போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 24-06-2023
தேசியம் :-

- இந்தியாவில் தயாரான முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
- குஜராத் மாநிலத்தில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
- மத்திய அரசு, குஜராத் மாநில அரசுகளின் ஆதரவுடன் மொத்தம் 275 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இது அமைகிறது. முதலீட்டுத் தொகையில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசு 20 சதவீதத்தையும், மீதமுள்ள தொகையை மைக்ரான் நிறுவனமும் வழங்குகிறது.
- 2024-ஆம் ஆண்டு இறுதியில் தொழிற்சாலை செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தான் தற்போதைய கலவரத்திற்கான காரணமாக இருக்கிறது.
- மெய்தேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு பழங்குடியினத்தவராகிய குக்கி மற்றும் நாகா இன மக்கள் எதிர்த்தனர். மைத்தேயி இனத்தவர்கள் ஏற்கனவே வளம், செல்வாக்கும் மிகுந்தவர்கள்.
- மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில், 53% அளவுக்கு பெரும்பான்மையாக உள்ள மெய்தேயி சமூகத்தினர் இம்பால் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். குகி மற்றும் நாகா பழங்குடியினர், மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். குகி, நாகா பழங்குடியினர், மணிப்பூர் மக்கள் தொகையில் சுமார் 40% உள்ளனர்.
- குகி சமூகத்தினர் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். மெய்தேயி சமூகத்தில் பெரும்பாலானோர் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள், சிலர் பட்டியலின சாதிகளாக உள்ளனர். வேறு சிலர் பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர்.
- நாடு சுதந்திரம் பெற்ற பின், குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
- இதனால் குகி சமூகத்தினரிடம் உள்ள நிலங்களை மெய்தேயி சமூகத்தினர் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது தான் மெய்தேயி சமூகத்துக்கும், குகி சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
- இந்நிலையில்,மெய்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பலன்கள் குறைவதுதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் என பழங்குடியின மக்கள் அஞ்சுகின்றனர்.
- இதை எதிர்த்து கடந்த மே 3-ஆம் தேதி சுராசந்த்பூரில் பழங்குடியினர் பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் மிகப்பெரிய மோதலாக வெடித்தது. இந்த கலவரம் காரணமாக 1 மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து வருகிறது.
- கலவரத்தில் மெய்தேயி, குக்கி என இரு தரப்பும் வன்முறைக்கு ஆளாகி இடம்பெயர்ந்திருந்தாலும், பழங்குடியினர் அத்தோடு கிறித்தவர்கள் என்பதால் குக்கி மக்களே பெருமளவு வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
- இந்த கலவரத்தில் இதுவரை 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோவில்கள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று கூடவுள்ளது. அனைத்து கட்சிகளிடமும் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
சர்வதேசம் :-

- பிரதமர் மோடி, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று எகிப்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அரசு முறை பயணமாக ஜூன் 21ஆம் தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார்.
- எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் எகிப்துக்கு பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அந்நாட்டுக்கு இந்திய பிரதமா் பயணம் மேற்கொள்வது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
- தனது பயணத்தின்போது எகிப்து உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் அவா், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கவுள்ளாா். எகிப்தில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரையும் அவா் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
- முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து இந்திய வீரா்கள் போரிட்டனா். அந்தப் போரில் உயிா்த் தியாகம் செய்த சுமாா் 4,000 இந்திய வீரா்களின் நினைவாக எகிப்து தலைநகா் கெய்ரோவில் ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போா் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தின்போது அந்த நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளாா்.
தமிழ்நாடு :-

- சென்னை கிண்டியில், தொழில் மற்றும் வா்த்தக சங்கக் கூட்டமைப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து தமிழ்நாடு உயா்கல்வி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் சிறந்த மாநில பல்கலைக்கழகமாக தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்த விருதை பால்வளத்துறை அமைச்சா் டி. மனோ தங்கராஜ் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கா்னல் நா.சு.சந்தோஷ் குமாருக்கு வழங்கினாா்.
முக்கிய குறிப்பு
- 1997-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
விருதுகள் :-

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் எழுத்தாளர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது
- தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் எழுதிய கீழடியை கதைக்களமாய்க் கொண்ட ‘ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் யுவ சாகித்ய புரஸ்கார் விருது
- 2023-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- யுவ புராஸ்கர் விருது இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது.
சாகித்ய அகாடமி பற்றிய குறிப்புகள்
- இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - மார்ச் 12,1954
- தலைமையகம் - டெல்லி
- அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் - 24(அரசியலமைப்பின் 8 ஆம் அட்டவணையில் உள்ள 22 மொழிகள் + ராஜஸ்தானி + ஆங்கிலம்)
- சாகித்ய அகாடமியால் வழங்கப்படும் விருதுகள் – 5(முதன்மை விருது, பாஷா சம்மன் விருது,சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது,பால் சாகித்திய புரஷ்கார் விருது,யுவ புரஷ்கார் விருது).
- சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ் எழுத்தாளர் - ரா.பி.சேதுப்பிள்ளை (1955 இல் ‘தமிழ் இன்பம்’ என்ற கட்டுரை தொகுப்பிற்காக)
Tags:
Current Affairs