ஈ.வெ.ராமசாமியின் நினைவு தினம்
🍁டிசம்பர் 24- தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்படும் ஈ.வெ. ராமசாமியின் நினைவு தினம்
🍁#பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.
🍁இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
🍁இவரின் குடும்பத்தினர்
தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்.
🍁பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது
🍁சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்" என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
✍️Important points :
🍃கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.
🍃வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது
🍃1925-ம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’ தொடங்கினார்.
🍃1937-ம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938-ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
🍃1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார்.
🍃தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.
🍃இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
🍃1921 இல் ஈரோடு
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார்.
✍️முக்கிய இதழ்கள்
🍀குடியரசு இதழ்
1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.
🍀புரட்சி வார இதழ் 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது
🍀ரிவோல்ட் (Revolt) ஆங்கில வார இதழ் 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது
🍀விடுதலை நாளிதழ் 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
🌿தந்தை பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’ 1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வழங்கப்பட்டது.
🌿இவர் பகுத்தறிவு பகலவன், ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
✨உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94 வது வயதில் காலமானார்.
