10ஆம் வகுப்பு- பாடம் 2 -ஒளியியல்-முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள்

பத்தாம் வகுப்பு-பாடம் ஒளியியல் - முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள்


          ஒளியியல் பாடத்திற்க்கான வினாடி வினா இணைப்பு முக்கிய ஒரு             மதிப்பெண் வினாக்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாடம் ஒளியியல் - முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள்


1 காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன? 3X10^8 மீ/வி

2 ஒளியானது எந்த பண்புகளை பெற்றிருக்கும்? அலைநீளம் அதிர்வெண் இரண்டும்  

3 கண்ணுறு ஒளியில் குறைந்த அலை நீளத்தை  உடையது எது ?ஊதா 

4 கண்ணுறு ஒளியில் அதிக அலை நீளத்தை  உடையது எது ? சிவப்பு 

 5 ஒளிக்கதிர்  ஓன்று  ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஒளி புகும் ஊடகத்திற்கு சாய்வாக செல்லும்போது ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்வது? ஒளிவிலகல்

6 ஒளியின் திசைவேகம் அடர்வு குறைந்த ஊடகத்தில் எவ்வாறு இருக்கும்அதிகமாக 

7 ஒளியின் திசைவேகம் அடர்வு அதிக ஊடகத்தில் எவ்வாறு இருக்கும் குறைவாக

8   ஸ்நெல்  விதி ஒளிவிலகலின் எத்தனையாவது விதி ? இரண்டாவது

9 ஒளிவிலகல் எண் அதிகமாக உள்ள இடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வாறு இருக்கும்? குறைவாக

10 ஒளிவிலகல் எண் குறைவாக உள்ள இடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வாறு இருக்கும் ?அதிகமாக

11 கண்ணுறு ஒளியில்  மிகக்குறைந்த விலகு கோணத்தை பெற்ற நிறம் எது ?ஊதா

12 விலகுகோணமானது  ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைச் சார்ந்தது எனக் கூறும் விதி எது ?ஸ்நெல் விதி

13  ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எதனைச் சார்ந்தது  ? ஒளிக்கதிர்  அலைநீளத்தை ,ஒளிக்கதிர்யின் அதிர்வெண்ணை , ஒளிச் சிதறலை

 14 மீ ஒளிச்சிதறல் ஒளிக்கதிர்களை நிளத்தை சார்ந்தது ?சரியா? தவறா? - சரி

15 மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சியளிக்க காரணம் என்ன ? மீ ஒளிச்சிதறல்

16 ஒரு கூழ்ம கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால் ஒளிக்கதிர்கள் சித்தரிக்கப்படுகின்ற நிகழ்வு? டின்டால் விளைவு

17 ராமன் ஒளிச்சிதறலில் எவற்றில் மாற்றம் ஏற்படும்? ஒளிக்கதிரின் அலைநீளம், ஒளிக்கதிர் அதிர்வெண்

18 படுகதிரின் அதிர்வெண்ணுக்கு சமமான அதிர்வெண்ணை கொண்ட நிறமாலை வரிகள்? ராலே வரிகள்

19 புதிய அதிர்வெண்ணை கொண்ட நிறமாலை வரிகள் ? ராமன் வரிகள்

20 படுகதிரின் அதிர்வினை விடக் குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள்? ஸ்டோக் வரிகள்

21 படுகதிரின் அதிர்வெண்ணை விட அதிகமான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள்? ஆண்டிஸ்டோக் வரிகள்

22 கீழ்கண்டவற்றில் குவிலென்ஸின் பயன்பாடு என்ன?

ஒளிப்படக் கருவிகள் மற்றும் உருப்பெருக்கம் கண்ணாடிகள் ஆக பயன்படுத்தப்படுகின்றன,நுண்ணோக்கிகள்,தொலைநோக்கிகள், நழுவப்பட விழ்த்திகள் , தூரப்பார்வை என்ற பார்வை குறைப்பாட்டை சரி செய்யப் பயன்படுகிறது.

23 கீழ்கண்டவற்றில் குழி லென்சின் பயன்பாடு என்ன?

