வரலாற்றில் இன்று ... 07-01-2023

வரலாற்றில் இன்று ... 

07-01-2023


 அதிகாரம் : தவம்

குறள் : 268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

மு. வரதராசன் உரை:

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

ஜனவரி 7 :

வரலாற்றில் இன்று ...

1927 ஆம் ஆண்டு, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1939 ஆம் ஆண்டு, மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.

1954 ஆம் ஆண்டு, இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1938 ஆம் ஆண்டு,தென்னிந்தியத் திரைப்பட நடிகை பி. சரோஜாதேவி பிறந்தார்.

1953 ஆம் ஆண்டு,தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் பிறந்தார்.

1967 ஆம் ஆண்டு,இந்திய நடிகர் இர்பான் கான் பிறந்தார்.

1972 ஆம் ஆண்டு,தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர் எஸ். பி. பி. சரண் பிறந்தார்.

1976 ஆம் ஆண்டு,தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர் ஹரிஷ் ராகவேந்திரா பிறந்தார்.

1979 ஆம் ஆண்டு,இந்திய நடிகை பிபாசா பாசு பிறந்தார்.

இன்றைய விரிவாக்கம் :

CNG --- Compressed Natural Gas.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post