இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 20/05/2023
தமிழகம்:-

அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

- மாவட்ட நீதிபதிகள் 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்
- ஆர்.சக்திவேல்
- பி.தனபால்
- சி.குமரப்பன்
- கே.ராஜசேகர். இவர்கள் 4 பேரும் வரும் மே 22 அன்று பதவியேற்பர் எனக் கூறப்படுகிறது.
முக்கிய குறிப்புக்கள்
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
- சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
- தற்போது உள்ள எண்ணிக்கை: 64
- இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை - 25
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது: 62
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.

தோற்றம்
- 1845 மே 20 அன்று அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார்.
- இயற்பெயர்: காத்தவராயன்.
- மெட்ராஸ் பிளாக் டவுன் பகுதியில் வாழ்ந்த பன்மொழிப்புலவர் அயோத்திதாசப் பண்டிதரின் திண்ணைப் பள்ளியில் கல்வி கற்றார். தன் குரு மீது கொண்ட பற்றினால் காத்தவராயன் என்ற தன் இயற்பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.
சமூகப்பணி
- 1870-களில் நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து 1876-இல் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி ச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.
- 1881 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.
- 1882-இல் அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் “திராவிடர்க் கழகம்” எனும் அமைப்பை நிறுவினர்.
- 1885 ஆம் ஆண்டு -“திராவிட பாண்டியன்” எனும் இதழையும்
- தொடங்கினார். அயோத்திதாசர் இதன் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று – தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்.
- 1886-ஆம் ஆண்டு “ஆதித்தமிழர்கள்'' (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.
- 1891 ஆம் ஆண்டு - “திராவிட மகாஜனசபை” என்ற அமைப்பை நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்(தாழ்த்தப்பட்டோர் இந்தியாவில் நடத்திய முதல் மாநாடு). இதில், "பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்" என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது.
- அதையடுத்து, 1892 ஏப்ரல் மாதம், சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார்.
- 1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் தலித் இன மக்கள் தங்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் “சாதியற்ற திராவிடர்கள்” எனப் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
- பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தாழ்த்தப்பட்டோருக்குச் சென்னையில் 5 பள்ளிக் கூடங்களை நிறுவி அவர்கள் கல்வி கற்க வழிவகுத்தார். இவை கர்னல் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.
பௌத்த மதம்
- 1898-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்னல் ஆல்காட் அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றபோது அவருடன் சென்று பௌத்தத்தின் பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, `என் முன்னோர்கள் சமயமான பௌத்தத்துக்கு திரும்பிவிட்டேன்' என்று பதிவு செய்கிறார்.
- சென்னை திரும்பியவர் ராயப்பேட்டையில் `தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்' என்ற அமைப்பை நிறுவுகிறார்.
- இந்தியாவில் புத்த சமய மறுமலர்ச்சிக்காக பணியாற்றிய முதல் தலைவர் இவரேயாவார்.
- புத்த சமயத்தை இந்திய வரலாற்றில் முதல் பிராமணர் எதிர்ப்பு இயக்கம் என இவர் கூறினார்.
- இவர் வர்ணாசிரம முறையை எதிர்த்த புத்த சமயத்தினை தங்கள் சமயம் என பதிவு செய்யுமாறுத் தாழ்த்தப்பட்டவர்ளுக்கு அழைப்பு விடுத்தார்.
- இவர் இந்திர தேசம் எனும் புத்தகத்தில் இந்தியாவின் வரலாற்றை எழுதினார். அதில் ஆரியர்களின் படையெடுப்பிற்கு முன்னர் இந்தியர்கள் பௌத்த சித்தாந்தங்களைப் பின்பற்றி சாதி முறைகளின்றி அமைதியாக வாழ்ந்தனர் என அவர் வாதிட்டார்.
பத்திரிகைப்பணி
- 1885 ஆம் ஆண்டு- ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிடப் பாண்டியன்' எனும் இதழைத் தொடங்கினார்.
- 1907 ஜூன் 19 அன்று 'ஒரு பைசாத் தமிழன்' எனும் பத்திரிகையைத் தொடங்கினார் (1908 -இல் தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டது)
அயோத்திதாசர் எழுதிய நூல்கள்
1.திருவள்ளுவர் வரலாறு
2.திருக்குறள் கடவுள் வாழ்த்து
3.முருக கடவுள் வரலாறு
4.அரிச்சந்திரன் பொய்கள்
