வெப்பம்
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பொருட்களும் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே மூலக்கூறுகளின் அக ஆற்றல் ஆகும். இந்த அக ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் பொழுது அது வெப்ஆற்றல் எனப்படுகிறது.
வெப்பத்தின் விளைவுகள்
விரிவடைதல்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அந்த பொருளிலுள்ள மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெற்று அதிர்வடைய தொடங்கும்.எ.கா. வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் ரயில்தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது. திடப்பொருள்களை விட திரவப்பொருட்கள் அதிகமாக விரிவடையும் ஆனாலும் வாயு பொருள்கள் இவை இரண்டையும் விட அதிகமாக விரிவடையும்.
நிலைமாற்றம்
பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது அது நீராக மாறுகிறது மேலும் வெப்பத்தினால் நீர் ஆவியாக மாறுகிறது.
ஆகவே திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது திரவப்பொருளாக மாறுகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது வாயுநிலைக்கு மாறுகிறது. வெப்பநிலையை குறைக்கும் போது தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது.
வெப்பநிலை மாற்றம்
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அந்த பொருளில் உள்ள மூலக்கூகளின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.மூலக்கூறுகள் அதிர்வடைவதால் பொருளின் வெப்பநிலை அதிகரிக்கிறது . அந்தப் பொருளைக் குளிர்விக்கும் போது வெப்ப ஆற்றல் வெளியேறி அதன் வெப்பநிலை குறைகிறது.
வேதியியல் மாற்றம்
வெப்பம் ஒரு வகையான ஆற்றலாக இருப்பதால் அது வேதியியல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வேதிவினைகள் தொடங்குவதற்கு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது .அது போல வேதிவினைகளின் வேகத்தையும் வெப்ப ஆற்றலே தீர்மானிக்கிறது.
வெப்பம் பரவும் மூன்று வழிகள்
1. வெப்பக் கடத்தல் 2.வெப்பச்சலனம் 3.வெப்பக் கதிர்வீச்சு
அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கம் இன்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக்கடத்தல் எனப்படும்.
உதாரணம்;
1)உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள் .அதனால்தான் அலுமினியப் பாத்திரங்களை
சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.
2)பாதரசம் சிறந்த வெப்பகடத்தியாக இருப்பதால் அதை வெப்ப நிலைமானியில்
பயன்படுத்துகிறோம்.
3)நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடை அணிவதன் காரணம் அது ஓர் அரிதிற்கடத்தி .எனவே
உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்குக் கடத்தாமல் வைத்திருக்கும்.
2.வெப்பச்சலனம்
ஒரு திரவத்தின் அதிக வெப்பம் உள்ள பகுதியிலிருந்து குறைவான வெப்பம் உள்ள
பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை வெப்ப சலனம்
எனலாம்.
உதாரணம்.
1) சூடான காற்று பலூன்களின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று மூலக்கூறுகள் வெப்பமடைந்து மேல்
நோக்கி நகரத் தொடங்கும் .இதனால் சூடான காற்று பலூனின் உள்ளே நிரம்புகிறது.
அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது .
2).பகல் நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரை விட அதிகமாக சூடாகிறது .இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது. கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனை கடல்காற்று என்கின்றோம்.இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரை விட விரைவில் குளிர்வடைகிறது . கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலெழும்பும் நிலப்பரப்பில் இருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதனை நிலக் காற்று என்கிறோம்.
3) புகைப் போக்கிகள் சமையல் அறைகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் எளிதாக வளிமண்டலத்திற்கு சென்றுவிடுகிறது.
3)வெப்பக் கதிர்வீச்சு
எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவதை நாம் வெப்பக் கதிர்வீச்சு என்கிறோம். வெப்ப கடத்தலும் வெப்ப சலனமும் வெற்றிடத்தில் நடைபெறாது. அவைகள் நடைபெற பொருட்கள் தேவைப்படும். ஆனால் வெப்பக்கதிர்வீச்சு நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை .இதனால் வெற்றிடத்தில் கூட வெப்பக் கதிர்வீச்சு நடைபெறும்.வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகளாக மாறும் நிலையை வெப்பக் கதிர்வீச்சு என்கிறோம். சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் வெப்ப கதிர் வீச்சு மூலமாகவே பூமிக்கு வருகிறது.
உதாரணம்.
1)வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள் ஆகும்.அதனால் தான் கோடை
காலங்களில் அவை நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன.
2)சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதியில் கருப்பு நிற வண்ணத்தைப் பூசி
இருப்பார்கள். கருப்பு நிறமானது அதிக கதிர்வீச்சினை உட்கவரும்.
3)விமானத்தின் புறப்பரப்பு மிகவும் பளபளப்பாக இருக்கும்.இதனால் சூரியனில் இருந்து விமானத்தின் மீது விழும் கதிர்வீச்சின் பெரும் பகுதியானது பிரதிபலிக்கப்படுகிறது.
வெப்பநிலை :
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைதான் நாம் வெப்பநிலை
என்கிறோம். ஒரு பொருளின் வெப்பம் அதிகரிக்கும் பொழுது அதன் வெப்ப நிலையும்
அதிகரிக்கும்.
வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K). தினசரி பயன்பாட்டில் செல்சியஸ் என்ற அலகும் பயன்படுத்தப்படுகிறது.
வெப்பநிலை அளவீடுகள்;
1. ஃபாரன்ஹீட் அளவீடு
2. செல்சியஸ் அளவீடு
அல்லது சென்டிகிரேட் அளவீடு
3. கெல்வின் அளவீடு
அல்லது தனித்த அளவீடு.
1. பொருளின் நிறை
2. பொருளில் ஏற்படும்
வெப்பநிலை வேறுபாடு
3. பொருளின் தன்மை.
நிலைமாற்றம்
பொருளானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலைமாற்றம் என்கிறோம்.
உருகுதல்-உறைதல்
ஆவியாதல்- குளிர்தல்
வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வு குளிர்தல் எனப்படும்.
உள்ளுறை என்பது மறைந்திருப்பது எனப்படும். ஆகவே உள்ளுறை வெப்பம் என்பது மறை
வெப்பம் அல்லது மறைந்திருக்கும் வெப்ப ஆற்றல் எனப்படும்.வெப்ப நிலை மாறாத நிலையில்
ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும்போது உட்கவரும் அல்லது வெளிவிடும் வெப்ப
ஆற்றல் உள்ளுறை வெப்பம் ஆகும்.
உள்ளுறை வெப்பத்தை ஓரலகு நிறைக்கு வரையறுத்தால் அதனை தன் உள்ளுறை வெப்பம் எனலாம். இதனை L என்று குறியீட்டினால் குறிப்பிடலாம். Q என்பதை உட்கவரப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட வெப்பத்தின் அளவாகவும், m என்பதை பொருளின் நிறையாகவும் கருதினால் தன் உள்ளுறை வெப்பம் கீழ்கண்ட சமன்பாட்டால் குறிப்பிடலாம். L=Q/m
TO ATTEND QUIZ CLICK HERE