இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 26-05-2023
தேசியம் :-

- ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 24 அன்று திறந்து வைத்தார்.
- ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி அடுத்த துர்வாவில் 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள, அம்மாநில உயர்நீதிமன்றத்தை புதுப்பிக்கும் பணி, 2015 பிப்ரவரி மாதம் தொடங்கியது.
- 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள, உச்ச நீதிமன்றத்தை விட, பரப்பளவு அடிப்படையில், இந்நீதிமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது. ரூ. 550 கோடி கட்டப்பட்டுள்ள, இக்கட்டடத்தில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வகையில், இரு அரங்குகள், 540 அறைகள் கொண்ட சேம்பர், 3,000 ச.அடியில் கட்டப்பட்ட நுாலகம் ஆகியவை உள்ளன.
தமிழகம் :-

- 1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடானது. 716 சதுர கி. மீ பரப்பளவு உடைய சிங்கப்பூரில், சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள்தான் அதிகளவு இருந்தனர்.
- ஆரம்ப காலங்களில் சிங்கப்பூருக்கு சர்வதேச அங்கீகாரம் பெற, அந்நாட்டின் முதல் பிரதமரான லீ குவான் யூ, சட்ட திட்டங்களை வகுத்து, நாட்டை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
- சிங்கப்பூரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு அதிகம். அதன் காரணமாகவே சிங்கப்பூரில் தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தை வழங்கினார் லீ குவான்.
- சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
- அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு.
- இதனிடையே, 2015 மார்ச் 23-இல் லீ குவான் யூ மறைந்தபோது, இரங்கல் தெரிவிக்கும் வகையில் மன்னார்குடியில் நடைபெற்ற அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, மன்னார்குடியில் லீ குவான் யூ-வுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
- இந்நிலையில், லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் சிலையும் அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- 2023-24ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தலைவராக TVS Supply chain solutions நிர்வாக துணைத் தலைவர் ஆர். தினேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
- CII நிறுவப்பட்ட ஆண்டு – 1895
- தலைமையகம் - டெல்லி
இராணுவம் :-

- இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட INS விக்ராந்த் போா்க் கப்பலில் MiG-29 K போா் விமானம் இரவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
- ஆரேபிய கடலில் சென்று கொண்டிருந்த INS விக்ராந்த்தில் மே 25 இரவு இந்த சாதனை படைக்கப்பட்டது. இது கடற்படையின் தற்சாா்பு கொள்கையை வெளிப்படுத்துகிறது.
- ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட MiG-29 K போா் விமானமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போா் விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போா்க் கப்பலில் தரையிறக்கப்பட்டது.
INS விக்ராந்த் சிறப்பம்சங்கள்
- முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிய மிகப்பெரிய போர்க்கப்பல்.
- ரூ.20,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
- 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டது. மொத்த எடை 45,000 டன்கள்.
- அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும்.
- மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,300 அறைகளுடன், 1700 பேர் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ள்ளது.
- கப்பலின் மேல்தளத்தில் 30 விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க முடியும்.
- கப்பலை முழுமையாக சுற்றி வர 12.கி.மீ தூரம் நடக்க வேண்டும்.
- 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைகள், பரிசோதனை மையங்கள், CT ஸ்கேன் வசதி என மிதக்கும் மினி மருத்துவமனையே இதில் இடம்பெற்றிருக்கிறது.
- ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை விட 4 மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
- ஒரு சிறிய நகரத்துக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருக்கிறது.
Tags:
Current Affairs