போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 27-06-2023

போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய  நடப்பு நிகழ்வுகள்  27-06-2023


தேசியம் :-


Card image cap

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி காமலாபதி ரயில் நிலையத்தில் ஐந்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • மும்பை-கோவாபெங்களூரு-ஹூப்ளிபாட்னா-ராஞ்சிபோபால்-இந்தூர்போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
  • ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த ரயில்கள் இணைந்தால்நாட்டின் மொத்த வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.

முக்கிய குறிப்புகள்

  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களைரயில்வே அமைச்சகம் 2019-இல் அறிமுகம் செய்தது.
  • வந்தே பாரத்தின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் பிப்ரவரி 15,2019-இல் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் 14வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 8- ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • 2024 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.



தமிழ்நாடு :-


Card image cap
  • "தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது" என்று “சிற்பி” திட்டத்தின் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • இவ்விழாவில் சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவமாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவாழ்த்தினார்.

சிற்பி திட்டம் என்றால் என்ன?

  • சிற்பி என்பதற்கு Students in Responsible Police Initiatives (SIRPI) என்பதுதான் பொருள்.
  • இத்திட்டம் சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்டது. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வடிவமைத்தார்.
  • இத்திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.
  • இதனை செப்டம்பர் 14,2022-இல் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • காவல்துறையுடன் மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து அவர்களை சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயமாக மாற்றுவதுபயங்கரவாதம்வகுப்புவாதம்போதை பழக்கம்குடிப்பழக்கத்துக்கு எதிரான மாணவர்களாக உருவாக்குவதுஇயற்கையை நேசித்து பாதுகாப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • மொத்தத்தில் கல்விஒழுக்கம்விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும்.
  • இதற்காக சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும்  தலா 50 மாணவர்கள் சுய விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டனர்.
  • இத்திட்டத்தின்கீழ்,ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி முன்னிலையில் சிற்பி மாணவமாணவிகள் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீஸ் அதிகாரிகள்நிபுணர்கள் நடத்துவார்கள்.
  • தற்போது சிற்பி திட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 8-ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்கள், 2,236 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Card image cap
  • மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-இல் திறந்து வைக்கிறார்.
  • இதன் கட்டிடத்திற்காக ரூ.99 கோடியும்நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடியும்தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம்தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.
  • இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், செய்திநாளிதழ் சேமிப்புநூல் கட்டும் பிரிவு அமைகின்றன.
  • தரை தளத்தில் வரவேற்பு அரங்கம்தமிழர் பண்பாடுஅறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம்மாநாட்டு கூடம்மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைகின்றன.
  • முதல் தளத்தில் கலைஞர் பிரிவுகுழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவுகுழந்தைகளுக்கான நூலகம்,அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.
  • 2-வது தளத்தில் தமிழ் நூல்கள்பிரிவு மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள்கட்டுரைகள்அரசியல்இலக்கியம்வரலாறு புத்தகங்கள்திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.
  • 3-வது தளத்தில் ஆங்கில நூல்கள்ஆராய்ச்சி இதழ்கள்தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன.

 

  • 4-வது தளத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது.
  • 5-வது தளத்தில் அரிய நூல்கள்மின் நூலகம்பல்லூடகம்நூல்கள் பாதுகாத்தல்ஒளிஒலி தொகுப்புகள்காட்சியகம்மின்னுருவாக்கம்பார்வையற்றோருக்கான மின் நூல்ஒலி நூல் ஸ்டுடியோநுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 6-வது தளத்தில் ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு)நூல் பகுப்பாய்வுநூல் பட்டியல் தயாரித்தல்நூலக நிர்வாகம்நூல்கள் கொள்முதல்பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.
  • மேலும் நூலகத்தின் முன்பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது.



இறப்பு :-


Card image cap
  • லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்துதொழில்நுட்ப உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் ஜான் குட்இனஃப்100 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) காலமானார்.
  • கடந்த 2019-ல் வேதியியல் துறையில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்புகள்

  • 1991-இல் சந்தையில் பயன்பாட்டுக்கு வந்தது லித்தியம் அயன் பேட்டரிகள். ஆனால்அதற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டது.
  • அந்த முயற்சியை முதலில் தொடங்கியவர் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம்1970-களின் தொடக்கத்திலேயே இந்த ஆராய்ச்சியில் முனைவர் ஸ்டான்லி விட்டிங்கம் இறங்கினார். முதல்முறையாக செயல்படக்கூடிய லித்தியம் பேட்டரியை வடிவமைத்தவர் இவர்தான்.
  • அவரைத் தொடர்ந்து முனைவர் குட்இனஃப்லித்தியம் பேட்டரியின் அபரிமிதமான ஆற்றலை மென்மேலும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.


முக்கிய நாட்கள் :-



Card image cap
  • அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியநிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27 ஆம் நாள் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவன(MSME) தினமாகக் கொண்டாடுகிறது.
  • இத்தினம் 2017 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் - Future-ready MSMEs for India@100."








Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post