10 TH STD TAMIL HALF YEARLY EXAM ANSWER KEY TIRUVANNAMLAI DISTRICT

 அரையாண்டுத்தேர்வு 2024  

திருவண்ணாமலை மாவட்டம்  

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் 

வினாத்தாளைப் பதிவிறக்க


அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024, திருவண்ணாமலை மாவட்டம்

       10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                            பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஈ. சருகும் சண்டும்

1

2.     

ஆ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

3.     

அ. வேற்றுமை உருபு

1

4.     

. இலா

1

5.     

. தேவநேயப்பாவாணர்

1

6.     

இ. கல்வி

1

7.     

ஆ. தளரப்பிணைத்தால்

1

8.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

9.     

இ. வினைத்தொகை

1

10.    

அ. கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

11.    

அ. கருணையன், எலிசபெத்துக்காக

1

12.   

இ. உண்மை, வெண்மை

1

13.   

அ மற்றும்  ஆ இரண்டும் சரி  - வண்மை-வெண்மை

1

14.   

ஆ. புகழ்+உரை

1

15.   

. கம்பராமாயணம்

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

சரியான வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

17

சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி

2

18

    மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்

2

19

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

20

இடையறாது அறப்பணி செய்தல்

2

21

பல்லார்  பகைகொளலின் பத்தடுத்த  தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

2

                                                                                    பிரிவு-2                                                                 5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. உதகை   ஆ. மயிலை

2

23

கவிஞர்-பெயர்ப்பயனிலை  ,  சென்றார்வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை

2

24

வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை

2

25

அ. மருந்தும் மூன்று நாளுக்கு  ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

2

26

. மீநுண் தொழில்நுட்பம்   . காப்புரிமை

2

27

உரைத்தஉரை + த் + த் +

உரை - பகுதி

த்- சந்தி

த் -  இறந்த காலஇடைநிலை

- பெயரெச்ச விகுதி

2

28

உரிய தொடர் அமைத்து எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது

3

30

அ. அறம் கூறும் மன்றங்கள் 

அ. அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்

இ. துலாக்கோல் போல நடுநிலை  மிக்கது

3

31

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

                                                                                 பிரிவு-2                                                                    2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

34

 

.  

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

.

நவமணி வடக்க யில்போல்

     நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

     தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

     துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே.

3

                                                                                     பிரிவு-3                                                                2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

                                    

3

36

 

சீர்

அசை

வாய்பாடு

பண் எண்ணாம்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

பாடற்

நேர்+நேர்

தேமா

கியைபின்றேல்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கண் என்னாம்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

கண்ணோட்டம்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

இல்லாத

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

கண்

நேர்

நாள்

3

37

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

      மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள் வரவேண்டாம் எனக் கூறிகையசைப்பதாகக் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

                                                                                  பகுதி-4                                                                  5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ.

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

ஆ.விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

5

39

 

)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி            என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்

)

      சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

                                                                             பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ) தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

ஆ) முன்னுரை:

   பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்:

     தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர்:

     பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்.

நாடகக் கலைஞர்:

   கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில்கலைஞர்என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.

திரைக்கலைஞர்:

   எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.

இயற்றமிழ்க் கலைஞர்:

     கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.

முடிவுரை:

   தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

8

44

. கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:                                                                        

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 ஆ) வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”                               

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

8

45

. முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:                                                                                       

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

ஆ) முன்னுரை:

      சாலை விதிகளை அறிந்து நடத்தல் நமக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் நல்லது. சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆகும். சாலை விதிகளின் அவசியத்தை இக்கட்டுரையில் காண்போம்.

சாலை விதிகளை அறிவோம்:

     சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். தலைக்கவசம் அணிதல், சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குதல், வண்ண விளக்குகளின் நிலை அறிந்து சாலையைக் கடத்தல், மற்ற வாகனங்களை முந்தாமல் செல்லுதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

    சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும். மஞ்சள் விளக்கு எரிந்தால் செல்லத் தயாராக இருக்க வேண்டும். பச்சை விளக்கு எரிந்தால் செல்ல வேண்டும். அனைத்து சாலை விதிகளையும் முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும்.

விபத்துகளுக்கான காரணங்கள்:

   வாகனங்களை முந்துதல், அதிக வேகம், தேவையற்ற இடங்களில் சாலையைக் கடத்தல், ஒருவழிப்பாதையில் செல்லுதல் உள்ளிட்டவை விபத்துகளுக்கான காரணங்களாகும்.

தேவையான விழிப்புணர்வு:

   சாலை விதிகள் நாம் அனைவரும் பாதுகாப்புடன் பயணிக்கவே ஏற்படுத்தப்பட்டன. அதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்.

நமது கடமை:

    சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதும், நம்மைச் சார்ந்தவர்களைப் பின்பற்றச் செய்வதும் நமது கடமையாகும்.

பதிவிறக்க

 

 

 





Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post