போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 23-06-2023
தேசியம் :-

- ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு, ‘ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம்’ என்ற திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ’ஜெகன் அண்ணா சுரக்ஷா திட்டம்’ என்ற மற்றொரு புதிய திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
- ஜெகன் அண்ணனுக்கு சொல்வோம் திட்டம் - இதன் மூலம் நிறை குறைகளை வீடு வீடாக சென்று எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிந்து பொதுமக்கள் கூறும் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்.
- ஜெகனண்ணா சுரக்ஷா திட்டம் -இத்திட்டம் மூலம் ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் வருவாய் அதிகாரிகள் சென்று, பிறப்பு, ஜாதி, இறப்பு, வருவாய் என 11 வகையான சான்றிதழ்களுக்கு பதிவு செய்தோரிடம் நேரில் சென்று ஆய்வு செய்து அந்த இடத்திலேயே சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேசம் :-

- பிரதமர் மோடி தன் உரையில், "அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது என்பது மிகப்பெரிய கவுரவம். அதை இருமுறை பெறுவது என்பது தனிச்சிறப்பான கவுரவம்.இதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.
- இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு ஜனநாயக நெறிகளால் கட்டமைக்கப்பட்டது. இரு நாட்டு அரசியல் சாசனமும் 'மக்களாகிய நாம்' (We The People) என்ற வார்த்தைகளோடுத்தான் தொடங்குகின்றன. இரு நாடுகளும் அதன் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன.
- இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பயணிப்பது உலக நன்மைக்கும், சர்வதேச அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வித்திடும்.
- நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால் இப்போது 5-வது பொருளாதார வல்லரசாக உள்ளது. நிச்சயமாக விரைவில் உலகில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.
- இந்தியா வளரும்போது இந்த ஒட்டுமொத்த உலகமும் வளரும்.
- இந்தியா இந்த பூமியின் மீதான அக்கறையுடன் வளர்கிறது. இந்தியக் கலாச்சாரம் சுற்றுச்சூழலை ஆழமாக மதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை பூமியின் வளம் சார்ந்தது. இந்தியாவின் இலக்கு பூமியின் வளத்தை உறுதி செய்தல்.
- நவீன இந்தியாவில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதாகவும், பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் இந்தியாவின் உயர்ந்த பதவியை வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன, பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உலகம் ஒரே குடும்பம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தியா G20 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு
- இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க காங்கிரசில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை. இவருக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா போன்றோர் இத்தகைய பெருமையைப் பெற்றுள்ளனர்.
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக உரையாற்றிய ஆண்டு - 2016
தமிழ்நாடு :-

- வண்டலூா் உயிரியல் பூங்காவில் ரூ. 4.36 கோடியில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிா்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
- இதன் மூலம், வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களில் பாதுகாப்பது தொடர்பாக இளம் தலைமுறையினர் மனதில் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடியும். வன உயிரினம், இயற்கை பாதுகாப்பு குறித்து அவர்கள் மனதில் ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும்.
- இப்பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுகள் :-

- செவிலியர்களுக்கான 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
- இந்த விருதுகள் 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அதில் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களான கணபதி சாந்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான விருதும், சுகந்திக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விருதும், வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்
- செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உன்னத மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் கைவிளக்கேந்திய காரிகை என்றழைக்கப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- சர்வதேச செவிலியர் தினம் - மே 12(ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்)
விளையாட்டு செய்திகள் :-

- ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 55 பதக்கங்களை வென்றுள்ளது.
- இதில் 17 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கும்.
- தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேறுள்ளனர்.
முக்கிய நாட்கள் :-

