8 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-1
8 TH STD SCIENCE
செயல்பாடு-1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பொருட்களும் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே மூலக்கூறுகளின் அக ஆற்றல் ஆகும். இந்த அக ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் பொழுது அது வெப்ப ஆற்றல் எனப்படுகிறது.
கற்றல் விளைவுகள்
செயல்கள் மற்றும் நிகழ்வை விளக்குதல்வெப்பநிலைமானி வேலை செய்யும் தத்துவத்தை புரிந்து கொள்ளுதல், வெப்பநிலைமானியை பயன்படுத்தி வெப்பநிலை அளவிடுதல்.
எளிய சோதனைகளை செய்து வினாக்களுக்கு விடைகளை கண்டறிதல், மருத்துவ மற்றும் ஆய்வக வெப்பநிலைமானிகளை பயன்படுத்தி வெப்பநிலையை அளவிடுதல்.
கற்றுக்கொண்ட அறிவியல் கருத்துகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல் ,வெப்பநிலையின் மதிப்பினை ஒருவகை அளவில் இருந்து மற்றொரு அளவிற்கு மாற்றுதல்.
மதிப்பீடு:
1. வெப்பநிலையின் அலகு________________
விடை:கெல்வின்
2.வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் திரவம்__________
விடை:பாதரசம்
3. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக
பயன்படுத்தும் காரணம்_______________
விடை:பாதரசம்
சீராக விரிவடைக்கிறது
4. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை________________________
விடை:37OC அல்லது 98.6OF
5.மருத்துவர்கள்_________ வெப்பநிலைமானியை
பயன்படுத்தி மனித உடல் வெப்பநிலையை அளவிடகின்றனர்
விடை:மருத்துவ
வெப்பநிலைமானி
6. வெப்ப ஆற்றலானது_______________ பொருளிலிருந்து__________
பொருளுக்கு
மாறுகிறது.
விடை:வெப்பமான , குளிர்ச்சியான
7. -10OC வெப்பநிலையானது 0OC வெப்பநிலையை விட_____________
விடை:குறைவு
8. அறை வெப்பநிலையில் பாதரசம்_________________  நிலையில் காணப்படுகிறது.
விடை:திரவ
பொருத்துக
1. நீரின் கொதிநிலை - 100 C
2. நீரின் உறைநிலை -0 C
3. வெப்பம்      - 
 ஆற்றல்               
4. மனித உடல் வெப்பநிலை- 37 OC