போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்
IMPORTANT CURRENT AFFAIRS - 14-10-2023
தேசியம்:-

- தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்டோபர் 14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்
- நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும்.
- இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும்.
- இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
தமிழ் நாடு:-

- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (Sports Development Authority of Tamil Nadu) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர் -வீராங்கனைகளுக்கு ரூ. 9.40 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- இதில் உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
- மேலும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றார்.
முக்கிய குறிப்புகள்
- ஆசிய போட்டிகளில் இந்தியா மொத்தமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை - 107 (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்)
- தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை- 28
- இந்திய அளவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாட்டின் நிலை– 5 வது இடம்
- 2023-ஆம் ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியை நடத்தும் மாநிலம் - தமிழ்நாடு

- சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட வழித்தடம் 5-இல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
- சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விளையாட்டு செய்திகள்:-

- சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், சென்னையில் Chennai Formula Racing Circuit போட்டி நடத்தப்படவுள்ளது.
- இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படும் மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.
- Chennai Formula Racing Circuit – F4 போட்டியில், இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை மாநகரில் தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகின்றன.
- இப்போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முக்கிய நாட்கள்:-

- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, உலகம் முழுவதும் தர நிர்ணய தினம்(World Standards day) கொண்டாடப்படுகிறது
- இது தர நிர்ணய பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும் எதிர்கால பாதையில் பயணிப்பதற்கும் ஆகும்.
- 2023 ஆம் ஆண்டின் உலக தர நிர்ணய தினத்தின் கருப்பொருள் "நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான நிலையான வளர்ச்சி இலக்கை உள்ளடக்கிய சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட பார்வை" என்பதாகும்.

- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று மின்னணுக் கழிவு தினம்(INTERNATIONAL E-WASTE DAY) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
- இத்தினம் மறுபயன்பாடு, மீள்வு மற்றும் மறுசுழற்சி வீதங்களை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் உலகெங்கிலுமுள்ள மின்னணுக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவதை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது
- இத்தினம் 2018 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இராணுவம்:-

- ஆபரேஷன் அஜய்(2023)- போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்
- ஆபரேஷன் தோஸ்த்(2023) - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளுக்கு நிவாரண உதவி அளித்த திட்டம்
- ஆபரேஷன் காவிரி(2022) - வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கி தவித்த இந்தியர்கள், INS சுமேதா கப்பல் மூலம் மீட்கப்பட்ட திட்டம்
- ஆபரேஷன் கங்கா(2022)- போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்ட திட்டம்
- ஆபரேஷன் தேவி சக்தி(2021) - தலிபான் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்ட திட்டம்
- ஆபரேஷன் வந்தே பாரத்(2020)- கரோனா வைரஸ் தடுப்பு லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை திரும்ப அழைத்து வந்த திட்டம்
- ஆபரேஷன் சமுத்திர சேது(2020) - கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை கடல்மார்க்கமாக அழைத்து வர செயல்படுத்தப்பட்ட திட்டம்
- சங்கத் மோச்சான்(2016)- போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்ட திட்டம்
- ஆபரேஷன் ராஹத்(2015) - உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் வசித்து வந்த இந்தியர்களை INS சுமித்ரா என்ற கப்பல் மூலம் மீட்ட திட்டம்
- ஆபரேஷன் மைத்ரி(2015) - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை
Tags:
Current Affairs