இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 27-05-2023

     இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  27-05-2023


தேசியம் :-


          Card image cap

  • தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா். இதைக் குறிக்கும் வகையில்75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • 35 கிராம் எடையுள்ள அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தின் நடுவில்அசோகத் தூணில் சிங்கத் தலைகள் சின்னம் இடம்பெறும். இருபுறமும் ‘பாரத்’ என தேவநாகரி எழுத்து வடிவிலும்இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
  • கீழேரூபாய் சின்னத்துடன் 75’ எண் இடம்பெற்றிருக்கும். மற்றொரு பக்கத்தில்புதிய நாடாளுமன்றக் கட்டட உருவம் பொறிக்கப்பட்டுநடப்பாண்டை குறிக்கும் வகையில் ‘2023’ எண் இடம்பெறும்.
சர்வதேசம் :-



Card image cap
  • 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:
  1. ஜிம்பாப்வே
  2. வெனிசுலா
  3. சிரியா
  4. லெபனான்
  5. சூடான்
  6. அர்ஜெண்டினா
  7. ஏமன்
  8. உக்ரைன்
  9. கியூபா
  10. துருக்கி
  • வேலையின்மைபணவீக்கம்வங்கிக் கடன்ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில ஸ்விட்சர்லாந்து (157) உள்ளது.
தமிழகம் :-


Card image cap
  • திட்டக் குழு உறுப்பினா்களில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜாதற்போது தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்துஅவரது இடத்தில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எழிலன் நாகநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • தமிழ்நாடு திட்டக் குழு  நிறுவப்பட்ட ஆண்டு - மே 25,1971
  • தலைவர் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
  • துணைத் தலைவர்  - ஜெ.ஜெயரஞ்சன்
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-



Card image cap

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகமும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய குறிப்புக்கள்

  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
  • உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்குடியரசுத் தலைவர்
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது: 62
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி- நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
  • உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
  • சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
  • இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( ஜூலை 1862)
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
  • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
  • இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
  • இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
  • சென்னை உயர்நீதிமன்ற அதிகார வரம்பு எல்லை- தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
  • தனி நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் டெல்லி(1966)
  • மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம்அருணாச்சலப் பிரதேசம்நாகாலாந்துமிசோரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது)

 



Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post