இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 01-06-2023
தேசியம் :-

- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,உலகிலேயே மிகப்பெரிய தானியக் கிடங்கை ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தத் திட்டம் மூலம் தற்போது சுமார் 14.5 கோடி டன்களாக உள்ள நாட்டின் மொத்த தானிய சேமிப்புத் திறன், 21.5 கோடி டன்களாக அதிகரிக்கும்.
- இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும் 2,000 டன் சேமிப்புத் திறன் கொண்ட கிடங்கு அமைக்கப்படும்.
- வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- பின்னணி: கூட்டுறவுச் சங்கங்களின் வலிமையைப் பயன்படுத்தி, அவற்றை வெற்றிகரமான மற்றும் துடிப்பான வணிக நிறுவனங்களாக மாற்றுவதற்கும், கூட்டுறவு மூலம் செழிப்பை உருவாக்குதல் (SAHKAR SE SAMRIDDHI) என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமாகும். இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேலாண்மையை மையமாக கொண்டு, சுழற் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு உதவ முற்படுகிறது.
- இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரெஞ்சு வளர்ச்சி முகமை மற்றும் ஜெர்மனியின் KFW வங்கியிடம் இருந்து ரூ.1,760 கோடி கடன், ஐரோப்பிய யூனியனிடம் இருந்து தொழில்நுட்ப உதவித்தொகையாக ரூ.106 கோடி பெறப்படுகிறது.
- இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027- ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
பொருளாதாரம் :-

- தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
- முந்தைய அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருந்த நிலையில், மாா்ச் மாதம் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக வளா்ச்சி பெற்றுள்ளது.
- ஒட்டுமொத்த நிதியாண்டில் ஜிடிபி வளா்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது.
- முந்தைய 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது.

- கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் அரசின் வருவாய்-செலவின விவரங்கள் தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (CGA) தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
- அதன்படி, 2022-23-இல் மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.24.56 லட்சம் கோடியாகும். இதில், வரி வருவாய் ரூ.20.97 லட்சம் கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.2.86 லட்சம் கோடி, கடன் அல்லாத மூலதன வருவாய் ரூ.72,187 கோடி.
- 2022-23-இல் மத்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ.41.89 லட்சம் கோடி. இதில், ரூ.34.52 லட்சம் கோடி வருவாய் செலவினம். ரூ.7.36 லட்சம் கோடி மூலதனச் செலவினமாகும். நிதிப் பற்றாக்குறை ரூ.17.33 லட்சம் கோடியாகும். GDP-யில் இது 6.4 சதவீதம் என்று CGA தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 5.9 சதவீதமாக குறைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில்(என்செலடஸ்) நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது.
- சனிக் கோளின் நிலவான என்செலடஸில் (பனிக்கட்டியிலான நிலவு) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று காணப்படுவதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது.
- இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும் இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி பற்றிய குறிப்புகள்
- 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
- பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த, இருப்பதற்கு சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது.
- 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது.
- 1960-களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர்தான் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது.
- இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள் :-

- ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையால் ’உலக உணவு’ எனப் பால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
- 2001-ஆம் ஆண்டில் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
முக்கிய குறிப்புகள்
- இந்தியாவில் தேசிய பால் தினம்- நவம்பர் 26 (வர்கீஸ் குரியன் பிறந்த தினம்)
- வெண்மைப் புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்
- Operation Flood என்ற பெயரில் வெண்மைப் புரட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1970
- தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு (NDDB) நிறுவப்பட்ட ஆண்டு - 1965
- அமுல் (Anand Milk Union Limited) நிறுவனம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு - டிசம்பர் 14,1946
- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனமான ஆவின் பதிவு செய்யப்பட்ட ஆண்டு -பிப்ரவரி 1, 1981
- பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு - இந்தியா
- உலக பால் உற்பத்தியில் 24 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது.
- இந்தியாவில் கடந்த 2021-22 இல் விற்கப்பட்ட பாலின் மதிப்பு - ரூ. 9.32 லட்சம் கோடி.
- 2034-ஆம் ஆண்டுக்குள் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33% ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

- 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஜூன் 1 அதிகாரப்பூர்வமாக பெற்றோரின் உலகளாவிய தினமாக அறிவிக்கப்பட்டது.
- இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் உலகப் பெற்றோர் தினம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
Tags:
Current Affairs