கலிலியோ தொலைநோக்கியில் கண்ணுருகு லென்சாக பயன்படுகிறது , வீட்டு கதவுகளில் ஏற்படும் உளவுத்துளைகளில் வெளியாட்களை பார்க்க பயன்படுகிறது. கிட்டப்பார்வை என்னும் பார்வை குறைபாட்டை சரி செய்ய பயன்படுகிறது.

24 லென்சு சமன்பாடு என்ன?

1/f=1/v-1/u

25 ஆடியின் சமன்பாடு என்ன?

1/f=1/v+1/u

26 பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு: உருப்பெருக்கம்

27 லென்சின் திறனின் சமன்பாடு என்ன? P=1/f

28 லென்ஸின் திறனின் SI அலகு என்ன? டயாப்டர் 

29 லென்சின் குவியத் தொலைவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? மீட்டர்

30. மனித விழியின் விட்டம் ஏறத்தாழ எவ்வளவு? 2.3 செ மீ 

31. கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் இடம் எது? கார்னியா

32 கண்ணின் நிறமுடைய பகுதி எது? ஐரிஸ்

33 ஐரிஸ் மையப்பகுதி எது? கண்பாவை

34 பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எதன் வழியாகவே விழித்திரையை அடைகின்றன? கண்பாவை 

35 பொருள்களின் தொலைவிற்கு ஏற்ப விழி லென்ஸ் தன் குவிய தூரத்தை மாற்றிக்கொள்ள உதவுவது எது சிலியரி தசைகள் 

36 தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு எந்த அளவில் இருக்கும்?  25 செ மீ 

37மையோபியா என்பது? கிட்டப்பார்வை

38 கிட்டப்பார்வை சரி செய்ய பயன்படுவது எது?  குழி லென்ஸ்

39 ஹெப்பர் மெட்ரோஃபியா என்பது? தூரப்பார்வை

40 தூரப்பார்வை குறைபாடு உடைய ஒருவர் அருகில் உள்ள பொருட்களை காண விரும்பினால் பயன்படுத்தப்பட்ட வேண்டிய  குவிலென்சின் குவியதூரம் என்ன? f=dD/d-D

41 பார்வை சிதறல் குறைபாட்டை உருளை லென்ஸ்களைக்கொண்டு சரி செய்யலாம். சரியா? தவறா? சரி

42 கைகடிகாரம் எழுது பார்ப்பவர்கள் ஆபரணங்கள் செய்பவர்கள், தடய அறிவியல் துறையில் கைரேகைகளை பகுத்தறிய பயன்படுவது எது? எளிய நுண்ணோக்கி

43 நகரும் நுண்ணோக்கி எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

? வெர்னியர் அளவி

44 முதன் முதலில் தொலைநோக்கி யாரால் உருவாக்கப்பட்டது? ஜோகன் லிப்ரஷே

45 விண்மீன்களை உற்றுநோக்குவதற்காக ஒரு தொலைநோக்கியை உருவாக்கியவர் யார்? கலிலியோ

46 கெப்ளர் எந்த ஆண்டு தொலைநோக்கியை உருவாக்கினார்? 1611

47. யாருடைய தொலைநோக்கி தற்காலக் வானியல் தொலைநோக்கியை ஒத்திருந்தது ? கெப்ளர்

48 கீழ்கண்டவற்றுள் ஒளிவிலகல் தொலைநோக்கிகளுக்கு எடுத்துக்காட்டு‌ எவை?கலிலியோ தொலைநோக்கி,கெப்ளர் தொலைநோக்கி,நிறமற்ற ஒளிவிலக்கிகள்

49 கீழ்கண்டவற்றுள் ஒளிஎதிரொளிப்பு தொலைநோக்கிகளுக்கு எடுத்துக்காட்டு எவை? கிரிகோரியன் ,நியூட்டன், கேஸ்கிரைன் தொலைநோக்கிகள்

50 வானியல் தொலைநோக்கியில் கிடைக்கும் இறுதி பிம்பம் எவ்வாறு இருக்கும்? தலைகீழ் பிம்பமாக

51 நிலப்பரப்பு தொலைநோக்கியில் கிடைக்கும் இறுதி பிம்பம் எவ்வாறு இருக்கும்? நேரான பிம்பமாக

52  கண்ணுறு ஒளியில்  மிகக்குறைந்த விலகு கோணத்தை பெற்ற நிறம் எது? சிவப்பு

வினாடி வினாவில் பங்குபெற





 


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post