இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 30-05-2023

    


இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  30-05-2023


தேசியம் :-


     Card image cap

  • மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பை குரியிலிருந்து அசாம் மாநிலத்தின் குவாஹாட்டிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இது வடகிழக்கு பகுதியில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.
  • இதன் மூலம் நியூஜல்பைகுரி - குவாஹாட்டி இடையேஉள்ள 407 கி.மீ தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடந்துவிடலாம்.

சர்வதேசம் :-




Card image cap
  • துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.
  • 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர்2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
தமிழ் நாடு :-



Card image cap
  1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையேகாஞ்சிபுரம் மாவட்டம்மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113 கோடியே 90 இலட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  2. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையேதிருவள்ளூர் மாவட்டம்கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையேகட்டுமானம்கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில்பாலிகார்பனேட் தாள் தயாரித்தல்கூரை அமைப்புகள் தயாரித்தல்கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளிபாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  6. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார்எஃகு ஆலைகள்விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

Card image cap
  • சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஏற்கெனவே தீபக் டெல்லி தலைமையகத்தில் வரிவிதிப்பு பிரிவில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்கு) பணியாற்றி வந்தார்.
  • சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்த இவர்டெல்லியில் எம்பிஏ படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Card image cap
  • எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நாராயணசாமியை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
  • மருத்துவத் துறையில் 33 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட நாராயணசாமி 13 ஆண்டுகள் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறைத் தலைவராக பணியாற்றி உள்ளார்.
  • தற்போது அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
  • நாராயணசாமி ஆண்டுகள் பதவி வகிப்பார்.
  • எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தொடங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்  :-

Card image cap
  • IPL போட்டியின் 16-வது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் ஆனது.
  • கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
  • நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் IPL தொடரில் 11 முறை இறுதிப் போட்டிகளில் களமிறங்கி 5 முறை சாம்பியன் ஆன வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி.
  • IPL தொடரில் 250-வது போட்டியில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ள தோனி 349 பவுண்ட்ரிகள், 239 சிக்ஸர்களுடன் இதுவரை 5,082 ரன்கள் குவித்துள்ளார்.
  • IPL அணி கேப்டனாக 133 போட்டிகளில் வெற்றியை தேடி தந்து தோனி முதலிடத்திலும் 87 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மா 2-ஆம் இடத்திலும் உள்ளார்.

16-வது சீசனில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகள்

  • எமர்ஜிங் பிளேயர்: யாஷஸ்வி ஜெய்ஷ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • மதிப்புமிக்க வீரர்: சுப்மன் கில்(குஜராத் டைட்டன்ஸ்)
  • சிறந்த கேட்ச்: ரஷித் கான்(குஜராத் டைட்டன்ஸ்)
  • நேர்மையாக விளையாடிய அணி: டெல்லி கேபிடல்ஸ்
  • அதிக விக்கெட்கள் (28): முகமது ஷமி(Purple Cap)
  • அதிக ரன்கள் (890): சுப்மன் கில்(Orange Cap)
  • ட்ரீம்11 கேம்சேஞ்சர் ஆஃப் சீசன் : சுப்மன் கில்
  • வான்கடே ஸ்டேடியம் மற்றும் ஈடன் கார்டன்ஸ் சிறந்த பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதை வென்றன.

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post