5.அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
6.அம்பிகையம்மன் சரித்திரம்
7.ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
8.இந்திரர் தேச சரித்திரம்
9.இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
10.கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
11.சாக்கிய முனிவரலாறு
12.நந்தன் சரித்திர தந்திரம்
13.நூதன சாதிகளின் உள்வே பீடிகை
14.பூர்வ தமிமொளியாம் புத்தாது ஆதி வேதம்
15.மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
16.மோசோயவர்களின் மார்க்கம்
17.யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
18.விபூதி ஆராய்ச்சி
19.விவாஹ விளக்கம்
20.வேஷ பிராமண வேதாந்த விவரம்
21.பூர்வ தமிமொழியாம் புததரது ஆதிவேதம்
22.இந்திரர் தேச சரித்திரம்
23.சாக்கிய முனிவரலாறு
24.வேஷபிராமண வேதாந்த விவரம்
25.யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
26.மோசோயவர்களின் மார்க்கம்
27.ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
28.மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
29.நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
30.அம்பிகையம்மன் சரித்திரம்
31.இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்
32.விவாஹ விளக்கம்
33.அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
34.புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
35.புத்த மார்க்க வினா விடை
36.நந்தன் சரித்திர தந்திரம்
37.கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
அம்பேத்கர், பெரியாருக்கு முன்னோடி, வழிகாட்டி
- இவர் அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னதாகவே தமிழ் வரலாறு, சமயம் மற்றும் இலக்கியங்களைத் தெற்கில் ஒரு காலத்தில் பிரபலமாகப் பரவி இருந்த புத்த சமயத்தின் பார்வையில் பகுத்துணர முயற்சித்தார்.
- தந்தை பெரியார் தன்னுடைய பகுத்தறிவுப் பிரசாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடியானவர்கள் தங்கவேல் அப்பாதுரை பண்டிதமணியும் அயோத்திதாசப் பண்டிதரும் என்று சொன்னார்.
அயோத்திதாசரைப் பற்றிய குறிப்புகள் திருவிக-வின் குறிப்பு
- அயோத்திதாசர் எங்களது குடும்ப மருத்துவர் எனக் கூறும் திருவிக, இளம்பருவத்தில் நான் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அயோத்திதாசர்தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாகக் கூறியுள்ளார்.
- மேலும், பாம்பு போன்ற விஷக் கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும் பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்றும் அவரைப் பற்றி கூறியுள்ளார்.
மறைவு
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமையும், சமநீதியும், சமவாய்ப்பும், சுதந்திரமும் கிடைத்திட அயராது பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
நினைவு சின்னங்கள்
- 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங்கால் சென்னையின் தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (தேசிய சித்த மருத்துவ நிறுவனம்) திறக்கப்பட்டு அதற்கு சாதி எதிர்ப்புப் புத்த சமய தலைவரான இவரின் பெயர் சூட்டப்பட்டது.
- 21.10.2005 அன்று அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- 2019-ஆம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, 'அயோத்திதாசப் பண்டிதர் விருது' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- 2021-இல் அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
- தமிழக பட்ஜெட் 2023-இல் நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக - பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

- ‘Project 75 India’ திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்படை குழுமத்துடன் இணைந்து 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- இதில், ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஆறாவதும், இறுதியுமான வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலையும் மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மாஜேகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்தது. இந்த போர்க்கப்பல் மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும்.
- இந்த கப்பலை கடலில் செலுத்தி செய்யப்படும் சோதனைகள் நேற்று முறைப்படி துவங்கியது.பரிசோதனையை முடித்தபின், இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சேர்க்கப்படும்.
- ‘Project 75 India’ என்ற திட்டம் வகுக்கப்பட்ட ஆண்டு - 2007