போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 16-10-2023

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 16-10-2023


 தேசியம்:-


Card image cap
  • நாகலாந்து மாநிலத்தில் முதல் முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
  • இக்கல்லூரியில் மொத்தமுள்ள 100 இடங்களில் நாகலாந்து  மாநிலத்தை சேர்ந்த 85 மாணவர்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.

முக்கிய குறிப்புகள்

  • நாகாலாந்து மாநில முதல்வர் - நைபியு ரியோ
  • நாகாலாந்து மாநில ஆளுநர் - லா.கணேசன்
  • நாகாலாந்து தலைநகர் - கோகிமா

பொருளாதாரம் :-


Card image cap
  • லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Knight Frank என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம்,உலக அளவில் குடியிருப்பு வீடுகள் அதிகம் விலைபோகும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • 2023 இரண்டாம் காலாண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் படிகுடியிருப்பு வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மும்பைக்கு 19வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரம் 22வது இடத்தில் உள்ளது.
  • தில்லி நகரம் இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் உலக அளவில் 25வது இடத்திலும் உள்ளது.
  • முதலிடத்தில் துபை உள்ளது.

Card image cap
  • ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான IRCON இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளது.
  • IRCON International நிறுவனம் சாலைகள்நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • மேலும் விரைவான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் வரையிலான உள்கட்டமைப்பு கட்டுமான சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது

முக்கிய குறிப்புகள்

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ்கான்கார்இன்ஜினியர்ஸ் இந்தியாஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்எம்டிஎன்எல்நால்கோஎன்பிசிசிஎன்எல்சி இந்தியாஎன்எம்டிசி லிமிடெட்ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம்ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாஆர்விஎன்எல்ஓஎன்ஜிசி மற்றும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் ஆகியவை ஏற்கனவே மத்திய அரசன் நவரத்தின அங்கீகாரம் பெற்றுள்ளவையாகும்.
  • ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வேண்டுமெனில்அந்நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர லாபம் ஈட்ட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,000 கோடிக்கு மேல் வருடங்களுக்கு இருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நவரத்னா அந்தஸ்து கிடைக்கும்.

விளையாட்டு செய்திகள் :-

Card image cap
  • சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(IOC141-வது கூட்டத்தை பிரதமர் மோடி மும்பையில் அக்டோபர் 14-இல் தொடங்கி வைத்தாா்.
  • இதற்குமுன் 1983-இல் புது தில்லியில் IOC கூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.
  • கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘2036-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்

முக்கிய குறிப்புகள்

  • ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில்(2020) இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 7 பதக்கங்களை வென்று 48-வது இடம் பிடித்திருந்தது.
  • 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெறும் இடம் - பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்
  • 2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெறும் இடம் - அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்
  • 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெறும் இடம்- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர்
  • 2029-ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு - இந்தியா
  • சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி(IOC) தலைவா் - தாமஸ் பேட்ச

முக்கிய நாட்கள் :-


Card image cap
  • உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறைஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
  • உலக உணவு தினத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: ‘நீரே உயிர்நீரே உணவுஎவரையும் தவிக்க விடாதீர்!’(Water is life, water is food. Leave no one behind)

முக்கிய குறிப்புகள்

  • உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும்பசிபட்டினியை எதிர்த்துப் போரிடவும் அக்டோபர் 16,1945  ஆம் ஆண்டுஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO - Food And Agriculture Organisation)  ஏற்படுத்தப்பட்டது.
  • 1945 கனடாவின் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தற்காலிக தலைமையகம் வாஷிங்டனில் நிறுவப்பட்டது. 1951 ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளால் இதன் தலைமையகம் இத்தாலி தலைநகர் ரோம்-க்கு மாற்றப்பட்டது.
  • உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பில் இந்தியா உள்பட 194 நாடுகள் தற்போது உறுப்பினர்களாக உள்ளன.
  • FAO அமைப்பு தொடங்கப்பட்ட நாளின் (அக்டோபர் 16) நினைவாக1979 முதல் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • ஹங்கேரியன் நாட்டின் அப்போதைய உணவுவிவசாயத்துறை அமைச்சர் டாக்டர் பால் ரோமணி( Dr Pal Romany) என்பவர் அளித்த ஆலோசனையின் பேரில் இத்தினம் முதல்முதலாக கொண்டாடப்பட்டது.
  • கடந்த வாரம் வெளியான, 125 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில்இந்தியா 111-வது இடத்திற்கு சரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Card image cap
  • வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முதன் முதலில் வித்திட்டவர் டபிள்யூ.ஜி.மார்ட்டின். இவர்அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர்.
  • 1846-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி மாஸாசேட் ஜெனரல் ஆஸ்பத்திரியில் எட்வர்ட் கில்பர்ட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்த கட்டியை அகற்ற ஈதர் என்ற மயக்க மருந்தை முதன் முதலில் பயன்படுத்தி நோயாளியை மயக்க நிலைக்கு உட்படுத்தி அறுவை சிகிச்சையை வலி இல்லாமல் செய்து காட்டினார்.
  • அதற்கு முன்பெல்லாம் அறுவை சிகிச்சைக்கு வலி தெரியாமல் இருக்க நோயாளிக்கு அதிக அளவில் மது அருந்த செய்து அவர்களை மயக்க நிலையில் வைத்திருப்பர். அந்த நோயாளி மயக்கம் தெளிவதற்குள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆபரேஷனை செய்து முடிப்பர். அந்த நிலையை முற்றிலும் மாற்றி மருந்து மூலம் மயக்கம் செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று உலகிற்கு மார்ட்டின் நிரூபித்து காட்டிய அக்டோபர் 16-ஆம் தேதியை உலக மயக்கவியல் தினமாக நாம் கடைபிடிக்கிறோம்.

தரவரிசை பட்டியல் :-




Card image cap

குறியீடு

இந்தியாவின் நிலை

முதலிடம் பிடித்த நாடு

வெளியிடும் அமைப்பு 

உலக பட்டினி குறியீடு(Hunger Index) 2023

111

 

பெலாரஸ்

Concern Worldwide (அயர்லாந்து) மற்றும் Welthungerhilfe(ஜெர்மனி)

சா்வதேச இணைய வேக(Speed test) தரவரிசை 2023

47

ஐக்கிய அரபு அமீரகம்

Ookla(இணைய வேக பரிசோதனை தளம்)

உலகளாவிய புத்தாக்கப்(Innovation) பட்டியல் 2023

40

சுவிட்சர்லாந்து

உலக அறிவுசாா் சொத்துரிமை நிறுவனம் (WIPO)

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2023(Passport Index)

80

சிங்கப்பூர்

Henley Passport Index

உலகளாவிய அமைதி குறியீடு(Peace Index) 2022

135

ஐஸ்லாந்து

Institute for Economics and Peace

உலகளாவிய பாலின இடைவெளி(Gender gap) அறிக்கை 2023

 

127

ஐஸ்லாந்து

உலக பொருளாதார மன்றம்(WEF)

சர்வதேச ஊடக சுதந்திர(Press Freedom) குறியீடு 2023

161

நார்வே

Reporters Without Borders (RSF)

 

 

உலகளாவிய விமானப் போக்குவரத்து(Civil Aviation) பாதுகாப்புத் தரவரிசை 2022

48

சிங்கப்பூா்

International Civil Aviation Organization

மனித வளர்ச்சிக் குறியீடு 2021

132

சுவிட்சர்லாந்து

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்(UNDP)

 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post