போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் IMPORTANT CURRENT AFFAIRS - 18-10-2023

போட்டி தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 IMPORTANT CURRENT AFFAIRS - 18-10-2023





 தேசியம் :-


Card image cap
  • ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம்விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இதன்படிஇந்தியாவின் ககன்யான் திட்டத்தை 2025-இல் செயல்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
  • அதே போன்று  'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' என்ற பெயரிலான இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையத்தை 2035-க்குள் அமைக்கவும்இவற்றின் தொடர்ச்சியாக 2040-இல் நிலவுக்கான இந்தியர்களின் சாதனைப் பயணம் நடைபெறும் எனவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சர்வதேசம் :-


Card image cap
  • நியூசிலாந்து நாட்டின் 54-வது நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் என்பவர் போட்டியிட்டார்.
  • இதில் எதிர்க்கட்சியான தேசிய கட்சி வெற்றி பெற்று புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Card image cap


தன் பாலின திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்த நாடுகள் 
  • நெதர்லாந்து: 2001
  • பெல்ஜியம்: 2003
  • கனடா: 2005
  • ஸ்பெயின்: 2005
  • தென் ஆப்பிரிக்கா: 2006
  • நார்வே: 2009
  • ஸ்வீடன்: 2009
  • ஐஸ்லாந்து: 2010
  • போர்ச்சுக்கல்: 2010
  • அர்ஜென்டினா: 2010
  • டென்மார்க்: 2012
  • உருகுவே: 2013
  • நியூசிலாந்து: 2013
  • பிரான்ஸ்: 2013
  • பிரேசில்: 2013
  • பிரிட்டன்: 2014
  • ஸ்காட்லாந்து: 2014
  • லக்சம்பர்க்: 2015
  • அயர்லாந்து: 2015
  • அமெரிக்கா: 2015
  • கொலம்பியா: 2016
  • கிரீன்லாந்து: 2016
  • பின்லாந்து: 2017
  • ஜெர்மனி: 2017
  • மால்டா: 2017
  • ஆஸ்திரேலியா: 2017
  • ஆஸ்திரியா: 2019
  • தைவான்: 2019
  • ஈக்வடார்: 2019
  • கோஸ்டாரிகா: 2020
  • சுவிட்சர்லாந்து: 2022
  • மெக்சிகோ: 2022
  • சிலி: 2022
  • ஸ்லோவேனியா: 2022
  • கியூபா: 2022
  • அண்டோரா: 2022
  • எஸ்டோனியா: 2023

தமிழ் நாடு:-


Card image cap
  • தமிழ்நாட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
  • மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்

‘பிரதமரின் விஸ்வகர்மா’ திட்டம்

  • இத்திட்டம் விஸ்வகர்மா ஜெயந்தியை(செப்டம்பர் 17) முன்னிட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களுக்கான பொருளாதார ஆதரவுதிறன் வளர்ப்புதிறன் சார்ந்த பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு போன்றவற்றை இத்திட்டம் வழங்குகிறது.
  • இதற்காக ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பலனடைவார்கள்.
  • விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெரும் 18 பாரம்பரிய தொழில்கள் - தச்சு வேலைபடகு தயாரிப்புஇரும்புக் கொல்லர்ஆயுதங்கள் தயாரிப்புசுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்புபூட்டு தயாரிப்புபொற்கொல்லர்மண்பாண்டக் கலைஞர்சிற்பிகல் உடைப்பவர்காலணி தைக்கும் கலைஞர்கொத்தனார்கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர்பொம்மை கலைஞர்கள்முடிதிருத்துவோர்பூ மாலை தயாரிப்பவர்சலவை தொழிலாளர்தையல் கலைஞர்மீன்பிடி வலை தயாரித்தல்

விருதுகள் :-


Card image cap
  • சிறந்த படம் - 'ராக்கெட்ரிதி நம்பி எஃபெக்ட்' (இயக்குனர் -ஆர். மாதவன்)
  • சிறந்த இயக்குநர்- நிகில் மகாஜன் (கோதாவரி-மராத்திய படம்)
  • சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது - விஷ்ணு மோகன் (மேப்படியான்-மலையாள திரைப்படம்)
  • சிறந்த நடிகர்-அல்லு அர்ஜூன்(புஷ்பா)
  • சிறந்த நடிகை- ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி)
  • சிறந்த குழந்தைக் கலைஞர் -பவின் ரபாரி (சல்லோ ஷோ)
  • சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி(மிமி)
  • சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி(தி காஷ்மீர் பைல்ஸ்)
  • சிறந்த பாடல் இசைக்கான விருது - தேவி ஸ்ரீ பிரசாத்(புஷ்பா)
  • சிறந்த பின்னணி இசை - கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த பின்னணி இசை பாடகி - ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)
  • சிறந்த பின்னணி இசை பாடகர் - கால பைரவா (கோமுரம் பீமடு - ஆர்.ஆர்.ஆர்)
  • சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)
  • சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியர் சந்திரபோஸ் (தெலுங்கு)
  • கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஸ்ரீகாந்த் தேவா (Special mention)
  • தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது - தி காஷ்மீர் பைல்ஸ்
  • சிறந்த தமிழ் திரைப்படம்- கடைசி விவசாயி (இயக்குனர் - மணிகண்டன்)
  • சிறந்த கல்வி திரைப்படம் -  ‘சிற்பங்களின் சிற்பங்கள்’(இயக்குனர் -பி.லெனின்)
  • சிறந்த குழந்தைகள் திரைப்படம்- காந்தி&கோ (குஜராத்தி)
  • சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்- ஆர்.ஆர்.ஆர்

தேசிய திரைப்பட விருதுகள் -முக்கிய குறிப்புகள்

  • தேசிய திரைப்பட விருதுகள் தொடங்கப்பட்ட ஆண்டு - 1954
  • 69-வது தேசிய திரைப்பட விருது தேர்வுக்குழு உறுப்பினர்களின் தலைவர் - இயக்குநர் கேட்டன் மேத்தா
  • 69-வது தேசிய திரைப்பட விழாவில் அதிக விருதுகளை வென்ற திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர்(விருதுகள்)


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post