நவீனகால இந்திய ஆதாரங்கள்-அறிமுகம்

நவீனகால இந்திய ஆதாரங்கள்





             நவீன கால வரலாற்று நிகழ்வுகளை அறிய சர்வதேச தேசிய மற்றும் வட்டார அளவில் நமக்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன. தொடக்க காலத்திலிருந்தே போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளின் பதிவேடுகள் லிஸ்பன் கோவா பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவண காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

சான்றுகளின் வகைகள் ஒன்று.

1. எழுதப்பட்ட ஆதாரம் 2. பயன்பாட்டு பொருள் ஆதாரம்

எழுதப்பட்ட ஆதாரங்கள்

             அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பிற்கு பின் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன இந்தியாவின் ஏராளமான செல்வத்தை பற்றி மார்க்கோ போலோ மற்றும் சில வெளிநாட்டு பயணிகளின் பயண குறிப்பிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்துகொண்டனர் இக்குறிப்புகள் ஐரோப்பியர்களின் இந்தியாவை நோக்கி ஈர்த்தது. தமிழ் வரலாற்று குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இடம் பிடித்து இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார் 1736 இலிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரண்ட்ஸ் இந்திய உறவுமுறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் காலத்தைப் பற்றி அறிய உதவும் ஒரே சான்றாக உள்ளது.


ஆவணக்காப்பகங்கள் 

                வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ஆவண காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியான வாழ்க்கை மற்றும் மக்கள் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான உண்மையான சான்றுகள் இதில் அடங்கியுள்ளன. இது இந்தியாவில் உள்ள ஆவணங்களிலேயே மிகவும் பெரியதாகும். ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.


தமிழ்நாடு ஆவணக் காப்பகம்

            தற்போது தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்றழைக்கப்படும் சென்னை பதிப்பு பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.இதுதென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1642 ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன. இந்தப் பதிவுகள் 1657 முதல் 1645 காலப்பகுதியை உள்ளடக்கியது.டேனிஷ் பதிவுகள் 1777 முதல் 1745 காலப்பகுதியை உள்ளடக்கியது என்பவரின் பெரும் முயற்சியால் 1917-ஆம் ஆண்டு சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது.


பயன்பாட்டு பொருளாதாரங்கள்

            பல ஓவியங்கள் மற்றும் சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. டெல்லியில் உள்ள மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியம் ஆகும் .இது 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கிபி 1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது .ராணி விக்டோரியாவின் பிறகு அரியணை ஏறிய மன்னர் ஏழாம் எட்வேர்ட் தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார். இந்தியாவின் முதல் ஐந்து ரூபாய் நோட்டு ஜனவரி 1938ல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.1690 இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.





 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post