10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி முதல் அலகு தேர்வு


10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி முதல் அலகு தேர்வு - ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வருகின்ற 25ஆம் தேதி முதல் அலகு தேர்வுகளை நடத்திட ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

அலகு தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் பாடப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வு நடைபெறும் நாள் என்று பிற்பகல் 2 மணிக்கு அந்தந்த பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து உரிய ஆசிரியர்களுக்கு கொடுத்து எவ்வித புகார் இருக்கும் இடமில்லாமல் தேர்வினை நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செயல் முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      மேலும் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்து மாணவர்களின் மதிப்பெண்களை தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் பள்ளியில் ஆய்வு அலுவலர்களின் பார்வை மற்றும் ஆய்வின் போது பதிவேடுகள் கட்டாயம் ஆய்வு அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் செயல் முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 பத்தாம் வகுப்பு பொருத்தவரை அவர்களுக்கு 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அலகு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 25ஆம் தேதி திங்கள்கிழமை மொழிப்பாடம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில பாடம் 27ஆம் தேதி புதன்கிழமை கணித பாடம் 28ஆம் தேதி விழாவின் கிழமை அறிவியல் பாடம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் என்று ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

10th Unit Test Time Table July 2022

     மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையும் கீழே வழங்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

   ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் இதேபோன்று அலகு தேர்வுக்கான செயல்முறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது கூடுதலாக இராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலரும் வெளியிட்டுள்ளார் மேலும் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இவ்வாறு வெளியிடப்படும் பட்சத்தில் நமது டெலிகிராம் குழுவில் அறிவிப்புகள் கட்டாயம் பதிவிடப்படும் எனவே இதுவரை நமது டெலிகிராம் குழுவில் இணையாத ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் தயவு கூர்ந்து நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும். டெலிகிராம் குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 

Telegram Group Link


Click Here 





Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post