இன்றைய நடப்பு நிகழ்வுகள் - 17/5/2023


இன்றைய நடப்பு நிகழ்வுகள் - 17/5/2023


 தேசியம் :- 


Card image cap

  • ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ததுள்ளது.

கொலீஜியம் முறை

  • கொலீஜியம் என்பது இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளைக் கொண்டுள்ள அமைப்பாகும்.
  • உயர் நீதிமன்றங்களுக்கும்உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும்இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலீஜியம்.
  • கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1993(இரண்டாவது நீதிபதிகள் வழக்கு)
  • உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 34
  • தற்போதுள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 32
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 124(2)
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்- குடியரசு தலைவர்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது - 65

தமிழகம் :-

Card image cap

  • தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப் பகுதியிலும்கோவில்பட்டி அருகே உள்ள குருமலை பகுதியிலும் முத்து செதில் பல்லி என்ற புதிய வகை பல்லி இனம் கண்டறியப்பட்டு உள்ளது.
  • இது ‘ஹெமிடாக்டைலஸ் குவாா்ட்சிடிகோலஸ்’(Hemidactylus quartziticolus) என்ற அறிவியல் பெயருடையது.
  • உலகளவில் இது 53 -வது பல்லி வகையாகச் சோ்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 37 வகை பல்லி இனங்கள் காணப்படுகின்றன.

 

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்


Card image cap
  • விமானப்படையின் துணைத் தளபதியாக ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
  • இந்தப் பதவி விமானப்படையின் தளபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூன்று நட்சத்திர அதிகாரிக்கான பதவியாகும்.

இந்திய விமானப்படை

  • நிறுவப்பட்ட ஆண்டு: அக்டோபர் 8,1932
  • தற்போதைய தலைவர்: விவேக் ராம் சவுதாரி

Card image cap
  • ஒன்றிய பணியாளர் தேர்வாணையக்குழு(UPSC)-யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி மே 16 அன்று பதவி ஏற்றார். அவருக்கு UPSC-யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும்ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
  • UPSC-யில் ஒரு தலைவரும், 10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கலாம். தற்போது அதில் 5 உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

UPSC- வரலாற்றுப் பார்வை

  • இந்தியாவில் அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாவதற்கான வித்து மார்ச் 5, 1919 அன்று நடப்பட்டது. 
  • அப்போது அரசு அறிவித்த முதல் அரசமைப்பு சீர்திருத்தங்களில் சில நிரந்தரமான அரசு பணிகளுக்கு ஒழுங்குமுறைகளுடன் கூடிய நியமன முறையின் தேவை உணரப்பட்டுஇதற்கான நிரந்தர பணி ஆணைய அமைப்பினை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
  • இதன்படி அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்க இந்திய அரசாங்கச் சட்டம், 1919 உறுப்பு 96(சி) வழிவகுத்தது.
  • இதன்படி ஆளுநர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு செயலர் உருவாக்கும் விதிகளின்படி இந்திய அரசு பணியாளர்கள் நியமனங்களும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என அச்சட்டம் தெளிவுபடுத்தியது.
  • சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,தேர்வாணையம் அமைப்புசெயல்பாடுகள்,குறித்து பல மட்டங்களில் தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
  • தொடர்ந்து தீர்வுகாண லீ ஆணையம் என அழைக்கப்படும் ராயல் ஆணையம் உருவாக்கப்பட்டது. லீ ஆணையம் தமது அறிக்கையை 1924-இல் வழங்கியது.
  • ஒரு சட்டப்பூர்வ அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசாங்கச் சட்டம், 1919-இன் படி தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என ஆணையம் ஆணையிட்டது.
  • இந்திய அரசாங்கச் சட்டம் 1919 உறுப்பு 96(சி) படியும்உடனடியாக தேர்வாணையம் அமைக்க லீ ஆணையம் ஆணையிட்டதன்படியும் இந்தியாவில் முதல் முறையாக அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அக்டோபர் 1, 1926-இல் அமைக்கப்பட்டது.
  • இந்த ஆணையம் ஒரு தலைவரும் நான்கு உறுப்பினர்களும் கொண்டிருந்தது.
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்துறை குடிமைப் பணிகள் உறுப்பினர் சர்ராஸ் பார்க்கர் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • இந்திய அரசாங்கச் சட்டம்,1935 மேலும் விரிவு படுத்தப்பட்ட கூட்டாட்சி(Federal) மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் உருவாக வழிவகுத்தது.
  • இதன்படி அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட்டாட்சி (Federal) பணியாளர் தேர்வாணையமாக ஏப்ரல் 1,1937-இல் மாறியது.
  • இந்திய அரசமைப்பு செயல்முறைக்கு வந்த ஜனவரி 26, 1950 அன்று கூட்டாட்சி பணியாளர் தேர்வாணையம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) என பெயர் மாற்றப்பட்டது. அரசமைப்பு உறுப்பு 378 (1)-இன் கீழ் கூட்டாட்சி பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்உறுப்பினர்கள் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களாக ஆனார்கள்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சட்டப்பூர்வ கடமைகள்

  • ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசமைப்பு உறுப்பு 315-இன் படி உருவாக்கப்பட்ட அரசமைப்பு நிறுவனம் ஆகும்.
  • தேர்வாணையம் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர், 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
  • போட்டித்தேர்வுகள்நேர்முகத் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் நியமனம்பதவி உயர்வு மற்றும் அயல்நாட்டுப் பணி மாறுதல்களுக்கான பொருத்தமான அறிவுரைகள் வழங்குவது,

பல்வேறு அரசு பணிகள் நியமனங்கள் குறித்து அரசு கோரும் ஆலோசனைகள் வழங்குவதுநியமன விதிகள் உருவாக்கம்திருத்தம் மேற்கொள்வதுபல்வேறு குடிமைப்பணிகளுக்கான நடத்தை விதிகள் உருவாக்குவதுகூடுதல் சிறப்பு நிலை ஓய்வூதியம்வழக்குச் செலவுகள் அளித்தல் போன்ற விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதுவிளக்கம் கோரி குடியரசு தலைவர் மற்றும் மாநில அரசுகளின் ஆளுநர்கள் அனுப்பும் விவரங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுபணி நியமனம் தொடர்பாக அரசு கோரும் அனைத்து விவரங்களையும் வழங்குவது ஆகிய பணிகளை தேர்வாணையங்களுக்கு அரசமைப்பு பொறுப்பளித்துள்ளது.

தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்

  • ஒவ்வொரு உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை (இரண்டில் எது முதல் நிகழ்வோ அதுவரை) பதவியில் இருக்கலாம்.

 

பதவி நீக்கம்

  • உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கு எந்நேரமும் தம் பணிவிலகல் விண்ணப்பத்தை அளிக்கலாம்.
  • தவிரஉறுப்பினரின் தவறான நடத்தையின்(அத்தகைய நடத்தை விசாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்) காரணமாக  குடியரசுத்தலைவர் அவரை பணிநீக்கம் செய்யலாம். உச்ச நீதிமன்றம் இந்த

விவகாரத்தில் வழங்கும் ஆலோசனை குடியரசுத்தலைவரின் முடிவைக்கட்டுப்படுத்தும்.

  • பதவி நீக்கத்தின் காரணங்கள்,

 

      • நொடித்துப்போதல் அல்லது கடனில் மோசடி
      • தனது அலுவலகப் பணிகளுக்கு வெளியே ஊதியம் பெறும் ஊழியராகப் பணியாற்றும் போது
      • உடல் நலம் குறைவு காரணமாக ஒருவரால் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என குடியரசுத்தலைவர் கருதும்போது

சுதந்திரத் தன்மை

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் பாகுபாடான செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும் அரசமைப்பு உறுப்புகளில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு:

  • அரசமைப்பில் கூறப்பட்டுள்ள முறைகளில் அல்லது வழிகளில் நடந்துகொண்டால் மட்டுமே தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நீக்க முடியும். இதனால் அவர்கள் பதவிக்காலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
  • தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணி நிலைகள் குடியரசு தலைவரால் முடிவு செய்யப்படுகின்றன எனினும் பதவி நியமனத்துக்குப் பின்னர் அவரது சாதகமற்ற நிலைமைக்கு ஏற்ப மாறுதல் செய்ய இயலாது.
  • தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம்சலுகைகள்ஓய்வூதியம் என அனைத்தும் அரசின் தொகுப்பு நிதியில்(Consolidated Fund of India) இருந்து வழங்கப்பட வேண்டும்.
  • தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாணையத்தில் ஒரு முறை பதவி வகித்த பின்னர் மீண்டும் அதே பதவியில் மறு நியமனம்செய்யப்பட முடியாது. அதாவது இரண்டாவது முறை அப்பதவியில் நியமிக்கப்பட முடியாது.

அரசமைப்பு சட்டப்பிரிவுகள்

சட்டப்பிரிவு 315

 ஒன்றியமாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்

 

சட்டப்பிரிவு 316

 

உறுப்பினர் நியமனம்பதவிக் கால வரம்பு

சட்டப்பிரிவு 317

 

தேர்வாணையம் உறுப்பினர் நீக்கம் மற்றும் இடை நீக்கம்

சட்டப்பிரிவு 318

 

தேர்வாணையம் உறுப்பினர்கள்ஊழியர்களுக்கான ஒழுங்குமுறைகளை உருவாக்குதல்

சட்டப்பிரிவு 319

 

நடவடிக்கைக்குள்ளாகும் உறுப்பினர்கள் பணியில் தொடர்வதைத் தடுத்தல்

சட்டப்பிரிவு 320

 

தேர்வாணையம் பணிகள்

சட்டப்பிரிவு 321

 

தேர்வாணையம் பணிகளை விரிவாக்கம் செய்யும் அதிகாரம்

சட்டப்பிரிவு 322

 

தேர்வாணையம் செலவினங்கள்

சட்டப்பிரிவு 323

 

தேர்வாணையம் அறிக்கைகள்

 

அனைத்து இந்தியப் பணிகள்(All India Services) - சட்டப்பிரிவு 312

  • அனைத்து இந்தியப் பணிகள் மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவாக உருவாக்க வேண்டும் என அரசமைப்பு சட்டப்பிரிவு 312 கூறுகிறது.
  • அனைத்து இந்தியப் பணிகள் சட்டம் 1951மூலம் அனைத்து இந்தியப் பணிகளுக்கான நியமன விதிமுறைகள் மற்றும் பணி நிலைமை குறித்து ஒன்றிய அரசு விதிமுறைகளை உருவாக்கலாம்.
  • தற்போது இந்தியாவில் மூன்று அனைத்து இந்திய பணிகள் உள்ளன. அவைகள் முறையே
  • இந்திய ஆட்சிப் பணி (IAS)
  • இந்தியக் காவல் பணி(IPS)
  • இந்திய வனப் பணி(IFoS)

முக்கிய நாட்கள் :-



Card image cap
  • தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865 ஆம் ஆண்டு மே 17- ஆம் தேதி பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது.
  • பின்புஉலகத் தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகத் தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளை தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துதல்

Card image cap
  • உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிவதுவராமல் தடுப்பதுநோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும் 2005-ஆம் ஆண்டு முதல் மே 17- ஆம் தேதி சர்வதேச உயர் ரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் 'உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடவும்அதை கட்டுப்படுத்தவும்நீண்ட காலம் வாழவும்' என்பதாகும்.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post