இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் 05-06-2023

         

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்  05-06-2023


தேசியம் :-

            Card image cap

  • தெலங்கானா மாநிலம்சித்திபேட்டா மாவட்டத்தில் உள்ள புருகுபல்லியில் சர்விதா மெடோஸ் எனும் கட்டுமான நிறுவனம் அப்சுஜா இன்ஃப்ராடெக் மற்றும் சிம்ப்ளி ஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 3,800 சதுர அடியில் இந்த முப்பரிமாண பிரின்டட் கோயிலை கட்ட திட்டமிட்டது.
  • மோதக வடிவில் விநாயகர் கோயில்சதுர வடிவில் சிவபெருமான் கோயில்தாமரை வடிவில் பார்வதி கோயில் என மூன்று பகுதிகள் இந்த முப்பரிமாண கோயிலில் இடம்பெறுகின்றன.
  • இக்கோயில் கட்டிமுடித்தால்இதுதான் இந்தியாவிலேயே முதல் முப்பரிமாண கோயிலாக இருக்கும் என்று சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்
  •  அதிகாரி துருவ் காந்தி தெரிவித்தார்

Card image cap
  • இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான தரவரிசையினை National Institute Ranking Framework (NIRF) பட்டியலாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. அனைத்துவித கல்வி செயல்பாடுகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சென்னை IIT உள்ளது.
  • மேலும்இந்தியாவில் தலைச் சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரி 3-ஆம் இடம் பிடித்துள்ளது. சென்னை லயோலா கல்லூரி 7-ஆம் இடம் பிடித்துள்ளது.
  • மத்திய மனிவளத்துறை ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்லூரிகளின் உள்கட்டமைப்புமாணவர்கள் தேர்ச்சி விகிதம்பெறும் மதிப்பெண்கள்மாணவர்களின் ஆராய்ச்சி திறன்ஆசிரியர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

Card image cap
  • ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு(ATP) ஒன்றை உருவாக்கி அதற்கு "கவாச்" என்று பெயரிட்டுள்ளது.
  • கவாச் என்ற ஹிந்தி மொழி சொல்லிற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள்.
  • கவச் தொழில்நுட்பத்தை Research Designs and Standards Organisation (RDSO) என்ற ஆராய்ச்சி அமைப்பு, 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ரூ.16.88 கோடி செலவில் உருவாக்கியது.
  • முதன்முதலில் தெற்கு சென்ட்ரல் ரயில்வேயில் லிங்கம்பல்லி - விகாராபாத் - வாடி மற்றும் விக்காராபாத் - பிதார் பகுதிகளில் 250 கிலோமீட்டர் தூரத்திற்கு கவாச் தொழில்நுட்பம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.

கவாச் முக்கிய அம்சங்கள்

  • கவாச்ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு ரயில்கள் ஒரு பாதையில் வரும்போது (Signal Passed at Danger -- SPAD) எனும் சமிக்ஞையை ஏற்படுத்தி ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும்.
  • ஒருவேளை எச்சரிக்கை விடப்பட்டும் கவனக்குறைவாக ரயில் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கத் தவறும் பட்சத்தில்இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தைக் குறைத்து விபத்து ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.
  • பனி மூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் எதிரே ரயில் வந்தால் கூட முன்கூட்டியே இது எச்சரிக்கும்.
  • அதுமட்டுமல்லாமல்அவசரகால சூழ்நிலைகளில் ரயிலைக் கட்டுப்படுத்த SOS அம்சமும் இதில் இருக்கிறது.

தமிழ் நாடு :-

Card image cap
  • உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.
  • இந்த மாநாட்டைதமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டில்தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள்குறிப்புப் புத்தகங்கள்ஆய்வுப் பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டுதமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் – கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-


Card image cap
  • தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளிபள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர் ராமேஸ்வர முருகன்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக இருந்த முனைவர் கண்ணப்பன்தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்த முனைவர் பழனிச்சாமிபள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த குப்புசாமிதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய நாட்கள் :-

Card image cap
  • உலக சுற்றுச்சூழல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் 1973-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள்: ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடி'
  • 2023 உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தும் நாடு - ஐவரி கோஸ்ட்

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சட்டங்கள்

  • வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972- காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
  • நீர்(நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 -அனைத்து வகையான ஆறுகள்ஏரிகள்குளங்களை மீட்டு பராமரித்தல்
  • வன (பாதுகாப்பு) சட்டம், 1980 - காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல்.
  • காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 - காற்றின் தரத்தை மேம்படுத்துவதுகாற்றின் மாசுபாட்டை தடுத்தல்.
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்.
  • பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 - பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல்.
  • தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம், 2010 - சுற்றுச்சூழல் பாதுகாப்புகாடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post