இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 02-06-2023
தேசியம் :-

இன்டர்பிராண்ட் (Interbrand) என்ற பிராண்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி,
- டாடா கன்சல்டன்சி சர்வீஸ்(TCS) - 1.09 லட்சம் கோடி
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) - 65,320 கோடி
- இன்ஃபோசிஸ்(Infosys) - 53,323 கோடி
- HDFC - 50,291 கோடி
- ஜியோ - 49,027 கோடி
- ஏர்டெல் – 46,553 கோடி
- LIC – 33,792 கோடி
- மஹிந்திரா – 31,136 கோடி
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 30,055 கோடி
- ICICI – 25,915 கோடி
பொருளாதாரம் :-

- ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ. 1,57,090 கோடியாக வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,411 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 35,828 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 81,363 கோடி, செஸ் (மதிப்புக் கூட்டு வரி) ரூ. 11,489 கோடியாகும்.
- இது கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாத ஜிஎஸ்டி வசூலைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும். அப்போது ரூ. 1.41 லட்சம் கோடி அளவில் ஜிஎஸ்டி வசூலானது.
- தமிழகத்திலிருந்து மட்டும் மே மாதத்தில் ரூ. 8,953 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
- அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரூ. 23,536 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- உலக வானிலை ஆய்வு அமைப்பின் துணைத் தலைவா்களில் ஒருவராக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- உலக பருவநிலை மாற்றம், பருவநிலை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடா் தயாா்நிலைகளைக் கண்காணிப்பதற்காக ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஐ.நா. அமைப்பில் ஒரு தலைவா் மற்றும் 3 துணைத் தலைவா்கள் இடம்பெற்றிருப்பா்.
- இந்த அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலராக ஆா்ஜென்டினாவைச் சோ்ந்த பேராசிரியா் செலஸ்டி செளலோ நியமிக்கப்பட்டுள்ளாா்.
- இதில், ஐக்கிய அரபு அமீரக தேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநா் அப்துல்லா அல் மண்டெளஸ் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இது 4 ஆண்டுகால பதவியாகும்.
முக்கிய நாட்கள் :-

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் 29வது மாநிலமாக உருவானது தெலுங்கானா.
தெலுங்கானா பற்றிய குறிப்புகள்
- தலைநகர் - ஹைதராபாத்
- ஆளுநர்- தமிழிசை சவுந்தரராஜன்
- முதலமைச்சர்- சந்திரசேகர் ராவ் (டி.ஆர்.எஸ்.)
- ஈரவை சட்டமன்றம் முறைமை - சட்டப் பேரவை (119 உறுப்பினர்கள்) & சட்ட மேலவை (40 உறுப்பினர்கள்)
- மாவட்டங்கள் எண்ணிக்கை - 33
- அலுவல் மொழி - தெலுங்கு மற்றும் உருது
மாநில சின்னங்கள்
- விலங்கு - பாலப்பிட்டா
- மரம் - ஜம்மி செட்டு
- விலங்கு - ஜின்கா(மான்)
- பூ- தங்கிடிப் பூ(ஆவாரை)
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-

- நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை(Ballistic Missile) ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- இதில் பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இதில், அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா கடந்த டிசம்பா் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது.
- அக்னி 1 முதல் அக்னி 4 வரையிலான ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.
Tags:
Current Affairs