8 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-2
10 TH STD SCIENCE
அன்பார்ந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம் குரானா பிறந்தது காலமாக நீண்டநாட்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான புத்தக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 2 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய புத்தாக்க பயிற்சியைக் கட்டக வடிவில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி விடைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
செயல்பாடு-2 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
விண்மீன்களைப் பற்றியும் ,கோள்கள் மற்றும் அவற்றின் இயக்க நிலைகள் ,பகுதி பொருள்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு வானியல் எனப்படும். வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சந்திரன், விண்கற்கள் மற்றும் வால் மீன்கள் போன்ற பிற பொருள்கள் யாவும் வான் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன . சூரியனும் அதனைச் சுற்றி வருகின்ற வான்பொருளும் சேர்ந்து சூரியக் குடும்பத்தை உருவாகின்றன .கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட லட்சக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும். நமது சூரியன் பால்வெளி விண்மீன் திரள் என்ற விண்மீன் திரளை சார்ந்தது . இது போன்ற லட்சக்கணக்கான விண்மீன் திரள்கள் ஒன்று சேர்ந்து அண்டத்தை உருவாகின்றன. எனவே சூரிய குடும்பம் ,விண்மீன்கள், விண்மீன் திரள்கள் ஆகியவை அண்டத்தின் பகுதி பொருளாகும்.
கற்றல் விளைவுகள்
இயற்கை மற்றும்
செயற்கை நிகழ்வுகள் -இரவு வானத்தில் தோன்றும் விண்மீன் கூட்டங்களை அடையாளம்
காணுதல்.
இயற்கையாக
இருக்கக்கூடிய பொருள்களை வகைப்படுத்துதல்.
விண்மீன் திரள்கள்
மற்றும் அவற்றின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்
அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் போற்றுதல் - இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு செயல்பாடுகளை புரிந்து கொள்ளுதல்.
மதிப்பீடு
1.______________ தொலைநோக்கியை கண்டறிந்தார்.
விடை:ஹான்ஸ்
லிப்பர்ஷே
2. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன்
திரள்களுக்கு_ ______என்று பெயர்.
விடை:சுருள்
விண்மீன் திரள்
3. ஆகாயத்தின் பெரும்பகுதியை அடக்கியுள்ள விண்மீன்
மண்டலம்__________ ஆகும்
விடை:உர்சா மேஜர்
4.இந்தியா ஏவிய முதல் ஏவுகணை__________________
விடை:ஆரியபட்டா
5.பழைய நட்சத்திரங்கள் ;நீள்வட்ட விண்மீன் திரள்கள்
புதிய
நட்சத்திரங்கள்;___________________________
விடை:சுருள்
விண்மீன்த்திரள்
6.அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட
விண்மீன் திரள்கள்________
விடை:ஒழுங்கற்ற
விண்மீன் திரள்கள்
7.நிலையான சுற்றுப்பாதையில் கோள்களைச்சுற்றி
வரும் பொருளுக்கு__________என்று பெயர்.
விடை:துணைக்கோள்கள்
8._______________ பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி
ஆராய்ச்சி நிலையம்
விடை:.ISRO
9.ஜிஎஸ்எல்வி வாகனம்செயற்கைக்கோள்களை ____________________ வட்டப்பாதையில் வைப்பதற்கு உருவாக்கப்பட்டது.
விடை:புவிசார்