகிப் பால்கே (ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தை இயக்கிவர்)
- உலகின் முதல் பேசும் படம்- Jazz Singer(1927)
- இந்தியாவின் முதல் பேசும் படம்- Alam Ara (1931)
- தமிழின் முதல் பேசும் படம் - 'காளிதாஸ்' (1931)

- உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-இல் தொடங்கப்பட்டது.
- அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
- பேரிடர் மேலாண்மையின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பேரிடர் அபாய குறைப்பு தினத்தின் நோக்கமாகும்.

- உலகப் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது அக்டோபர் 12-ஆம் தேதி அமைகிறது.
- பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு இந்நாளை கடைப்பிடித்து வருகிறது.
- பணியின் போது உங்கள் கண்களை நேசியுங்கள் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள்.
தரவரிசை பட்டியல்:-

- சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது.
- அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த Welthungerhilfe என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
- அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று(அக்டோபர் 12) வெளியானது.
- 125 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 28.7 புள்ளிகள் பெற்று 111-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 107-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் (102), இலங்கை (60) வங்கதேசம் (81), நேபாளம் (69), மியான்மர் (72) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன.
- உலக பட்டினி குறியீடை கணக்கிட பயன்பெறும் 4 முக்கிய காரணிகள்
- ஊட்டச்சத்து குறைபாடு(Undernourishment) - ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை
- குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை(Child Stunting) - நாட்டின் மக்கள் தொகையில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான கணக்கு
- குழந்தை உடல் எடை குறைதல்(Child Wasting) - 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் உயரத்திற்க்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான கணக்கு
- குழந்தை இறப்பு(Child Mortality) - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்
Tags:
Current Affairs