8 TH STD SCIENCE
REFRESHER COURSE ANSWER KEY-5
10 TH STD SCIENCE
அன்பார்ந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம் குரானா பிறந்தது காலமாக நீண்டநாட்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கான புத்தக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 2 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய புத்தாக்க பயிற்சியைக் கட்டக வடிவில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவ்வகையில் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி விடைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
செயல்பாடு-5 நம்மைச்
சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நிறை மற்றும் இடத்தை அடைக்கும் அனைத்துப்
பொருட்களையும் பருப்பொருள்கள் என நாம் அழைக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே
பருப்பொருள்கள் ஆகும். நாம் சுவாசிக்கும் காற்று , உண்ணும் உணவு , எழுதுகோல், மேகம், கற்கள் ,தாவரங்கள் ,விலங்குகள் ,ஒரு துளி நீர், மணல் கூறு ஆகிய அனைத்தும் பருப்பொருள்கள். நாம்
பார்க்கும் அல்லது உணரும் அனைத்தும் பருப்பொருள்கள் அல்ல.எடுத்துக்காட்டாக சூரிய
ஒளி ,ஒலி,விசை மற்றும் ஆற்றல் ஆகியன நிறை அற்றவை மற்றும்
இடத்தை அடைப்பவை இல்லை .எனவே இவை பருப்பொருட்கள் ஆகாது.
பொருள்களை
அவற்றின் பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துதல்
( எ கா ) உலோகங்கள் மற்றும் அலோகங்கள்
பண்புகளின்
அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்துதல்
வேதிச்
சேர்மங்களுகாண வேதிவாய்பாடு எழுதுதல்.
சரியான விடையைத்
தேர்ந்தெடு
1.கீழ்கண்டவற்றுள் உலோகக்கலவைபற்றிய எக்கூற்று
சரியானது?
1. உலோகக்கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட உலோகங்கள் கலவையாகும்
2)உலோகக்கலவை என்பது உலோகம் மற்றும் அலோகத்தின் கலவையாகும்.
3உலோகக்கலவையின் பகுதிப்பொருள்களை இயற்பியல்
முறைகளின் மூலம் பிரிக்க இயலாது.
4)இவை அனைத்தும் சரி.
விடை: உலோகக்கலவை
என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் கலவையாகும்
2.கீழ்க்கண்டவற்றுள் தூய பொருள் எது?
1)பால்
2) மரம் 3)கால்சியம் ஆக்சைடு 4)காற்று
விடை: கால்சியம்
ஆக்சைடு
3. கீழ்கண்டவற்றுள் சேர்மம் எது?
1) துருப்பிடிக்காத எஃகு 2)வெண்கலம் 3)கிராபைட் 4) கால்சியம் ஆக்சைடு
விடை:கால்சியம்
ஆக்சைடு
4.எண்ணெய் மற்றும் நீரை பிரிக்கும் முறை.
1)வாலை வடித்தல் 2.பதங்கமாதல் 3.பிரிபுனல் முறை
4.வண்ணப்பிரிகை முறை
விடை:பிரிபுனல்
முறை
5. காற்று ஒரு கலவையாகும் ஏனெனில்________________
1)மாறுபடும் அழுத்தம் 2)மாறுபடும் வெப்பநிலை 3)மாறுபடும் பருமன் 4)மாறுபடும் இயைபு
விடை:மாறுபடும்
இயைபு
கோடிட்ட இடங்களை
நிரப்புக
6)திட நிலையில் உள்ள பொருளின் தூய்மையை அதன்________________ ஐ கொண்டு அறியலாம்.
விடை:இயைபு
7) இரும்பு துருப்பிடித்தலுக்கு தேவையான
இன்றியமையாத காரணிகள் ________________மற்றும்________________
விடை:நிர் ,ஆக்சிஜன்
8)________________மற்றும்________________
பளபளப்பு
தன்மையுடைய அலோகம் ஆகும்.
விடை:வைரம்,கிராபைட்
9)வளிமண்டலத்தில் அதிக அளவு காணப்படும் வாயு________________
விடை:நைட்ரஜன்
10) அனைத்து தனிமநிலை வாயுக்கள் யாவும் ______________
முலக்கூறுகளாகும்.
விடை:ஓரணு
சரியா தவறா என
கண்டுபிடிப்பு
11) உலோகங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தும் ஆனால்
வெப்பத்தைக் கடத்தாது.
விடை:தவறு
12) உலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை வாய்ந்தவையாகும்
விடை:தவறு
13)வெப்பப்படுத்தும் போது பருப்பொருளின் நிறை
மாறாது?
விடை:சரி
14) திரவ நிலையில் உள்ள உலோகம் புரோமின் ஆகும்.
விடை:தவறு
15)தனிமங்கள் தூய பொருளின் எளிய வடிவம் ஆகும்.
விடை:சரி
பொருத்துக
a உலோகம்- நிக்கல்
b அலோகம் -சல்பர்
c உலோகப்போலி- ஆர்சனிக்
d ஓரணு மூலக்கூறு - ஆர்கன்
e சேர்மம்-சாதாரண உப்பு