போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 17-10-2023

 

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 17-10-2023


 தேசியம் :-


Card image cap
  • இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.
  • இதைத்தொடர்ந்து ISRO விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பெங்களூரு சென்ற பிரதமர் மோடிசந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தினம் - ஜூலை 14,2023
  • விண்கலம் ஏவப்பட்ட ராக்கெட்டின் பெயர் - Geosynchronous Satellite Launch Vehicle Mark III எனப்படும் LVM 3
  • விண்கலத்தின் எடை - 3,895 கிலோ
  • லேண்டரின் பெயர் - விக்ரம்
  • ரோவரின் பெயர் - பிரக்யான்
  • சந்திரயான்-3 திட்டத்தின் மொத்த செலவு - ரூ.615 கோடி
  • திட்ட இயக்குனர் - வீர முத்துவேல்
  • சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய தினம் – ஆகஸ்ட் 23, 2023(தேசிய விண்வெளி தினம்)
  • சந்திரயான்-திட்டத்தின் ஆயுள் - 14 நாட்கள்
  • நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சூட்டப்பட்ட பெயர் - சிவசக்தி புள்ளி
  • நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகள் - அமெரிக்காரஷ்யாசீனா மற்றும் இந்தியா

Card image cap
  • நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போஎன்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது.
  • இந்த பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
  • இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

விருதுகள்:-


Card image cap
  • லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகள்கடல்வாழ் உயிரினங்கள்பறவைகள் உள்ளிட்ட 16 வகையான பிரிவுகளில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது.
  • இதில்முதுகெலும்பில்லா உயிரினங்களை படம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீராம் முரளிக்குமுதுகெலும்பில்லா உயிரினம் பிரிவில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது வழங்கி லண்டன் அருங்காட்சியகம் கவுரவித்தது.


Card image cap
  • ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது கோவாவின் 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
  • மைக்கேல் டக்ளஸ் தனது ஹாலிவுட் வாழ்க்கையை 1966-இல் தொடங்கி, 63-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  • 1987ஆம் ஆண்டு வெளியான ‘வால் ஸ்ட்ரீட்’ என்னும் படத்திற்காக 'சிறந்த நடிகருக்கானஆஸ்கர் விருதை வென்றுள்ளார்

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

Card image cap
  • உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

முக்கிய குறிப்புகள்

  • மணிப்பூர் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- மார்ச் 25, 2013
  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 217(1)
  • உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது - 62
  • இந்தியாவில் உள்ள மொத்த உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை- 25
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்


விளையாட்டு செய்திகள்:-


Card image cap
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141-வது அமர்வு மும்பையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
  • இந்த அமர்வில் நேற்று(அக்டோபர் 16)2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் புதிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.

புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகள்

  • Cricket-T20
  • Baseball/softball
  • Flag football
  • Squash
  • Lacrosse

ஒலிம்பிக் முக்கிய குறிப்புகள்

  • முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டு கி.மு. 776 இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நடத்தப்பட்டது
  • ஒலிம்பிக் போட்டி நவீன வடிவம் பெற்ற ஆண்டு - ஜூன் 23,1894
  • நவீன ஒலிம்பிக் போட்டியை  ஒருங்கிணைத்தவர்- பியரிடி கூபர்டின்(ஒலிம்பிக் போட்டியின் தந்தை).
  • முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் - பியரிடி கூபர்டின்
  • முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - 1896(ஏதென்ஸ்)
  • ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட ஆண்டு - 1900(பாரிஸ்)
  • குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1924
  • ஒலிம்பிக் கொடி முதல் முதலாக பறக்கவிடப்பட்ட ஆண்டு – 1920
  • ஒலிம்பிக் கொடியில் மொத்தமுள்ள வண்ணங்கள் - 6
  • வெள்ளை நிறத்தைப் பின்புலமாக கொண்ட கொடியின் மீது ஊதாமஞ்சள்கருப்புபச்சைசிவப்பு ஆகிய 5 நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்
  • இந்த வளையங்கள்ஆசியாஆப்பிரிக்காஐரோப்பாஆஸ்திரேலியாஅமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.
  • இதுவரை 32 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது.

அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்

  • 2024 – பாரீஸ்(பிரான்ஸ்)
  • 2028- லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா)
  • 2032- பிரிஸ்பேன்(ஆஸ்திரேலியா)

இறப்பு:-


Card image cap
  • இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ் கில்வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.
  • மனோகர் சிங் கில்கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்தவர்.
  • 2001-இல் அவரது பணி ஓய்வுக்கு பிறகுகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். 
  • 2008-இல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

முக்கிய நாட்கள்:-


Card image cap

 

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • வறுமை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்இந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள்: "கண்ணியமான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு: அனைவருக்கும் கண்ணியத்தை நடைமுறைப்படுத்துதல்"
  • டிசம்பர் 22, 1992- இல் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் மூலம்ஐநா பொதுச் சபை அக்டோபர் 17 ஆம் தேதியை சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தது.

உலக வங்கியின் தரவுகளின் படி உலகில் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்

  1. தெற்கு சூடான் - 82.30%
  2. ஈக்குவடோரியல் கினியா - 76.80%
  3. மடகாஸ்கர் - 70.70%
  4. கினியா பிசாவ் - 69.30%
  5. எரிட்ரியா - 69.00%
  6. சாவோ டோம் மற்றும் பிரின்சிபி - 66.70%
  7. புருண்டி - 64.90%
  8. காங்கோ ஜனநாயக குடியரசு - 63.90%
  9. மத்திய ஆப்பிரிக்க குடியரசு - 62.00%
  10. குவேட்டமாலா - 59.30%



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post