வினாத்தாள்- 3 இந்திய அரசியலமைப்பு -முந்தைய வருட தேர்வு வினாக்கள் (51-75 )

இந்திய அரசியலமைப்பு முந்தைய வருட தேர்வு வினாக்கள் ( 51- 75 )


25 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

51.  ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது

 

 A) ஒரு வாசிப்பு

 

B) இரு வாசிப்புகள் 

 

C) மூன்று வாசிப்புகள்*

 

D) நான்கு வாசிப்புகள்

 

52. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும்  

 

1. மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதிமன்றமாகும்

 

II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றமாகும்

 

III. உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக்  குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்

 

IV. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு

 இக்கூற்றுகளில்

 

A) | மட்டும் சரி

 

B) 1 மற்றும் 11 சரி *

 

C) I, II மற்றும் III சரி

 

D) எல்லாம் சரி.



53. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் "சமதர்மம் மற்றும் சார்பற்ற" என்ற சொற்கள்

சேர்க்கப்பட்டது

 

A) 38வது திருத்தத்தால் 

 

B) 39வது திருத்தத்தால்

 

C) 41வது திருத்தத்தால் 

 

D) 42வது திருத்தத்தால் *

 

54.நிதி ஆணையம் குடியரசுத்தலைவரால் அமைக்கப்

படுவது

 

 A) 6 வருடங்களில் ஒருமுறை

 

B) 5 வருடங்களில் ஒருமுறை

 

C) 4 வருடங்களில் ஒருமுறை

 

D) 3 வருடங்களில் ஒருமுறை

 

55. தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு

இட ஒதுக்கீடு செய்யப்படுவது

 

A) 20 வருடங்களில் ஒருமுறை

 

B) 15 வருடங்களில் ஒருமுறை

 

C) 10 வருடங்களில் ஒருமுறை*

 

D) 5 வருடங்களில் ஒருமுறை

 

56. இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்

 

A) குடியரசுத் தலைவர்

 

B) துணை குடியரசுத் தலைவர் 

 

C) சபாநாயகர்

 

D) பிரதம மந்திரி*

 

57.இந்தியக் குடியரசுத் தலைவர்

 

 A) அரசாங்கத் தலைவர்

 

B) அரசின்தலைவர் *    

 

C) பாராளுமன்றத்தலைவர்

 

D) நீதித்துறை தலைவர்

 

58.  அமைச்சரவை உண்மையில்

பொறுப்புக் கொண்டது|

 

 A) மக்களவை*

 

B) குடியரசுத் தலைவர் 

 

C) மக்கள்

 

D) எதுவும்இல்லை 

 

59.இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ........ போன்றது

 

A) ஆஸ்திரேலியா 

 

B) கனடா*

 

C) அமெரிக்கா

 

 D) இரஷ்யா

 

60. மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரால்   நியமிக்கப்படும்  நியமன  உறுப்பினர்களின்  எண்ணிக்கை

 

A) 16

 

B) 14

 

C) 13

 

D) 12*



61. ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவது 

 

A) குடியரசுத் தலைவர்

 

B) முதலமைச்சர்

 

C) பாராளுமன்றம்

 

D) மாநிலச் சட்டமன்றம்*

 

குறிப்பு: 6 மாதங்களுக்குள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும்



62. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு

ஒருவர் ஆளுநராக செயல்பட முடியுமா?

 

A) ஆம்*

 

B) இல்லை 

 

C) மூன்று மாதங்களுக்கு மட்டுமே

 

D) ஆறு மாதங்களுக்கு மட்டுமே

 

63. மாநிலங்கள் அவையின் எண்ணிக்கை

 

A) 200 உறுப்பினர்கள்

 

B) 225 உறுப்பினர்கள்

 

C) 250 உறுப்பினர்கள்*

 

D) 300 உறுப்பினர்கள்

 

64.  நிர்வாகத்தை முழுவதும் கட்டுப்படுத்துவது

 

 A) மக்களவை

 

 B) மாநிலங்களவை

 

(C) இரு அவைகளும்

 

D) குடியரசுத் தலைவர்*



65. தற்போது தமிழகத்தில் உள்ளது

 

A) ஓரவைச் சட்டமன்றம்*

 

B) ஈரவை சட்டமன்றம்

 

