போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 21-06-2023

 போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  21-06-2023


தேசியம் :-


Card image cap

  • இதற்காக சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக அரசுதனியார் பங்களிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமையவுள்ளது. ரூ.3,411 கோடி செலவில் விமான நிலையம் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதுதொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறையும் விமான போக்குவரத்துத் துறையும் ஏற்கெனவே முதல்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது. இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) அனுமதி வழங்கியுள்ளது

தமிழ் நாடு :-


Card image cap

  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டுதிமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  • இதையொட்டி,திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
  • அங்கு அமைக்கப்பட்ட முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.
  • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
  • திருவாரூரின் சிறப்பை குறிக்கும் வகையில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 7000 சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கலைஞர் சிலைமுத்துவேலர் நூலகம்கலைஞரின் நினைவுகளை போற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த வளாகத்தில் திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

விருதுகள் :-


Card image cap

  • இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது.
  • அவரது இலக்கிய பணிக்காகவும்உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும் இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சல்மான் ருஷ்டிஇலக்கிய புதுமைநகைச்சுவைஅறிவுக்கூர்மை ஆகியவற்றுடன் எழுதி வருவதாக விருது நடுவர் குழு கூறியுள்ளது.
  • அக்டோபர் 22-ஆம் தேதிபிராங்க்பர்ட் நகரில் நடக்கும் விழாவில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
  • 1950-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பரிசு25 ஆயிரம் யூரோ (ரூ.22 லட்சத்து 25 ஆயிரம்) பரிசுத்தொகை கொண்டது.


நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-


Card image cap

  • இந்திய ரிசா்வ் வங்கி தலைமைப் பொறுப்பில் ஆளுநரைத் தவிர மேலும், 4 துணை ஆளுநா்கள் பணியாற்றி வருகின்றனா்.
  • அவா்களில் இரு துணை ஆளுநா்கள் மத்திய அரசின் அதிகாரிகளில் இருந்து நியமிக்கப்படுவா். வா்த்தக வங்கிசாா் நிா்வாகிகளில் இருந்து ஒரு துணை ஆளுநரும்பொருளாதார நிபுணத்துவம் பெற்றவா் ஒரு துணை ஆளுநராகவும் நியமிக்கப்படுவா்.
  • வா்த்தக வங்கிசாா் நிா்வாகிப் பிரிவில் இருந்து துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயினின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்தின் கும்பகோணத்தைச் சோ்ந்தவரும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) நிா்வாக இயக்குநருமான சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு  நியமித்ததுள்ளது.
  • இவர் RBI துணை ஆளுநராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் நீடிப்பாா்.

ரிசர்வ் வங்கி - முக்கிய குறிப்புகள்

  • நிறுவப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 1,1935 (1934-ஆம் ஆண்டு சட்ட விதிப்படி)
  • ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
  • தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு - 1937
  • தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு – ஜனவரி 1, 1949.
  • இந்திய ரிசர்வ் வங்கி உருவாக முக்கிய காரணமாக இருந்த அம்பேத்கரின் புத்தகம் - `இந்திய ரூபாய் - பிரச்னைகள்தீர்வுகள்'
  • மைய வங்கியை 'வங்கிகளின் வங்கி என கூறிய பொருளாதார வல்லுநர் - பி.ஏ. சாமுவேல்சன்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் - ஆஸ்போர்ன் ஸ்மித்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர்(25-வது ஆளுநர்) - சக்திகாந்த தாஸ்

விளையாட்டு செய்திகள் :-


Card image cap

  • சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வருகின்றன.
  • இதில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கீதாஞ்சலி நாக்வேகர் தங்கப் பதக்கம் வென்றார். இவர்கோவா மாநிலத்தை சேர்ந்தவர்.
  • ஆடவருக்கான பளுதூக்குதலில் இந்திய வீரர் விஷால் 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.16 வயதான விஷால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


முக்கிய நாட்கள் :-


Card image cap
  • யோகாவின் முக்கியத்துவத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதமாக சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படிஇந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 180 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
  • இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் கருப்பொருளாக 'வசுதைவ குடும்பகத்துக்கான யோகம்'('Yoga for Vasudhaiva Kutumbakam') என குறிப்பிடப்பட்டுள்ளது. 'இது ஒரு பூமிஒரு குடும்பம்ஒரு எதிர்காலம்' என்பதை குறிப்பிடும் விதமாக அமைந்துள்ளது.

யோகா தினம் உருவான வரலாறு

 

  • பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார்.
  • சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது.
  • 2015 ஆம் ஆண்டிலிருந்துசர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்

  • யுஜ்(Yuj) என்ற வார்த்தையிலிருந்தே யோகா என்ற வார்த்தை மறுவி வந்துள்ளது.
  • 'யோகம்என்றால் ஒருங்கிணைத்தல், 'ஆசனம்என்றால் உடலை அமர்த்தும் நிலை என அர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
  • நவீன யோகாவின் தந்தை’ எனப் புகழப்படுபவர்- திருமலை கிருஷ்ணமாச்சார்யா


Card image cap
  • இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கவுரவிக்கும் வகையில்உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 1982 இல் பிரெஞ்சு கலாச்சார அமைச்சரான ஜாக் லாங்இசை தினத்தை கொண்டாடும் யோசனையை உருவாக்கினார்.
  • முதல் உலக இசை தின கொண்டாட்டம் 1982ஆம் ஆண்டு பாரிஸில் நடந்தது.
  • 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: Music on the intersections”. சமூகத்தின் கடைக்கோடி பிரிவுகளுக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதே இதன் மையப்பொருளாகும்


Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post