போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 19-06-2023
தேசியம் :-

- Research and Analysis Wing (RAW)- வின் தற்போதைய செயலாளரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, RAW-வின் அடுத்த செயலாளராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இதையடுத்து, ஜூலை 1-ஆம் தேதி RAW-வின் செயலாளராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார். பதவி ஏற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராவின் செயலாளராக தொடர்வார்.
RAW பற்றிய குறிப்புகள்
- 1968 வரை இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத் தகவல் பணியை Intelligence Bureau (IB) எனப்படும் புலனாய்வுப் பணியகம் கையாண்டது.
- 1962 இந்திய சீன போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போர்க்களைப் பற்றி முன்கூட்டி துப்பறிந்து இந்திய அரசுக்கு செய்தி தெரிவிக்க இயலாமல் போயிற்று.
- எனவே புலனாய்வுப் பணியகத்திற்கு(IB) உள்நாட்டில் உளவு பணி மேற்கொள்ளும் அதிகாரம் மட்டும் வழங்கப்பட்டு, வெளிநாடுகளில் உள்வுப் பணி மேற்கொள்வதற்கு Research and Analysis Wing (RAW) அமைப்பு நிறுவப்பட்டடது.
- 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பிரதமர் அலுவலகத்தை முகவரியாக கொண்டு செயல்படுகிறது.
- வெளிநாட்டு உறவு, தீவிரவாதம் ஆகியவற்றை கவனித்துக்கொள்வது RAW அமைப்பின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், இந்திய அணுசக்தி பாதுகாப்புக்கான தனிப்பொறுப்பையும் RAW பெற்றுள்ளது.
- இதன் தலைமை அதிகாரியை செயலாளர் என்று அழைப்பார்கள்.
- இவருக்குக் கீழ் சிறப்புச்செயலாளர், கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு, பாதுகாப்புப்பிரிவு தலைமை இயக்குநர் இருப்பார்கள்.
- RAW-வின் முதல் தலைவர் - ராமேஷ்வர் நாத் காவ் (1968-1977)
சர்வதேசம்:-

- உக்ரைன் போரால் கடந்த ஆண்டு கடும் உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்ட 18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று வேளாண் மேம்பாட்டுக்கான ஐ.நா.வின் வேளாண் மேம்பாட்டு சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
- மேலும், சிறுதானியங்கள் பயன்பாட்டுக்கு புத்துயிரூட்ட இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மேம்பாட்டுக்கான சா்வதேச நிதியம்(IFAD) பற்றிய முக்கிய குறிப்புகள்
- ஐ.நா.வின் சிறப்பு முகமையாகும். இது, வறுமை, பட்டினி மற்றும் உணவு பாதுகாப்பின்மையை எதிா்கொள்வதில், ஏழை நாடுகளுக்கு நிதிரீதியில் உதவுகிறது.
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1977
- தலைவர் - அல்வரோ லாரியோ
தமிழ்நாடு:-

- சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அருணா IAS நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
சென்னை பற்றிய குறிப்புகள்
- சென்னை உதயமான நாள் - ஆகஸ்டு 22, 1639
- சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு- செப்டம்பர் 29,1688 (இந்தியாவின் முதல் மாநகராட்சி)
- 'மெட்ராஸ்' அதிகாரபூர்வமாக 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - ஜூலை 17,1996
- தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் - சென்னை(67,48,026)
- சென்னை மக்கள் தொகை அடர்த்தி - 26553 நபர்கள்/சதுர கி.மீ.
- பாலின விகிதம் - 989
- எழுத்தறிவு விகிதம் - 90.2%
- சிறப்பு பெயர்கள் - தென்னிந்தியாவின் நுழைவாயில், ஆசியாவின் டெட்ராய்ட், இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்,இந்தியாவின் வங்கித் தலைநகரம்
விருதுகள்:-

தேசிய நீர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்,இவ்விருதினை 11 பிரிவுகளில் 41 பேருக்கு வழங்கினார்.
சிறந்த மாநிலம்
1. மத்திய பிரதேசம்
2. ஒடிஷா
3. பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம்
சிறந்த மாவட்டம்
1.கஞ்சம் மாவட்டம், ஒடிசா
2.நாமக்கல், தமிழ்நாடு
3.அடிலாபாத் மாவட்டம், தெலுங்கானா
பிற விருதுகள்
- சிறந்த கிராமப் பஞ்சாயத்திற்கான விருது - தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கூத்தகுடம் மாவட்டத்தில் உள்ள ஜகநாதபுரம் கிராமம்
- சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான விருது - சண்டிகர் மாநகராட்சி
- சிறந்த பள்ளிக்கான விருது - குஜராத் மாநிலம் மெஹ்சனாவில் உள்ள ஜாமியத்புரா தொடக்கப்பள்ளி
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள் :-

- உலக ஐ.நா. கூட்டமைப்புகள் சம்மேளன துணைத் தலைவராக இந்தியரான சுரேஷ் ஸ்ரீவாஸ்தவா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
முக்கிய குறிப்புகள்
- உலக ஐ.நா. கூட்டமைப்புகள் சம்மேளனம்(World Federation of United Nations Associations) என்பது உலகளாவிய தன்னாா்வ அமைப்பாகும். இது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஐ.நா. கூட்டமைப்புகள் மற்றும் அவற்றின் ஆயிரக்கணக்கான உறுப்பினா்களை பிரதிநிதித்துவப்படுத்தி, ஒருங்கிணைக்கும் அமைப்பாகும்.
- தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 2, 1946
- தலைமையகம் - நியூயார்க்
- பொது செயலாளர் - போனியன் கோல்முகம்மதி
விளையாட்டுச் செய்திகள் :-

- இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடரின் 3-வது சீசன் நடந்தது. இதில், இந்தியா, மங்கோலியா, லெபனான், வனுவாட்டு ஆகிய 4 அணிகள் கலந்துகொண்டன.
- இந்த வெற்றியின் மூலம் இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரில் 2-வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018-இல் நடந்த முதல் சீசனில் கென்யாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
முக்கிய நாட்கள் :-

- மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்(International Day for the Elimination of Sexual Violence in Conflict) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது .
- ஜூன் 19, 2015 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஜூன் 19, மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகக் குறிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் அவசியத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களைக் கெளரவப்படுத்தவும், தைரியமாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இராணுவம் :-

- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘தபஸ்’ ஆளில்லா விமானத்தை, தரைகட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பல் கட்டுப்பாட்டில் சுமார் மூன்றரை மணி நேரம் இயக்கி ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (DRDO) சாதனை படைத்துள்ளது.
- ராணுவ பயன்பாட்டுக்காக தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை DRDO உருவாக்கியது. இதை தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் போர்க்கப்பலின் கட்டுப்பாட்டில் பறக்கவிடும் சோதனையை DRDO கடந்த 16-ம் தேதி மேற்கொண்டது.
- தபஸ் ஆளில்லா விமானம், எஸ்ஏஆர் என்ற ரேடாருடன் 30 ஆயிரம் அடி உயரத்தில், 24 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் நடுவானில் இருந்து 250 கி.மீ தூர பகுதியை கண்காணிக்க முடியும்.
- பாதுகாப்பு படைகளின் உளவு மற்றும் கண்காணிப்பு பணிக்காக தபஸ் ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டது.
- இந்த விமானம் இஸ்ரேலின் ஹெரான் ஆளில்லா விமானத்துக்கு நிகரானது என DRDO தெரிவித்துள்ளது.
Tags:
Current Affairs