C) மூன்றவைச் சட்டமன்றம்

 

D) இவற்றுள் எதுவுமில்லை

 

68. ஏறுவரிசை முறைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு:

 

A) துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள்*

 

B) இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கேபிளட் அமைச்சர்கள்

 

C) இராஜாங்க அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்

 

D) கேபிளட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்

 

66. இந்திய துணை குடியரசுத் தலைவர் தலைமை ஏற்று நடத்துவது

 

A) மக்களவையை 

 

B) மாநிலங்களவையை*

 

C) இரண்டையும்

 

D) மத்திய அமைச்சரவையை

 

67. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

 

A) பிரதம மந்திரி

 

B) குடியரசுத் தலைவர் *

 

C) முதலமைச்சர்

 

D) உள்துறை அமைச்சர்

 

68. முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பெயர்கள் கீழே உள்ளன. கீழே கொடுத்திருக்கும் குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

 

1. வி.வி. கிரி

 

]]. டாக்டர் ஜாகிர் உசேன்

 

III. பக்ருதின் அலி அகமது 

 

 IV. என். சஞ்சீவரெட்டி

 

 குறியீடுகள்:

 

A) I,II, III மற்றும் IV 

 

B) II, I, III மற்றும் IV*

 

C) III, IV, I மற்றும் II 

 

D) IV, III, II மற்றும் 1

 

69. லோக்பால் நிறுவனத்தை இந்தியா நிர்வாகத்திற்கு கொண்டுவர பரிந்துரைத்த ஆணையம்

 

A) கோர்வாலா

 

B) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்*

 

C) நிதி ஆணையம்

 

D) திட்ட ஆணையம்

 

70. ஆய்க : 

 

கூற்று (A): ஸ்டேட்  பாலிஸியின்  முக்கியமான கொள்கைகள் ஐரிஷ் அரசியல் சட்ட திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

காரணம்(R):பி.என்.ராவ் தனது அரசியல் மாதிரியை (constitutional precedents)

நிரூபிக்க நீதிக்கும், அநீதிக்கும் இடையே உள்ள உரிமைகளை ஜரிஷ் உதாரணத்தை மேற்கொள்ள காட்டியுள்ளார். 

 

உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:

 

A) (A) மற்றும் (R) சரியானவை  (R) என்பது (A) யின் சரியான விளக்கம்

 

B) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) யின் சரியான விளக்கம் அல்ல.*

 

C) (A) சரியானது ஆனால் (R) தவறானது. 

 

D) (A) தவறானது ஆனால் (R) சரியானது

 

71. மாநிலங்களவையின் உதவித் தலைவர் (1996ல்)

 

A) நஜ்மா ஹெப்துல்லா*

 

 B) மேனகா காந்தி

 

(C) கே. ஆர். நாராயணன் 

 

D) P.A. சங்கமா 

 

குறிப்பு: 2004லிருந்து திரு. K.ரகுமான்கான்



72. ஆய்க :

 

கூற்று (A): இந்திய அரசியல் சட்டப்படி

ஜனாதிபதிக்கு அவசரகாலநிலை

பிரகடனம் செய்வதற்கு அதிகாரம் உண்டு.

 

காரணம்(R):அவசர காலநிலையின்

போது ஜனாதிபதிக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.

 

உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:

 

A) (A) மற்றும் (R) சரியானவை (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

 

B) (A) மற்றும் (R) சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல *

 

C) (A) சரி ஆனால் (R) தவறு

 

D) (A) தவறு மற்றும் (R) சரி

 

73. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்த நாள்

 

A) ஜனவரி 26, 1948

 

B) ஜனவரி 26, 1950 *

 

C) ஜனவரி 26, 1952

 

 D) ஜனவரி 26, 1954

 

74.  இந்திய அரசியலமைப்பு சட்டம் 

 

A) நெகிழாதது 

 

B) நெகிழக்கூடியது

 

C) பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும்*

 

D) இவற்றுள் எதுவுமில்லை



75.  இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களிலேயே நீண்டது

 

A) 24வது திருத்தம்

 

B) 30வது திருத்தம் 

 

C) 42வது திருத்தம்*

 

D) 44வது திருத்தம்



சிறப்பு வினாடி வினாவில் பங்குபெற





 

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post