பாய்மங்கள்
திடப்பொருகளின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள விசையானது அதிகமாக உள்ளதால் அவற்றின் வடிவத்தையும் அளவையும் எளிதில் மாற்ற முடியாது . ஆனால்திரவத்திலும் வாயுக்களிலும்( கூட்டாக பாய்மங்கள் என்று அழைக்கப்படுகிறது) இவ்விசை குறைவாக உள்ளதால் அவற்றின் வடிவத்தை எளிதில் மாற்றலாம்.
அழுத்தம்
ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும் ஆகையால் ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையே அழுத்தம் என்று நாம் கூறலாம்..
அழுத்தம்=உந்துவிசை/தொடு பரப்பு
கொடுக்கப்பட்ட மாறா விசைக்கு பரப்பளவு அதிகரிக்கும்போது அழுத்தம் குறையும் ;பரப்பளவு குறையும்போது அழுத்தம் அதிகரிக்கும்.
திரவங்கள் ஏற்படுத்தும் அழுத்தம்
திரவங்களின் அழுத்தத்தினால் ஒரு திரவத்தில் முழ்கியிருக்கும் பொருளின் மீது, கொள்கலனின் சுவற்றின் மீது செயல்படும் விசையானது அவற்றின் மேற்பரப்பிற்கு செங்குத்தாகவே செயல்படும். கொள்கலனின் அனைத்து திசைகளிலும் அழுத்தம் செயல்படும்.
காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும் போது அது உடனடியாக மேலெழும்பி நீரின் மேல் மிதக்கும் இந்நிகழ்வு நீரில் மேல்நோக்கி அழுத்தம் ஒன்று செயல்படுவதை காட்டுகிறது.
அதேபோல் திரவங்களின் அழுத்தமானது பக்கவாட்டிலும் செயல்படுகிறது. பக்கவாட்டில் துளையிடப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் நிரப்ப்பப்பட்டால், நீரானது துளைகளின் வழியே வெளியேறுவதை காணலாம். இதற்கு திரவங்கள் கொள்கலனின் பக்கவாட்டு சுவர்களின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் தான் காரணமாகும்.
திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணிகள்
ஆழம்
திரவத்தின் அடர்த்தி
புவியீர்ப்பு முடுக்கம்
வளிமண்டல அழுத்தம்
பூமியானது குறிப்பிட்ட உயரம் வரை காற்றால் சுழப்பட்டுள்ளது .இதனை புவியின் வளிமண்டலம் என்று அழைக்கிறோம்..காற்றானது இடத்தை அடைத்துக் கொள்ளும் மேலும் அதற்கு எடை உள்ளது என்பதால் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமானது வளிமண்டல அழுத்தம் எனப்படுகிறது.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடுதல்
வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது. இத்தாலிய இயற்பியலாளர் டாரிசெல்லி என்பவர் முதல் முதலாக பாதரச காற்றழுத்தமானி உருவாக்கினார்.பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ-3.
1.013×10^-5 பாஸ்கல், இதை வளிமண்டல அழுத்தம் என்கிறோம். பார் என்ற மற்றொரு அலகும் உள்ளது.1 atm= 1.013 பார்.
கிலோ பாஸ்கலின் அளவில் என் மதிப்பை கூறும்போது வலிமண்டல அழுத்தமானது 1.013 கிலோ பாஸ்கல் ஆகும்.
பாஸ்கல் விதி
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்து திசையிலும் சீராக கடத்தப்படும் என்பதை பாஸ்கல் விதி கூறுகிறது.
ஒப்படர்த்தி
ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது p அப்பொருளில் அடர்த்திக்கும் வெப்பநிலையில் நீரின் அடர்த்திக்கும் உள்ள விகிதமென்று வரையறுக்கப்படுகிறது.
பிக்கோ மீட்டர் என்ற உபகரணத்தை கொண்டு ஒப்படர்த்தி அளக்க முடியும் . பிக்நோமீட்டர் என்பதற்கு அடர்த்தி குடுவை என்ற மற்றொரு பெயரும் உண்டு. நீரியல்மானி என்பது ஒரு திரவத்தின் ஒப்பர்த்தியை கணக்கிட உதவுகிறது .இது ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது..,.
பாய்மங்கள் வினாடி வினாவில் பங்கேற்க