அதிகாரம் : தவம்
குறள் : 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
மு. வரதராசன் உரை:
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
ஜனவரி 6 :
வரலாற்றில் இன்று ...
1929 ஆம் ஆண்டு, அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1930 ஆம் ஆண்டு, முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.
1936 ஆம் ஆண்டு, கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு, உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
1989 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1955 ஆம் ஆண்டு,ஹாலிவுட் நடிகர் "Mr Bean" ரோவன் அட்கின்சன் பிறந்தார்.
1959 ஆம் ஆண்டு,இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பிறந்தார்.
1967 ஆம் ஆண்டு,இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் ஏ. ஆர். ரகுமான் பிறந்தார்.
🎶January 06 - A. R. Rahman
🎶Oscar நாயகன் A R ரஹ்மான் இவரின் பிறந்தநாள் இன்று
🎶இவரின் இயற்பெயர்
A. S. Dileep kumar
🎶பிறப்பு: 6 January 1967
🎶புகழ் பெற்ற இந்தியத்
திரைப்பட இசையமைப்பாளர்
🎶மணிரத்னம்
இயக்கத்தில் வெளிவந்த
ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
🎶இசைப்புயல் , Mozart of Madras என அழைக்கப்படுகிறார்.
🎶ஸ்லம் டாக் மில்லியனியர்
(Slumdog Millionaire)
என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதை 2009 இல் பெற்றார்.
🎶2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.
🔥Awards
🎶In 2010, the Indian government conferred him with the Padma Bhushan, the nation's third-highest civilian award.
🎶Academy Award - Best Original Score and Best Original Song at the 81st Academy Awards.
🎶2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
🎶National Awards
👉1992 - Roja
👉1996 - Minsara Kanavu
👉2001 - Lagaan
👉2002 - Kannathil Muthamittal
👉2017 - Kattru Veliyidai
👉2017 - Mom
🎶grammy Awads
👉2009 - Slumdog Millionaire
🔥Brand Ambassador
🎶In January 2018, He has been appointed as the Brand Ambassador of the Sikkim government.
🎶AR Rahman appointed ambassador of Indo-UK culture platform
🔥Important Updates
🎶கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள தெரு ஒன்றுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
🎶ரஹ்மானின் சுயசரிதை ‘Notes of a Dream’ என்ற பெயரில் புத்தகமாகி உள்ளது.
🎶ரஹ்மானின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. நாடி நரம்புகளில் நாட்டுப்பற்று முறுக்கேற்ற அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக திகழ்ந்தது அது.
🎶கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கலைஞர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.
🎶ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவான திரைப்படம்
'99 சாங்ஸ்'
🎶ஐ.நா. சபையில் 2016 இல், AR Rahman இசை கச்சேரி நடத்தினர்
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966-ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று சர்வதேச வேட்டி நாள் அனுசரிக்கப்படுகியது