போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 29-06-2023
தேசியம் :-

- தாய் பூமியின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு, உருவாக்கம், ஊட்டச்சத்து மற்றும் மேம்படுத்தலுக்கான, ‘பிரதமர் பிரணாம்'(PM-PRANAM) என்ற திட்டத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது அறிவித்தார்.
- PM-PRANAM stands for PM Programme for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth.
- தற்போது ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, மாற்று உரங்களை ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும், ‘பிரதமர் பிரணாம்’ திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உதாரணத்துக்கு, 10 லட்சம் டன் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் இடத்தில், அதை 3 லட்சம் டன்னாக குறைக்கும்போது, மத்திய அரசுக்கு மானியங்களில் 3,000 கோடி ரூபாய் மிச்சமாகிறது. அவ்வாறு மிச்சமாகும் தொகையில், 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.
- மேலும், ரசாயன உரங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் 2025 மார்ச் வரை அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடர்கிறது. இதற்காக, 3.68 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அதோடு, பிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில், இயற்கை உரங்களுக்கான மானியங்களுக்கு 1,451 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு :-

- பறவைகள் இனங்களை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்துவதற்காக தமிழக அரசு மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
- இதன் தலைவராக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் செயல்படுவார்.
ஆணையத்தின் பணிகள்
- அனைத்து பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியும், முன்னேற்றமும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசிக்கும் இடங்களுக்கான வரைபடங்களை தயாரிக்க வேண்டும்.
- பறவைகள் சரணாலயத்தை புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மறு ஆய்வு செய்தல், இந்த பணிகளுக்காக உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தி கொள்வது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும்.
தமிழகத்திலுள்ள பறவைகள் சரணாலயத்தின் பட்டியல்
- தமிழகத்தில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் 14 ராம்சார் தளமாக இருக்கின்றன. அவை,
1.வேடந்தாங்கல் - காஞ்சிபுரம்
2. கரிக்கிலி - காஞ்சிபுரம்
3. வேட்டங்குடி - சிவகங்கை
4. கஞ்சிரன் குளம் - ராமநாதபுரம்
5. சித்திரன்குடி - ராமநாதபுரம்
6. உதயமார்தாண்டபுரம் - திருவாரூர்
7.வடுவூர் - திருவாரூர்
8. கூந்தன்குளம் - திருநெல்வேலி
9.கரைவெட்டி - அரியலூர்
10. வெள்ளோடு - ஈரோடு
11. மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் - ராமநாதபுரம்
12. தீர்த்தங்கல் - ராமநாதபுரம்
13. சக்கரக்கோட்டை - ராமநாதபுரம்
14. ஊசுடு ஏரி - விழுப்புரம்
15. பழவேற்காடு ஏரி - திருவள்ளூர்
16.கழுவெளி சதுப்பு நிலம் - விழுப்புரம்
17. நஞ்சராயன் ஏரி - திருப்பூர்

- நாட்டிலேயே முதல்முறையாக, வேளாண்மை - உழவர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மண் வளம்’ எனும் இணைய முகப்பை (http://tnagriculture.in/mannvalam) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், மண் வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண் வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.
- விவசாயிகள் கணினி, கைபேசி மூலமாக இந்த இணையதளத்தை அணுகலாம். நாட்டுக்கே முன்னோடியாக இந்த வசதி அமைந்துள்ளது.

- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
- இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 3-ஆம்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இதில், சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இவை, 11-ஆம்நூற்றாண்டில் தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் இருப்பதாகவும், மேலும், இதுபோன்ற பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-

- தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுகிறார்.
- தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
- சிவதாஸ் மீனா ஏற்கெனவே அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு நிர்வாக அதிகாரி, தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் மீனா, 1989-ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
விளையாட்டு செய்திகள் :-

- தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது.
- இதன் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- கடைசியாக 2017-18 ஆம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
முக்கிய நாட்கள் :-

- புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசண்டா சந்திர மஹாலனோபிஸின் சீரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 29- ஆம் தேதி ஆண்டுதோறும் புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அன்றாட வாழ்வில், புள்ளியியல் பயன்பாட்டைப் பிரபலப்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதில், புள்ளியியல் எப்படி உதவுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் புள்ளியியல் தினத்தை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
- 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் : ‘நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான மாநிலம் மற்றும் தேசிய காரணி கட்டமைப்பை சீரமைத்தல்’
முக்கிய குறிப்புகள்
- இந்தியப் புள்ளியியலின் தந்தை - மஹலனோபிஸ்
- இந்திய புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர் - மஹலனோபிஸ்
- இந்திய புள்ளியியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1931
- புள்ளிவிவரணத் துறைக்காகவே 1933இல் ‘சங்கியா’ என்ற பெயரில் தனி இதழைக் கொண்டுவந்தவர் - மஹலானோபிஸ்.
- 1950-இல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (NSS) அமைப்பு, 1951-இல் மத்திய புள்ளியியல் நிறுவன அமைப்பு ஆகியவற்றின் உருவாக்கத்தில் மஹலானோபிஸ் பெரும் பங்கு வகித்தார்
- மஹலனோபிஸ் தலைமையிலான ‘இந்தியப் புள்ளியியல் நிறுவனம்’ இந்தியாவின் முதல் கணினியை 1955-லும், இரண்டாவது கணினியை 1959-லும் வாங்கியது.
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்(1956-1961) மகாலனோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்டது.
- உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

- சர்வதேச வெப்ப மண்டல தினம் ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வு வெப்ப மண்டலத்தின் முக்கியத்துவத்தையும், இந்தப் பிராந்தியங்களில் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது.
- இத்தினம் 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- வெப்பமண்டலப் பகுதி என் பது புவியில் உள்ள கடகரேகை(23° 27 வடக்கு) மற்றும் மகரரேகை(23° 27 தெற்கு) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி.
இராணுவம் :-

- இந்திய விமானப்படைக்கு தேவையான இலகு ரக போர் விமானத்தை(LCA) ‘தேஜஸ்’ என்ற பெயரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம்(HAL) தயாரிக்கிறது.
- ஏற்கெனவே தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
- தற்போது தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் அதி நவீன ஏவியானிக்ஸ் கருவிகள் மற்றும் அதிக ஆயுதங்கள் கொண்டு செல்ல முடியும்.
- இதற்கு தேவையான இன்ஜினை அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் HAL நிறுவனம் ஜூன் 22-ஆம் தேதி கையெழுத்திட்டது. இதற்கான அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கபயணத்தின்போது வெளியிடப்பட்டது.
- இதற்கு முன்பு இந்திய போர் விமானங்களுக்கான இன்ஜின் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது.
- தற்போது தேஜஸ் 2 ரக போர் விமானத்துக்கு அமெரிக்க இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இன்னும் 18 மாதங்களில்(2025-இல்), தேஜஸ் மார்க் 2 ரக முதல் விமானம் தயாராகிவிடும் எனவும், இது ரஃபேல் போர் விமானத்தை விட சிறந்ததாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:
Current Affairs