இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 03-06-2023

       

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  03-06-2023


தேசியம் :-


       Card image cap

திட்டத்தின் பெயர்

பயன்கள்

அமலுக்கு வரும் தேதி

க்ருஹ லக்‌ஷ்மி

இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்குதல்

ஆகஸ்ட் 15

அன்ன பாக்யா

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்

ஜூலை 1

யுவாநிதி

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும். 2022 - 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இந்த திட்டத்தில் 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

ஜூலை 15

க்ருஹ ஜோதி

200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும்

ஜூலை 1

 

இது தவிர, பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வருகிறது.

தமிழ் நாடு :-


Card image cap

வாழ்க்கை குறிப்பு

  • 1924 ஜூன் 3நாகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
  • 1938நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுமாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.
  • 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
  • 1942: அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய 'இளமைப்பலிஎன்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவைப் பெரிதும் கவரதிருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர்கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார்.
  • 1944: பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் நாடகத்தை அரங்கேற்றினார்.
  • 1944 செப்டம்பர்பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது.
  • 1946முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி-க்கு கதை வசனம் எழுதினார்.
  • 1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில்தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம்.
  • 1949 செப்டம்பர் 18திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்துசி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்படுகிறது. அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1950: கருணாநிதி கதை-வசனம் எழுதியஎம்.ஜி. ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.
  • 1951: பத்திரிக்கைத்துறையில் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
  • 1952: கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்தசிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய `பராசக்திபடம் வெளியானது.
  • 1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும்குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.
  • 1957: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுமுதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.
  • 1959: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100-க்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற திமுகமாநகராட்சியைக் கைப்பற்றியது.
  • 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1962தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.
  • 1963திமுக நடத்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற மு. கருணாநிதிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை.
  • 1965 பிப்ரவரி 16: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதிதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதி விடுதலையானார்.
  • 1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
  • 1969 பிப்ரவரி 10அண்ணாவின் மறைவுக்குப் பின், தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.
  • 1971 மார்ச் 15: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.
  • 1972 அக்டோபர் 14: திமுக-வில் இருந்து எம்.ஜி. ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.
  • 1974 ஆகஸ்ட் 15மு. கருணாநிதியின் கோரிக்கையின் பேரில்முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் கருணாநிதி. சென்னை கோட்டையில் தேசியக்கொடியே ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்.
  • 1976 ஜனவரி 31கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.
  • 1986இலங்கை தமிழர் பிரச்சனைக்காகஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் (டெசோ) மாநாட்டை நடத்தினார் கருணாநிதி.
  • 1988: வி.பி. சிங்கை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் இணைந்துமத்திய கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது.
  • 1989: எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 3-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.
  • 1991 ஜனவரி 30: திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
  • 1996: சட்டமன்ற தேர்தலில் வென்று4-ஆவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.
  • 2001 ஜூன் 30சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில்நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தமிழகக் காவல்துறை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • 2006சட்டமன்ற தேர்தலில்5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி.
  • 2008-2009: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போதுஇந்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை என கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
  • 2010 மார்ச்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்புதிய தலைமைச் செயலகம் - சட்டமன்ற கட்டடத்தைபிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
  • 2010 ஜூன்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார் கருணாநிதி.
  • 2011: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.
  • 2013தனக்குப் பிறகுதனது அரசியல் வாரிசாக தனது மகனும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இருப்பார் என அறிவித்தார் கருணாநிதி.
  • 2014-16: 2014-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2016-இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது.
  • 2016, மே 19: திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 13 முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
  • 2016 அக்டோபர் 25கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக உறுதிப்படுத்தியது.
  • 2016 டிசம்பர் 1உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
  • 2017 டிசம்பர் 16ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.
  • 2018 ஜூலை 27: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
  • 2018 ஆகஸ்ட் 7காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு. கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
  • 2018 ஆகஸ்ட் 8: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது

தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்கள்/அறிவிப்புகள்

  • இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது(1969).
  • சட்டநாதன் தலைமையில் தமிழ்நாட்டின் முதல்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தல்(1969) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கும்தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கும் உயர்த்துதல்
  • 1969-இல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்துஅக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973-இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார்.
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்(1970)
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்(1971)
  • பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் (1971)
  • மாநிலத் திட்டக்குழு(ஏப்ரல் 1971)
  • கண்ணொளி வழங்கும் திட்டம்(1971)
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி(1971)
  • கோவையில் தமிழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது(1971)
  • கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது(1973)
  • பூம்புகார் கப்பல் வாணிபக் கழகம் (1974)
  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்(1975)
  • மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் அமல்படுத்துதல்(1976)
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்(1989)
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது(1989)
  • சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம்(1989)
  • டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்(1989)
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – இந்தியாவிலேயே முதன் முறையாக வழங்கப்பட்டது (1989)
  • முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகம் – ஆசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டது (1989).
  • மகளிர் சுயஉதவி குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது(1989)
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1990)
  • வரும் முன் காப்போம் திட்டம்(1996)
  • சிற்றுந்து இயக்கும் திட்டம்(1996)
  • மெட்ராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1996)
  • இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்(1997)
  • அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்(1997)- இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம்
  • மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்டது(1998)
  • மதுரையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது(1999)
  • டைடல் பார்க் நிறுவப்பட்டது (1999)
  • கன்னியாகுமரியில் 133 அடி உயர் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது (2000)
  • ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் (2006)
  • இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் (2006)
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்(2006)
  • காமராஜர் பிறந்த தினம் (ஜூலை 15) எல்லா பள்ளிகளிலும் ‘கல்வி மேம்பாட்டு தினம்’ ஆக கொண்டாடப்பட தொடங்கியது(2006)
  • தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம்(2008)
  • 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் (2008)
  • அருந்ததியர் சமுதாயத்திற்கான சதவீத உள் இட ஒதுக்கீடு(2009)
  • கலைஞர் காப்பீட்டு திட்டம்(2009)

சிறப்புகள்

  • 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.
  • 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
  • இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதிஇதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
  • சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டைஅண்ணாநகர்திருவாரூர்துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
  • 1957-லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.
  • மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார்.
  • எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.
  • 'தூக்குமேடைநாடகத்தின் போது எம். ஆர். ராதாஇவருக்கு 'கலைஞர்என்ற பட்டம் அளித்தார்.

கருணாநிதி எழுதிய நாடகங்கள்

  • சிலப்பதிகாரம்மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடைகாகிதப்பூநானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன் நச்சுக்கோப்பை.

கருணாநிதி எழுதிய புத்தகங்கள்

  • குறளோவியம்,நெஞ்சுக்கு நீதிதொல்காப்பிய உரை, சங்கத்தமிழ், பாயும் புலி பண்டாரக வன்னியன், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம்வெள்ளிக்கிழமை, இனியவை இருபது, பொன்னர் சங்கர், திருக்குறள் உரை, மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று.

நினைவு சின்னம்

  • முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில்மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம்வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள் :-



Card image cap

 

  • கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகின்றன.
  • இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி. மரிய அக் ஷிதா தங்கம் வென்றார்.
  • பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணிக்காக பங்கேற்ற மரிய அக் ஷிதா இறுதிப் போட்டியில் குஜராத்தின் குஷி சமேஜாவை 15-7 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
முக்கிய நாட்கள் :-


Card image cap
  • உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்ய வாழ்வுக்காகவும்உடல்நல முன்னேற்றத்திற்காகவும் சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்உலக சைக்கிள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினம் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்டது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Riding Together for a Sustainable Future.”

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post