இன்றைய நடப்பு நிகழ்வுகள் - 18/5/2023

    

இன்றைய நடப்பு நிகழ்வுகள் - 18/5/2023     

தேசியம்:- 


             Card image cap

  • டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கமான தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதை நிறைவேற்றும் விதமாக மத்திய தொலைத்தொடர்புரயில்வேமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.
  • Centralized Equipment Identity Register (CEIR) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில்உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும்.
  • https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.



Card image cap
  • தேசிய அளவிலான சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கவுன்சிலா்கள் மாநாட்டை ‘NLC-பாரத்’ என்ற அமைப்பு மும்பையில் ஜூன் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
  • இந்த அமைப்பில் நாடு முழுவதிலுள்ள பல்வேறு மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • மாநிலங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்அவற்றை எதிா்கொண்ட விதம்நிலைத்தன்மை சாா்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல்வேறு மாநில சட்டப்பேரவை உறுப்பினா்களும்கவுன்சிலா்களும் பரிமாறிக்கொள்வதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

முக்கிய தகவல்கள்

  • இந்தியாவில் உள்ள மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை : 4123
  • பட்டியலினத்தை சார்ந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை1169
  • 50 வயதுக்குட்பட்ட ஆண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை: 1159
  • 50 வயதுக்குட்பட்ட பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை: 170
  • எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட மாநிலம்: உத்திர பிரதேசம்(403)

தமிழகம் :-



Card image cap
  • நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர்சிவகளைமற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது  கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைகிறது.
  • பொருநை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முந்தையது(கி.மு.1155)
  • ஆதிச்சநல்லூரில் முதலில் அகழாய்வு செய்தவர் - ஜெர்மானிய டாக்டர் ஜோகர்(1876).
Card image cap
  • தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017விலங்குகளுக்கு ஏற்படும் வலியையும் துன்பத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
  • இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை வழங்கக்கூடிய சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் தமிழக அரசின் சட்ட திருத்தம் இல்லை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வுஇந்த சட்ட திருத்தத்தில்மாநில சட்டமன்றம் ஒரு விவகாரத்தில் சட்டம் ஏற்றுவதற்கான அதிகாரத்தை மீறும் வகையில் எந்த விஷயமும் இல்லை என தெரிவித்தது.
  • ஜல்லிக்கட்டை கலாச்சார உரிமையாக பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 29(1)
 நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்



Card image cap
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகவும்நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய அமைச்சர்கள் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு :75


முக்கிய நாட்கள் :-


Card image cap
  • சர்வதேச அருங்காட்சியக தினம்ஆண்டு தோறும் மே 18-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்விழிப்புணர்வை ஏற்படுத்தவும்1977-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Museums, Sustainability, and Well-being.”
  • நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும்.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post