மின்னூட்டம் மற்றும் மின்னோட்டம்
மின்னோட்டம்
மின்னூட்டம் என்பது அனைத்து பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பாகும். பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. அணுக்கள் புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் ஆகிய துகள்களால் ஆனது. புரோட்டான் நேர் மின்னூட்டமும்,எலக்ட்ரான் எதிர் மின்னூட்டமும், நியூட்ரான் நடு நிலையையும் கொண்டது .இந்த மின்னூட்டங்களில் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
மின்னூட்டங்கள்
அணுவிற்குள் அணுக்கரு உள்ளது .அதனுள் நேர்மின் சுமை கொண்ட புரோட்டான்களும் மின்சுமை அற்ற நியூட்ரான்களும் உள்ளன. அணுக்கருவை சுற்றி எதிர்மின் சுமை பெற்ற எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன .புரோட்டானும் எலக்ட்ரானும் சம எண்ணிக்கையில் காணப்படுவதால் அனைத்து அணுக்களும் நடுநிலைத் தன்மை உடையன.ஒர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அவ்வணு அதுவே நேர் அயனி எனப்படும் .மாறாக ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அவ்வணு எதிர் மின்னூட்டம் பெறும் இதுவே எதிரயனி எனப்படும்.
மின்னூட்டத்தை அளவிடல்
மின்னூட்டம் ஆனது கூலூம் என்ற அலகால் அளவிடப்படுகிறது. அதன் குறியீடு C. எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு =1.6×10-19 C எந்த ஒரு மின்னூட்டமும் அடிப்படை மின்னூட்டமானது எலக்ட்ரானின் மின்னூட்டத்தின்(e) முழு எண் மடங்காக இருக்கும்.
மின்விசை
மின்னூட்டங்களுக்கிடையில் ஏற்படும்மின்விசை இரு வகைப்படும். ஒன்று கவர்ச்சி விசை, மற்றொன்று விலக்கு விசை. ஓரினமின்னூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும். மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும். இது தொடுகை இல்லா விசை வகையை சேர்ந்தது.
மின்புலம்
ஒரு மின்னூட்டத்தை சுற்றி அதன் மின் விசையை உணரக்கூடிய பகுதி மின்புலம் எனப்படும். மின்விசை கோடுகள் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவு கோடுகள் ஆகும்.
அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும்.
மின் சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும். மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்.ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி அம்மீட்டர் எனப்படும்.
மின் விளக்கு அல்லது இதர பிற மின் கருவிகள் வழியாக செல்லும் ஒவ்வொரு கூலூம் மின்னூட்டத்தினாலும் பிற வகைகளாக மாற்றப்படும் மின் ஆற்றலின் அளவு அந்த மின் கருவி குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டை சார்ந்தே இருக்கிறது. மின்னழுத்த வேறுபாட்டின் குறியீடு V .
V= W/q இங்கு w என்பது செய்யப்பட்டவேலை, q என்பது மின்னூட்டத்தின் அளவு மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி வோல்ட் மீட்டர்.
ஒரு மின் கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவே மின்தடை எனப்படும்.வெவ்வேறு மின்பொருள்களின் மின்தடை வெவ்வேறாக இருக்கும்.புறக்கணிக்கத் தக்க மின்தடையை கொண்ட தனிமங்கள் தாமிரம், அலுமினியம் ஆகியவை ஆகும் அதிக மின்தடையை கொண்டுள்ள தனிமங்கள் நிக்ரோம், வெள்ளிய ஆக்சைடு ஆகியவை ஆகும். மின்தடையின் SI அலகு ஓம் ஆகும். ஒரு கடத்தியின் வழியாக ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாயும் போது அதன் முனைகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் எனில் அந்த கடத்தியின் மின்தடை ஒரு ஓம் ஆகும்.
மின்னோட்டத்தின் விளைவுகள்
மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்படும் போது வெப்பம் உருவாகிறது. ஒரு கம்பியிலோ அல்லது மின்தடையத்திலோ எலக்ட்ரான்கள் இயங்கும் போது அவை தடையை எதிர்கொள்கின்றன. இதை கடக்க வேலை செய்யப் பட வேண்டும். இதுவே வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு ஜூல் வெப்ப விளைவு எனப்படும். மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, வறுதட்டு உள்ளிட்ட மின் வெப்ப சாதனங்களின் அடிப்படையாக இவ் விளைவே விளங்குகிறது.
TO ATTEND QUIZ