போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 28-06-2023
தேசியம் :-

- வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்ட 10 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், அந்த இடங்களுக்கான தோ்தல் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை பற்றிய குறிப்புகள்
- மொத்த உறுப்பினர்கள் : 250 மிகாமல் இருத்தல் வேண்டும்
- தற்போதுள்ள உறுப்பினர்கள் : 245
- இதில் 233 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- நியமன உறுப்பினர்கள் : 12 ( மத்திய அரசின் பரிந்துரையின்படி கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என்று துறைசார் சாதனையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்)
- மாநிலங்களவையின் தலைவராகச்செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்(ஜக்தீப் தன்கர்)
- ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
- மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட மாநிலம் - உத்திர பிரதேசம்(31)
- மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் எண்ணிக்கை - 18
- மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கொண்ட யூனியன் பிரதேசம் - டெல்லி(3) மற்றும் புதுச்சேரி(1)
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
- அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்
- மாநிலங்களவை துணைத்தலைவர் - ஹரிவன்ஸ் நாராயணன் சிங்
- மாநிலங்களவை அவைத் தலைவர் - பியூஷ் கோயல்
- மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் - மல்லிகார்ஜுன கார்கே
- மாநிலங்களவை செயலகத்தின் நிர்வாகத் தலைவர் - பிரமோத் சந்திர மோடி
- மாநிலங்களவையில் அதிகமுறை உறுப்பினராய் இருந்தவர் - டாக்டர் மகேந்திர பிரசாத்(7 முறை)
- மாநிலங்களவையில் அதிகமுறை உறுப்பினராய் இருந்த பெண் - டாக்டர். நஜ்மா ஏ. ஹெப்துல்லா(6 முறை)

- ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் மண்டலத்தில் உள்ள இனிகாபள்ளி கிராமத்தில் ஆய்வு செய்தபோது 9-ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த ஜெயின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கிடைத்ததுள்ளது.
- மேலும், இரண்டு தூண்களில் ஒன்று கிரானைட், மற்றொன்று கருப்பு பாசால்ட் ஆகும்.
- ஆதிநாத், நெமிநாத், பார்ஸ்வநாதா மற்றும் வர்தமண மகாவீர் ஆகியோர் தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- மேலும், கல்வெட்டுகளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவை புரிந்துகொள்ள இயலாத வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
- நான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் தெலங்கானாவில் சமண மதம் நடைமுறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

- ‘இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு 59 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் சாலை கட்டமைப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது’ என்று மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
- உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய சாலை கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
- இந்தியாவில் மொத்த சாலைகளின் நீளம் 1,45,240 கி.மீ. ஆகும்.
- சுங்க வரி மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த 2013-14ஆம் ஆண்டில் ரூ.4,770 கோடியாக இருந்தது. இப்போது, ரூ.41,342 கோடியாக உயா்ந்துள்ளது.
தமிழ்நாடு :-

- சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தின்கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
- செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262 ஏக்கர் பரப்பளவில் ரூ.153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார்.
- குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின்கீழ், முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கி ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான FaMe TN அமைப்புக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
- இந்த விழாவில் ரூ.1,723 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. இதன்மூலம் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1970
- தமிழகத்தில் தற்போதுள்ள மொத்த தொழிற்பேட்டைகளின் எண்ணிகை - 127

- திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், நம்பியாற்றின் தென்கரையில் உள்ள துலுக்கர்பட்டி அகழாய்வில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு கிடைத்துள்ளது.
- இங்கு அகழாய்வுப் பணி 2021-ஆம் ஆண்டு தொடங்கியது.
- முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
- மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளிநாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருந்தன.
- இது பொருநை நதிக் கரையில் நிலவிய ஆதிச்சநல்லூா் பண்பாட்டின் காலத்தை நிலை நிறுத்துவதற்கு முக்கியச் சான்றாக உள்ளது.
- துலுக்கா்பட்டி அகழாய்வு இயக்குநா் – வசந்தகுமாா்.

- இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மைய மையத்தில், பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது(Centre Point of World’sMagnetic Equator).
- பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவதுசரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது.
- மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
- விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 =21,600).
- இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை (நரம்புகள்) குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத்தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
- “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக சற்று சாய்ந்து அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி”என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது.
- இங்கு “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது.
- பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
- பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
- சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று அழைக்கபடுகின்றது
குறிப்பு -இறைவனை நேரடியாக தரிசிக்கக் கூடிய அமைப்பில் கட்டப்பட்டுள்ள இடம் தான் கனகசபை. தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் நின்று இறைவனை வழிபடுவதற்கான இடம் தான் அது.
Tags:
Current Affairs