இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 31-05-2023


இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  31-05-2023


சர்வதேசம் :-



            Card image cap

  • சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு அனுப்பியது.
  • லாங் மாா்ச்-2எஃப் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்தது.
  • கல்லூரி பேராசியரும்ஆய்வாளருமான குய் ஹாய்சாவ்விண்கல தலைவா் ஜிங் ஹைபெங்விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா்.
  • இவா்களில் குய் ஹாய்சாவ்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள ராணுவத்தைச் சேராத முதல் சீனா் ஆவாா்.
  • அத்துடன்விண்கலத் தலைவரான ஜிங் ஹைபெங் இதுவரை இல்லாத வகையில் 4-ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ள சீனா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.
  • கடந்த 2003-ஆம் ஆண்டில் ஷென்ஷூ-விண்கலம் மூலம் விண்வெளி வீரா் ஒருவரை சீனா முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பியது.
  • ரஷியாஅமெரிக்காவுக்குப் பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பிய 3-ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
தமிழ்நாடு :-



Card image cap
  • விருதுநகர் மாவட்டம்ஜோகில்பட்டியைச் சார்ந்த முத்தமிழ்செல்வி,  மே 23 அன்று மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். இதன் மூலம் எவரெஸ்ட் பகுதியை ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த முதல் பெண் என்ற பெருமையை படைத்தார்.
  • இவருடன் சென்னை கோவளம்மீனவ கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் பச்சை (வயது 28) அவர்களும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான (surfing player) இவர் இளங்கலை கணினி (B.C.A) பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

முக்கிய குறிப்புகள்

  • எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்த முதல் சாதனை பெண்-  ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜூன்கோ தாபெய்(1975)
  • எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் - பச்சேந்திரி பால்(1984)
  • எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி - அருணிமா சின்ஹா(2013)
  • எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8,849 m

பொருளாதாரம் :-



Card image cap
  • ஏப்ரல் 2022 முதல் மாா்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் அனைத்து வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
  • அந்த வங்கிகளில் மகாராஷ்டிர வங்கியின் வாராக் கடன் விகிதம் 0.25 சதவீதமாகும்இதுவே கடந்த ஆண்டின் குறைந்தபட்ச வாராக் கடன் விகிதமாகும்.
  • 0.27 சதவீத வாராக் கடனுடன் ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 0.37 சதவீதமாக உள்ளது.
விளையாட்டு செய்திகள் :-

Card image cap
  • கிரீஸ் நாட்டில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் 16. 78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன்.
  • இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
  • மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறன் என்பவரது மகன் தான் செல்வ பிரபு. இவர்  திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
முக்கிய நாட்கள் :-



Card image cap
  • ஆண்டுதோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்புகையிலை நுகர்வைக் குறைப்பதற்கான கொள்கைகளை உருவாக்கவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 7-இல் முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989-ஆம் ஆண்டு மே 31- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
  • 1560-இல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் நிகாட் என்பவர் புகையிலையை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்தே நிகோடின் என்ற வார்த்தை உருவானது.
  • சீனா 39.6 சதவீதமும்இந்தியா 8.3 சதவீதமும்பிரேசில் 7 சதவீதமும்ஐக்கிய அமெரிக்கா 4.6 சதவீதமும் புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன
  • 'உணவை அதிகரியுங்கள்புகையிலையை அல்ல' என்பது இந்தாண்டின் மையக்கருத்து

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post