- நவீன ஒலிம்பிக்போட்டிகள் தொடங்கப்பட்ட நாளான ஜூன் 23 ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது.
- இத்தினம் 1948 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள்: 'Let's Move'
ஒலிம்பிக் பற்றிய முக்கிய குறிப்புகள்
- முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டு கி.மு. 776 இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நடத்தப்பட்டது
- கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776-ஆம் ஆண்டு முதல் கி.மு.393-ஆம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது.
- ஒலிம்பிக் போட்டியை தடை செய்த மன்னர் - தியோடோஷியஸ்
- ஒலிம்பிக் போட்டி நவீன வடிவம் பெற்ற ஆண்டு - ஜூன் 23,1894
- நவீன ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தவர்- பியரிடி கூபர்டின்(ஒலிம்பிக் போட்டியின் தந்தை).
- முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் - பியரிடி கூபர்டின்
- முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு - 1896(ஏதென்ஸ்)
- ஒலிம்பிக் போட்டியில் பெண்களும் அனுமதிக்கப்பட்ட ஆண்டு - 1900(பாரிஸ்)
- 2012 -இல் லண்டன் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் முதல் முறையாக அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொண்டனர்
- குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1924
- ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ஆம் ஆண்டு முதல் நடை முறையில் உள்ளது.
- ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ஆம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது.
- ஒலிம்பிக் கொடியில் மொத்தமுள்ள வண்ணங்கள் - 6
- வெள்ளை நிறத்தைப் பின்புலமாக கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய 5 நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்
- இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.
- இந்த கொடி முதல் முதலாக பறக்கவிடப்பட்ட ஆண்டு – 1920
- இதுவரை 32 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது.
- கடந்த காலங்களில் உலகப் போர்களின் கராணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.
ஒலிம்பிக்கில் இந்தியா
- ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியர் - நார்மன் பிரிட்சார்ட்(கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டிஷ் வம்சாவளியானா இவர் 1900 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 வெள்ளி பதக்கங்களை வென்றார்)
- 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில்தான் முதன் முதலில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 முறை தங்கம் வென்றுள்ளது(1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980)
- ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தனிநபர் பதக்கத்தைப் பெற்றவர் - கே.டி. ஜாதவ்(1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றார்)
- ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி(2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்)
- இந்தியா சார்பில் அதிக முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்- டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்(1992 முதல் 2016 வரை ஏழு முறை)
- ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற முதல் தனிநபர் - அபினவ் பிந்த்ரா (2008-துப்பாக்கி சுடுதல்)
- இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் - பி.வி.சிந்து(2016 ரியோ ஒலிம்பிக்கில் 21 வயதில் வெள்ளிப் பதக்கம் வென்றார்)
- இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் - பி.வி.சிந்து (2016-வெள்ளி, 2020-வெண்கலம்)
- இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றது 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில்தான்(7 பதக்கங்கள் - 1 தங்கம்,2 வெள்ளி, 4 வெண்கலம்)
- இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற மொத்த பத்தகங்களின் எண்ணிக்கை - 35( 10 தங்கம்,9 வெள்ளி, 16 வெண்கலம்)

- ஐக்கிய நாடுகளின் பொது சேவை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது.
- பொதுச் சேவையின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதற்கும் சமூகத்திற்கு பொது சேவையை மதிப்பிடுவதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் 2003 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

- ஜூன் 23, சர்வதேச விதவைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- விதவைகளின் நிலை, நிலைப்பாடு, சமூகக் கட்டுப்பாடுகள், உணர்வு ரீதியான விளைவுகள், பொருளாதாரம், உணவு மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- முதன்முதலில், தி லூம்பா ஃபௌண்டேஷன் சார்பில், 2005 ஆம் ஆண்டில், ஜூன் 23 -இல் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
- பின்னர் 2010-இல் ஐ.நா பொது சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
- 2023 ஆம் ஆண்டின் கருப்பொருள்: 'பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்'
இராணுவம் :-

- இந்தியாவின் தேஜஸ் ரக போா் விமானங்களுக்கான என்ஜின்களை உற்பத்தி செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (HAL) ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- F414 ஜெட் என்ஜின்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்திய விமானப் படையின் இலகுரக ‘தேஜஸ்’ போா் விமானங்களுக்காக 99 என்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளன.
- ராணுவத்துக்கான போா் விமானங்களை ரஷியாவிடம் இருந்தே இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து போா் விமானங்களுக்கான என்ஜின்களைத் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- ஏற்கெனவே F404 ரக என்ஜின்களை HAL நிறுவனத்துக்காக GE நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது F414 ஜெட் என்ஜின்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.
Tags:
Current Affairs