இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 19/05/2023

       இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 19/05/2023


தேசியம் :-

          Card image cap

  • பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்

  • புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன.
  • 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
  • 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம்நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
  • நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பு அகமதாபாத்தின் HCP டிசைன் வழங்கியது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் Council House என்று அழைக்கப்பட்ட தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம்வைஸ்ராய் லார்ட் இர்வினால் ஜனவரி 18,1927-இல் திறக்கப்பட்டது.(சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது)



Card image cap
  • ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடிஹவுரா-புரி இடையிலான `வந்தே பாரத்ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
  • ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

சர்வதேசம் :-



Card image cap
  • மவுலவி அப்துல் கபீரை ஆப்கானிஸ்தானின் பிரதமராக தலிபான்கள் நியமித்திருக்கிறார்கள்.
  • 2020-ஆம் ஆண்டு தோஹா ஒப்பந்ததத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலிபான்கள் குழுவில் முக்கியமாக பங்காற்றியவர் அப்துல் கபீர்.
தமிழகம் :-



Card image cap
  • தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஆர்.பழனிகுமாரை மீண்டும் அதே பதவியில் நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவரின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு மார்ச் 9-அம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: ஜுலை 15,1994.
  • மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பவர் – ஆளுநர்
  • இந்திய அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள், 1992-இன் கீழ் நிறுவப்பட்ட சுதந்திரமானதன்னாட்சியுடைய ஒரு சட்டபூர்வ அமைப்பு.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 243-K மற்றும் சட்டக்கூறு 243-ZA -இன் கீழான அரசியலமைப்பு சார்ந்த அதிகார அமைப்பே மாநில தேர்தல் ஆணையமாகும். மேலும்இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 239 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
  • ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அனைத்துத் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புவழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே நடத்தப்படும்.
  • உள்ளாட்சி மொத்த பதவியிடங்களில்  பெண்களுக்கன இடஒதுக்கீடு-  50 சதவீதம்
  • உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு வாக்காளர் அளிக்கும் அதிகபட்ச வாக்குகள் - ஊரக உள்ளாட்சிகளில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளும்நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வாக்கும் பதிவு செய்யலாம்.
  • உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது – 21
  • மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1950.
  • மதராஸ் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958
  •  மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958.
  • இந்தியாவின் முதல் மாநகராட்சி - மெட்ராஸ் (செப்டம்பர் 29,1688)
  • தமிழ்நாட்டின் முதல் நகராட்சி -  இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை(நவம்பர் 30,1866)
  • கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும் - 6(ஜனவரி 26- குடியரசு தினம்‌மே- 1 தொழிலாளர்‌ தினம்‌ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌அக்டோபர்‌- 2  காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ மற்றும்  நவம்பர்‌- 1 உள்ளாட்சி தினம்‌)

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் / வார்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை

மொத்த வார்டுகளின் எண்ணிக்கை

மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை

உறுப்பினர்கள்

மேயர்கள் / தலைவர்கள்

மாநகராட்சி

21

1,374

1,374

21

நகராட்சி

138

3,843

3,843

138

பேரூராட்சி

490

7,621

7,621

490

மொத்தம்

649

12,838

12,838

649

 

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்

ஊரக உள்ளாட்சி அமைப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை

மொத்த வார்டுகளின் எண்ணிக்கை

மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை

வார்டு உறுப்பினர்கள்

தலைவர்கள்

கிராம ஊராட்சி

12,525

99,327

99,327

12,525

ஊராட்சி ஒன்றியம்

388

6,471

6,471

388

மாவட்ட ஊராட்சி

36

655

655

36

மொத்தம்

12,949

1,06,453

1,06,453

12,949

 

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-



Card image cap
  • இந்திய போட்டி ஆணையத்தின்(CCI) தலைவராக ரவ்னீத் கவுரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.
  • இவர் ஐந்து ஆண்டுகள் வரை ஆணையத்தின் தலைவராக இருப்பார்.
  • CCI தலைவருக்கு மாதந்தோறும் ரூ.லட்சத்து 50ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

இந்திய போட்டி ஆணையம் - முக்கிய தகவல்கள்

  • இந்தியப் போட்டி ஆணையமானது போட்டிச் சட்டம், 2002-இன் கீழ் அமைக்கப்பட்ட நீதித் துறையைப் போன்ற (Quasi-judicial) சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது அக்டோபர் 14 ,2003 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு2009-ஆம் ஆண்டு முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது.
  • பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • தலைமையகம் - டெல்லி

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post