முதல் திருப்புதல் தேர்வு 2024
இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
|
இ. இன்மையிலும் விருந்து |
1 |
|
|
அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது |
1 |
|
|
இ. அறியா வினா , சுட்டு விடை |
1 |
|
|
அ. வேற்று மொழியார் |
1 |
|
|
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
|
|
ஆ. கருத்த மேகம் மலைமீது மலையைப் பொழிய ஆறு, ஏரி,குளம் அனைத்தும் நீரால் நிரம்பின. |
1 |
|
|
ஆ. பாடினார் கவிஞர் |
1 |
|
|
இ. உருவகம் |
1 |
|
|
ஈ. இலா |
1 |
|
|
இ. சப்பாணி |
1 |
|
|
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
|
|
ஆ. மயங்கச்செய் |
1 |
|
|
அ. ஆக்சிஜன் |
1 |
|
|
ஆ. விளித்தொடர் |
1 |
|
|
அ. நீர் + அலைகளின் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
16 |
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல்
உண்டு நான் எழுதுவதற்கு ஒரு காரணம்
உண்டு |
2 |
|
17 |
சரியான
வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
18 |
மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த
,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே
மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும். |
2 |
|
19 |
ஏளனம்
செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால்,
(இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும். |
2 |
|
20 |
v பாசவர்
– வெற்றிலை
விற்போர் v வாசவர்
– நறுமணப்பொருள்
விற்பவர் v பல்நிண
விலைஞர்
– பல்வகை
இறைச்சிகளை விலைகூறி விற்பவர் v உமணர்
– உப்பு
விற்பவர் |
2 |
|
21 |
பல்லார் பகைகொளலின்
பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. புதுமை ஆ.
காடு |
2 |
|
23 |
(மாதிரி விடைகள்) ü தேன்
குடி ü நூல்
படி ü பை
எடு ü மலர்
கொய் ü வா
போகலாம் |
2 |
|
24 |
வெட்சி – கரந்தை , வஞ்சி – காஞ்சி, நொச்சி - உழிஞை |
2 |
|
25 |
அ.
மீண்ட துயர் ஆ. புயலுக்குப் முன் |
2 |
|
26 |
அ. உயிரெழுத்து ஆ. கலந்துரையாடல் |
2 |
|
27 |
ஒலித்து
- ஒலி +த்+த்+உ ஒலி - பகுதி; த் -சந்தி; த்- இறந்தகால
இடைநிலை; உ - வினையெச்ச விகுதி |
2 |
|
28 |
கூத்துக்கலைஞர்
பாடத்தொடங்கியதும்,
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
# மறைகாணி எல்லாப் பக்கமும்
திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது. # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல்
புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட்டுள்ளது. |
3 |
|
30 |
அ. மொழி பெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஆ. இரவீந்தரநாத் தாகூர் இ. எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு |
3 |
|
31 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை
கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர மாநிலம்
பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்
கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
|
32 |
|
3 |
|||||||||||||||
|
33 |
ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற
காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் ,
நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக
அமைந்தவரேஅமைச்சராவார். |
3 |
|||||||||||||||
|
34 |
|
3 |
|||||||||||||||
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
வினா
6 வகைப்படும். அவை: 1. அறி வினா 2.அறியா வினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது.
இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது
கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள்
வரவேண்டாம் எனக் கூறி, கையசைப்பதாகக்
தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4 5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
|
38 அ. |
மனோன்மணியம்
சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
5 |
|
39
|
அ) மற்றும் ஆ)
ஆகிய வினாக்களுக்கு ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின் உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
42
அ. |
(
மாதிரி விடை) 1. குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2. உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3. விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4. நூல்களைப் படித்தல். 5.
திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன்
பயன்பாட்டை குறைக்கச் செய்தல். ஆ) தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர்
கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில், கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப்
புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப்
பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
திருக்குறளுக்கு,
"குறளோவியம்"
எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு
கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு
ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி
திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார். |
5 |
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) விருந்தினரை வரவேற்றல்: என்னுடைய
இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம்
விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு
உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன். வாழை இலையில் விருந்து: தலைவாழை
இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு
உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும்
வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன். உறவினரின்
மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப்
பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு
உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன்.
கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு
உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும்
கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். ஆ) பன்முகக் கலைஞர் முன்னுரை: பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர்: தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை
ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார். பேச்சுக் கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை
வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க
சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக் கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை
எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு
விழாவில் “ கலைஞர் ” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக
வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று
விளங்கினார். இயற்றமிழ்க்
கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய
ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர்
கலைஞர் கருணாநிதி. |
8 |
|
44 |
அ. முன்னுரை: ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று
மேளமும்,நாகசுரமும் வேகமாக
ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம்
திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார்
பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்
புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின் உதவி: சிறிது நேரம்
கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில்
சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.
அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று
நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம்: அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார் போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில் சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக ஆடினான். அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான்.
பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று,
வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார். முடிவுரை: “என்னலே, எனக்கே
பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்
கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க
வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான். ஆ.
முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய
அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
8 |
|
45 |
அ. அண்மையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்த
கட்டுரை முன்னுரை: தமிழகத்தின்
பதின்மூன்று கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக புயல் மற்றும் வெள்ளத்தால்
பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கடந்த காலத்தில் பல புயல் சீற்றங்கள் பெரும் சேதத்தை
ஏற்படுத்தியுள்ளன. புயல்: ஒரு புயலானது தோன்றும் நிலை
வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக
மூன்று நிலைகளில் நடக்கிறது. கடற்பரப்பில் 26° செல்சியஸ்க்கு அதிகமான
வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது காற்று வேகமாக வெப்பமடைந்து மேல்நோக்கிச்
செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து
வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக் காற்று
குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதன் காரணமாக தாழ்வுநிலை
உண்டாகி அதனால் அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையே காற்றழுத்த தாழ்வு
நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம்
அதிகரித்து புயலாக உருமாறுகிறது புயல் எச்சரிக்கை கூண்டுகள்: புயல் வீசும் போது பெரிதும்
பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப்பகுதிகளாகும். ஆகையால் துறைமுகங்கள், துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள், கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்கள் மற்றும் மீனவர்களுக்கு புயல்
தொடர்பான எச்சரிக்கை விடுக்க பயன்படும் சிக்னல்களே புயல் எச்சரிக்கை கூண்டுகள்
ஆகும். இதற்காக
கடலில் இருந்து காண ஏதுவாக துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில்
கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிவப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். இந்த
எச்சரிக்கை கூண்டுகளில் 11 நிலைகள் இருக்கின்றன.
நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகும். இந்த
நிலைக்கு இந்த கூண் இந்த கூண்டு என்பதனை இந்திய வானிலை மையம் தீர்மானித்து
வைத்துள்ளது. தமிழகத்தில் புயல்: பெஞ்சல் புயல் என்பது
வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். இந்த பெயரை சவூதி அரேபியா பரிந்துரை
செய்தது. வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. நவம்பர் 30 அன்று இரவு வேளையில் புதுச்சேரிக்கு அருகே
கரையைக் கடந்தது. பாதிப்பு: பெஞ்சல் புயல்
வட மாவட்டங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம்,
திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள்
வரலாறு காணாத மழையையும், வெள்ளப்பெருக்கையும் கண்டன. சென்னை
பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளில் நீர் சூழ்ந்ததால் தனது பயணச் சேவையை நிறுத்தியது. மேலும்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள கல்லூரி, பள்ளிகள்
தொடர்ந்து சில சில நாட்கள் விடுமுறை அறிவித்தன. தென்னக இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் ஆகியவற்றின் பல் வேறு
தொடருந்துகள் நிறுத்தப்பட்டன.சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகள், சிறு மற்றும் குறு தொழில்கள் வெள்ள நீராலும் மின்தடையாலும் பெரிதும்
பாதிப்பிற்குள்ளாகின ஆந்திராவில் பல விளை நிலங்களும் பயிர்களும் இந்த புயலால்
பாதிக்கப்பட்டன. புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்: வானிலை மையம்
புயல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் போது பேரிடர்களில் இருந்து
காத்துக்கொள்ள அதற்கான முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியமாகிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். புயல் தாக்கும் நேரங்களில் வீட்டில்
உள்ள மின்சார உபகரணங்களை பொரு நிறுத்தி விடுதல் வேண்டும். அத்துடன் அ அத்துடன்
அத்தியாவசிய அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்து கொள்ளுதல் சிறந்தது. புயல்
பாதிப்பு இல்லை என்று அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்வதை
தவிர்க்க வேண்டும். முடிவுரை: புயலின் போது உண்டாகும் பலத்த
சூறாவளி காற்று, கடல் சீற்றம் மற்றும் கனமழை
ஆகியவற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. புயல் ஏற்படின் பாதிப்பிற்கு
உள்ளாகும் மாவட்டங்கள் குறித்தும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள்
குறித்தும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் தகவல்களை கருத்தில் கொண்டு செயற்படுவதனூடாக
பேரிடர் கால ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும். ஆ. தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு
வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு"
என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில்
அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக் கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக் கூடாது. மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி
குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை,
முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில்
ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
|